Tamil Jothidam Tips | Astrology Tips

 Planetary Conjunction for Lightning Strikes

ஒருவரின் ஜாதகத்தில் இராகுபகவான் இலக்கினத்திலிருந்து ஏழாம் ஸ்தானத்தில் கேதுபகவான் செவ்வாய்பகவான் இணைந்து இராகுபகவானை பார்த்தால் இடியினால் ஆபத்து வரும்…. அதுப்போல் கேதுபகவான் இலக்கினத்திலிருந்து இராகுபகவான் செவ்வாய்பகவான் இணைந்து பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு இடிமின்னலால் பாதிக்கப்பட்டோ அல்லது மின்சாரத்தால் பாதிக்கப்பட்டோ உயிருக்குக் தீங்கு வரலாம் இந்த மாதிரியான அமைப்புகள் இருந்து இராகுபகவாநோடோ அல்லது கேதுபகவாநோடோ இலக்கினத்தில் குருபகவான் இணைந்து இருந்தால் ஜாதகரின் வீடு இடிமின்னலால் பாதிப்புக்கள் வரும் .

 

Jothidam Tips:

சூரியபகவானும் சுக்கிரபகவானும் இணைந்தால் நன்மைகள் செய்யக்குடிய சுக்கிரபகவான் அஸ்தங்கம் அடைந்தால் அதனால் அந்த ஜாதகருக்கு பெரிய நன்மைகள் செய்வதில்லை .ஆனால் சூரியபகவானுக்கு பன்னிரண்டாம் ஸ்தானத்தில் சுக்கிரபகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் வாசி யோகம் பலத்தால் நன்மைகள் அந்த ஜாதகருக்கு கிடைக்கும்.

 

 

Blog at WordPress.com.

%d