ஜோதிடத்தில் இயற்கையான எளிய பரிகாரம்

இப்பிரபஞ்சத்தில் மனிதன் ஏதேனும் ஒரு விஷயத்தால் பாதிக்கப்பபடுகிறான். உடனே பரிகாரத்தை நோக்கி பயணிக்கிறான்.

இயற்கையாகவே சில பரிகாரங்களை பார்ப்போம்.

நாம் உயிர் வாழ மூன்று நேரம் சாப்பிடுகிறோம்.

கிரகங்களின் கதிர்வீச்சு போதிய அளவு கிடைக்காமல் Negative energy வெளிப்படும் போது கீழ்கண்ட இயற்கையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் தாக்கம் அதிகமிருக்கும். அதை வைத்தே ஞானிகள் கிழமைகளை பிரித்தனர்.

அந்த நாளிலும் சூரிய உதயத்திலிருந்து முதல் ஒரு மணி நேரம் அந்த நாளின் ஆதிக்கதிற்குரிய கிரகம் பலமாக இருக்கும். இதை ஹோரை என்கிறோம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உணவு சமித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு – சூரியன் – கோதுமை

திங்கள் – சந்திரன் – பச்சரிசி, பால்

செவ்வாய் – துவரம் பருப்பு

புதன் – பச்சைபயிறு

வியாழன் – குரு – கொண்டக் கடலை

வெள்ளி – சுக்ரன் – வெண் மொச்சை

சனி – எள்ளு

ராகு – உளுந்து

கேது – கொள்ளு

மேற்படி நாட்களில் இவைகளை உணவோடு கலந்து பயன்படுத்துவது நன்மை தரும். செலவுமில்லை.

மேற்படி திசைகளில் இதை உணவோடு பயன்படுத்துவது எளிய பரிகாரம்.

முயற்சித்து பார்க்கலாமே.

Blog at WordPress.com.

%d