Forum

Please or Register to create posts and topics.

சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு ராசி 2020

தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்.45/100.

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.

இக்காலகட்டங்களில் தனுசு ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

தனுசு ராசிக்கு சனிபகவான் தற்போது ஜென்ம சனியாகிய

1ம் இடத்தில் இருந்து விலகி 2ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

2ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -4ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 11ம்இடத்தையும் பார்ப்பார்.

தனுசு ராசிக்கு இது நாள் வரை கடுமையான அவதியைக் கொடுத்த ஜென்ம சனி விலகுவதே ஒரு பெரிய ஆறுதல் தான்.

அதேநேரத்தில் தனுசு ராசிக்கு ஏழரை சனி இன்னும் முழுமையாக விலகவில்லை.

ஜென்ம சனி காலகட்டத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த, தனுசு ராசிக்காரர்களுக்கு இனி விடிவு பிறக்கும்.

ராசியில் இருந்த சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையால், பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்த்ததால் இந்த காலகட்டங்களில் தொழிலில் கடுமையான முடக்கம் ஏற்பட்டிருக்கும்.

தொழில் நடந்தால்தானே இலாபம். லாபம் கிடைத்தால் தானே மற்ற விஷயங்களை சாதிக்க முடியும்.

அதே நேரத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி இருப்பதால் இக்காலகட்டங்களில் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

குடும்பத்திலும் சிறு சிறு விஷயங்களுக்காக கோபப்பட்டு எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

நமக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்ய வேண்டாம். சனி வாக்கு ஸ்தானத்தில் உள்ளதால் கலகத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

சிலருக்கு சொத்து பிரச்சனையும், சொந்த வீட்டிலிருந்து விலகி வாடகை வீட்டிற்கு செல்லும் நிலைமையும் ஏற்படும்.

உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

சனி ஏழாம் பார்வையால் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு தாங்கமுடியாத மன அழுத்தம் , விபத்து ,கோர்ட் கேஸ் என நடக்கும் காலம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தியானம் கடைபிடிப்பது நல்லது.

குறிப்பாக அடுத்தவர்களுக்கு ஜாமீன் போட வேண்டாம்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனி இன்னும் உங்களை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதால் எச்சரிக்கை தேவை.

பாதச் சனி நடப்பதால் சிலருக்கு கால் மூட்டு வலி ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்வோர் கவனமுடன் வண்டியை இயக்குவது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம். படிப்பிற்கேற்ற வேலை கிடைத்தாலும், வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

குடும்ப பெண்கள் கோள் மூட்டுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

வாக்கில் சனி .வாயை கிழித்துவிடும். கவனம்.

எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் தனஸ்தானத்தில் சனி இருப்பதால் சேமிக்க முடியாது.

வரவு வந்தால் ,தேவையற்ற செலவுகளும் உடனே தானாக தேடி வரும்.

திருமணம் நடந்தாலும் இனம்புரியாத ஏதோ ஒரு கவலை கணவன்-மனைவிக்குள் சூளும்.

குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பம் அமைய தடை உண்டாகும்.

காதல் செய்வோர் கவனமுடனிருப்பது நல்லது.

பணியில் இருப்போர் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சொந்த தொழில் செய்வது செய்பவர்கள் புதிதாக கிளையை ஆரம்பிக்க வேண்டாம் .அதுபோல் புது தொழிலும் புதிய முதலீட்டில் தொடங்க வேண்டாம்.

ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில், ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து களத்திர தோஷம் இருந்தால் இக்காலகட்டங்களில் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இல்லை என்றால் விவாகரத்து போன்ற விஷயங்கள் ஏற்படலாம்.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

போங்க தம்பி .கடந்த 5 வருஷமா ஊருக்குள்ள நாங்க அடி வாங்காத இடமே கிடையாது. எவ்வளவுதான் அடிச்சாலும் ஓடவும் மாட்டோம். ஒளியவும் மாட்டோம் என்ற நிலை இனி மாறப்போகிறது .காரணம்

கடந்த காலகட்டங்களில் ஜென்ம சனி. விரய குரு ,ஜென்ம குரு என்று கடினமான பாதையை கடந்து வந்த உங்களுக்கு இனி மேல் வாழ்க்கை விடிய தொடங்கும் .

தற்போதைய கோட்சாரத்தில் குரு 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் இருப்பதால் சனியின் கெடுபலன்கள் பாதியாக குறைந்துவிடும்.

கடந்தகால அமைப்பில் பண வரவு தடுமாறிய உங்களுக்கு தற்போதைய கோட்சார அமைப்பில் குரு நல்ல நிலையில் இருப்பதால் பணம் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு வழியில் கிடைத்துவிடும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:::

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More