விளம்பி வருட பலன் கடக ராசி
கடக ராசி (85%)
============
இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சுமாராகவும் அதன் பின் மிகுந்த நல்ல பலனை தர உள்ளார்,
சனி பகவான் இந்தாண்டு முழுவதும் சிறப்பான பலனை தந்து பல பிரச்சினைகளை நல்ல முடிவாக மாற்றி தர உள்ளார்
உங்களுக்கு இந்தாண்டு பொற்காலம் என்றே சொல்லலாம்
💑 திருமணத்துக்கு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவரும் கண்டிப்பாக புரட்டாசி மாதத்துக்கு பிறகு திருமணம் முடிவுறும். திருமணம் தள்ளி கொண்டே போனவர்களுக்கும் புரட்டாசிக்கு பிறகு திருமணம் நடந்தேறும், விரைவில் குழந்தை பாக்கியம் அமையும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், கணவன் மனைவி பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேரும் காலம் கூடிவரும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பொருளாதார வசதிகள் கூடும், கடன்கள் முற்றிலும் தீரும்
🏠புதிய வீடு,மனை வாங்க திட்டம் போடலாம் புரட்டாசிக்கு பிறகு கிரகபிரவேஷம் செய்ய வேண்டிய யோகம் அமையும்
🛵🚗புரட்டாசிக்கு புதிய வண்டி வாகனம், பொன் நகை ஆபரணம் சேரும், விலை மதிப்புள்ள பொருள்கள் சேரும் காலம், உல்லாச பயணங்கள்,புனித பயணங்கள் அமையும்
📖 மாணவ மாணவிகள் நல்ல முறையில் மதிப்பெண்கள் பெறமுடியும் காலம் எனவே கவனமுடன் படிக்க வேண்டிய காலம். கல்வியில் திருப்புமுனை ஏற்படுத்தி கொடுக்கும் காலம், விரும்பிய உயர் கல்வி கிட்டும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி பெறும் காலம், உயர்ந்த பட்டம் கிட்டும் காலம்
⚖வியாபாரம்/தொழில் விருத்தி செய்ய சிறந்த காலம் புரட்டாசிக்கு பிறகு அபரிமிதமான வளர்ச்சிகள் உண்டாகும். பழைய பாக்கிகள் முழுதும் வசூல் ஆகும், தேவையான வங்கி கடனும் கிட்டும்.புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும், பதவியில் புகழ், பாராட்டுகள் கிட்டும். புதிய உச்சத்தை தொடும் காலம், நினைத்ததையெல்லாம் சாதிக்க கூடியதாக காலம் அமையும். அதிகாரிகளின் பூரண ஓத்துழைப்பு கிட்டும்
🕉புனித திருத்தல பயணங்கள் அமையும்
🔘புரட்டாசிக்கு பிறகு எல்லாமே நன்மையாக நடக்கும். இது ஒரு மிகச்சிறந்த பொற்காலம் ஆகும் உங்களுக்கு
பரிகாரம்
=======
சித்தர்கள்,ஸ்ரீ ராகவேந்திரர், சாய்பாபா வழிபாடு சிறந்த நன்மையை தரும்
எளியோர்களுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97901 26877
87787 97194