பிரிந்த தம்பதிகள் விரைவில் ஒன்று சேர சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்

சில குடும்பங்களில் அன்யோன்யமாக இருந்த தம்பதிகள், காலாய் காலத்தின் கட்டாயத்தினால் எலியும் பூனையுமாக மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

இதில் சிலருக்கு தசா சந்திப்பால் இந்த மாதிரியான எதிர்மறை பலன்கள் ஏற்படும்.

இருவருக்கும் சம சனி, ராகு திசை நடப்பது இருவருக்கும் எதிர்மறையான திசைகள் நடப்பது, ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

காலையில் அடித்துக் கொண்டாலும், மாலையில் கட்டிலில் அணைத்துக் கொள்ள வேண்டும்.

கணவன், மனைவி சண்டை சிறு குழந்தை சண்டை போல ஒரு நொடியில் மறந்துவிட வேண்டும்.

ஒரு சிலர் கணவன் மனைவியாக பிரிந்து வாழ முற்றிலும் வாய்ப்பு இருக்காது. ஆனால் ஒரே குடும்பத்தில் இரு உலைகள் (அடுப்புகள்) வைத்து ஊருக்கு கணவன் – மனைவியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அவர்கள் கீழ்காணும் பரிகாரங்களை செய்து வந்தால் விரைவில் கணவன் – மனைவிக்கிடையே உள்ள ஈகோ பிரச்சனை நீங்கி விரைவில் ஒன்று சேர்வதை பார்க்க முடிகிறது.

அசோகவனத்தில் பிரிந்திருந்த ராமனும், சீதையும் ஒன்று சேர அனுமன் உதவியது போல் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

ராம நாமம் ஒலிக்கும் வீடுகளில் குறைவே வராது. மறுமையிலும் மிகப்பெரிய புண்ணியம்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்
புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்
பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா
புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்
ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ

எனும் இந்த மந்திரத்தை தினசரி 11முறை வீதம் ஜபிக்கலாம்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.

துக்கம், ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது.

Blog at WordPress.com.

%d