Forum
சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச்சிக ராசி 2020

Quote from Sri Ramajeyam Muthu on December 24, 2020, 9:09 amவிருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.90/100.
2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
இக்காலகட்டங்களில் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
விருச்சிக ராசிக்கு சனிபகவான் தற்போது 2ம் இடத்தில் இருந்து 3ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
3ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -5ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 11ம்இடத்தையும் பார்ப்பார்.
போடுற வெடிய.
ஒளி பிறந்துவிட்டது .நான் தப்பிக்க வழி பிறந்து விட்டது என்பதை ஒவ்வொரு விருச்சிக ராசிக்காரர்களும் உணரும் நேரம் இது.
உங்க வீட்டு அடியா ?எங்க வீட்டு அடியா? துவைச்சு துவம்சம் பண்ணிருச்சு கடந்த 71/2 வருஷமா.
ஊறவச்ச அடிச்சதுக்கு மட்டுமில்லாம, உலக்கைல வாயில குத்த வேற செஞ்சேல. கெளம்பு முதல்ல.
இனி கண்ணீர் கானல் நீராகும்.தொட்டது துளிர்விடும் .பட்ட மரமும் படரும்.
ஏழரை சனி உங்களை பட்டை தீட்டிய வைரமாக மாற்றியிருக்கும் என்றால் மிகையில்லை.
ஏழரை சனி, இனி அவரவர் வயதுக்கு ஏற்றபடி நன்மைகளைக் கொடுக்கும்.
தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அது வேலையாக இருந்தாலும் சரி. சுய தொழிலாக இருந்தாலும் சரி.
லாபம் பெருகும் .புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறும் . சொந்த தொழில் தொடங்க ஆரம்பிப்பவர்கள் உங்கள் சுய ஜாதகத்தை அனுசரித்து அதற்கேற்றபடி அமைத்துக் கொள்வது நல்லது. வெளிநாடு செல்ல முயல்பவர் தாராளமாக முயற்சிக்கலாம்.
போட்டித் தேர்வு எழுதி தோற்றவர்கள்,தேர்ச்சி பெற்று நிச்சயமாக நல்ல பதவியில் அமர்வார்.
குருபகவானும் ஓரளவு சாதகமான நிலையில் இருப்பதால் பணம் 2021 முழுவதும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும்.
மாணவர்கள் சிலர் மாநில அளவில் ரேங்க் பெறும் நிலை ஏற்படும்.
நல்ல மதிப்பெண்ணுடன் தேறியவர்களுக்கு உடனடியாக கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணி உயர்வு ,ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கப்பெறும்.
பருவ வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும்.
ஒரே வருடத்தில் குவா குவா சத்தமும் கேட்கும்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.
கடன்கள் அடையும். வாராக் கடன்கள் வசூலாகும்.
கடுமையான மன உளைச்சலால் அவதிப்பட்டவர்களுக்கு மருந்தாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.
உடல் நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.
வயதானவர்களை வருத்தி வந்த உடல்நிலை சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கி ,கோர்ட் வாசலில் இருந்து இறங்கி ,குடும்பத்தில் விளக்கேற்றும் நேரமாக அமையும்.
சொல்லியடிக்கும் கில்லி இனி நீங்கள் தான்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்:::
உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.
பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
ஓம் நமசிவாய
விருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.90/100.