சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Kumbha Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Kumbha Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2017 – 2020

 

திருக்கணிதப்படி (Thirukanitha panchangam) :

==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து (Scorpio Sign) அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு (Sagittarious sign) சென்றார் பின் வக்கிர (Retrograde) கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி (Vakya panchangam) :

=============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் (Planet Saturn) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 10 மிடத்தில் இருந்து கொண்டு பல இக்கட்டான பிரச்சினைகளை (Problems), தொழில் (Business) வழி பாதிப்புகள், மந்தம், வேலையிழப்பு, பதவி குறைப்பு, சம்பள உயர்வு (Salary increment) கிடைக்காமல் அவதி, அவமானங்கள் (Insults), கவுரவ குறைச்சல், அதிகார வீழ்ச்சி, தீராப்பகை, பணப்பற்றாக்குறை ஆகியவற்றை கொடுத்திருப்பார்

இனி சனிபகவான் அடுத்து உங்கள் 11 மிடத்தில் அமர்ந்து 3,7,10 ஆம் பார்வையாக ராசி, 5, 8 ஆகிய இடங்களை பார்க்க (aspects) உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சுப பலன்களை (Auspicious results) அள்ளி தருவார்

இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் நல்ல யோக சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல சுப பலன்களை அள்ளிதரவிருக்கிறார் அவை தனவரவுகள் அதிகரிக்கும், எண்ணியவைகள் எளிதில் நிறைவேற்றுவார், பதவி, பரிசு, பாராட்டு போன்றவைகளை தருவார், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும், குடும்பந்தில் சுப நிகழ்வுகள், சிலருக்கு அன்னிய பெண்கள் மூலம் ஆதாயம் கிட்டும், மூத்தோர் ஒத்துழைப்பு கிட்டும், முன்னேற்றம் உண்டாகும், எண்ணிய அனைத்தும் நிறைவேறும் காலம், குடும்பத்தில் குதூகலம், இளமாதர் தொடர்பு உண்டாகும் காலம், ஓப்பந்த தொழிலில் நல்ல ஆதாயம் லாபம் உண்டாகும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Kumbha Rasi
Sani Peyarchi 2017 to 2020 Kumbha Rasi

உடல் ஆரோக்கியம் :

======================

உடல் நலம் முழுமையாக சரியாகும் ஆகும் (improvement in physical health), அறுவை சிகிச்சைகள் (Surgeries) நல்ல பலனை தரும், உடல் நலம் சுறுசுறுப்பாக இருக்கும், உடலில் இருந்த பலவகையான வலி வேதனைகள் காணாமல் போகும், மூத்தோர்கள் உடல் நலம் தேறும், கால்சியம் சம்பந்தமான நோய்கள் குணமடையும், நீண்ட நாள் புரையோடி போன புண்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகும்

பரிகாரம் (Remedies) :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், திருநள்ளாறு சென்று வழிபட்டு வரவும்.

 

உத்தியோகம் / வருமானம் :

=========================

இது உங்களுக்கு ஒரு பொன்னான காலம், புதிதாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலைகள் / அரசு வேலைகள் கிடைக்கும், ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிட்டும், உயர்ந்த பதவியில் அமரும் காலம், பாராட்டுக்கள், பரிசுகள் வந்து சேரும் , அதிகாரிகளின் பாரட்டுகள் குவியும், சக பணியாளர்கள், கீழ் நிலை பணியார்களின் ஒத்துழைப்பு கிட்டும், வேண்டிய விரும்பிய இடமாற்றம், ஊர் மாற்றம் கிட்டும், கோவையில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு இது ஒரு பொன்னான காலம், வெளிநாடு பணி அமையும், ஒப்பந்த தொழிலாளர்கள் நல்ல பலனை அடைவார்கள், வெளிநாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர நல்ல பலனை அளிக்கும்

பரிகாரம் :

சனிக்கிழமை (Saturday) தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

(Profession/ Business / Income)

======================================

அருமையான காலகட்டம் இதுவரை முடங்கி போயிருந்த தொழில் உத்வேகம் பெரும், இழந்த ஆர்டர்கள் / வாடிக்கையாளர்கள் மீண்டும் கிடைக்கும், புதிய ஒப்பந்த தொழிலில் நல்ல ஆதாயமும் உயர்வும் கிட்டும், தொழில் விரிவு படுத்தும் காலம், தொழிலில் இரட்டை லாபம் கிட்டும், உழைப்புக்கு கூடுதலாக லாபம் கிட்டும் காலம், திடீர் லாபம் , எதிர்பாராத லாபம் உண்டாகும் காலம், தொழில் விரிவாக்க கடன் எளிதில் கிடைக்கும்

பரிகாரம் (Remedies) :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் (Female) :

==========

வரன் கூடி வரும் காலம், நீங்கள் நினைத்த வகையில் திருமணம் (Marriage) நடந்தேறும், மர்ம உறுப்பில் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கிட்டும், வேலை (work place) பார்க்குமிடத்தில் இருந்த தொந்தரவுகள் மறையும், சக ஊழியர்களின் ஆதரவுகள் கிட்டும், பணியில் பதவி,சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், பட்டம், பாராட்டுகள் கிட்டும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை (good job) அமையும், சிறப்பான காலம்

பரிகாரம் (Remedies) :

=========

திருநள்ளாறு சனீஸ்வரன் வழிபாடு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு

அரசியல்வாதிகள் (Politician) :

===================

உயர்ந்த பதவியில் அமரும் காலம், பட்டம், பதவி, பாராட்டுகள் தேடி வரும் காலம், எதிர்த்தவர்கள் எல்லாம் ஆதரவு தரும் காலம், பணவரவுகள் (Inflows of cash) அதிகாரிக்கும், நல்ல வருமானம் உண்டாகும் காலம், தலைவரின் நேரடி கண்காணிப்பில் பல நன்மைகள் அடையும் காலம், தொண்டர்களின் உதவிகள் ஆதாரவாக இருக்கும், மிகுந்த நல்ல காலம்

பரிகாரம் (Remedies) :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு

விவசாயிகள் (Formers) :

==============

இரட்டிப்பு லாபம், விளைச்சல் உண்டாகும், நெல்லில் அதிக பயன் கிடைக்கும், விவாசாயம் விரிவாக்கம் செய்ய நல்ல வாய்ப்பு கிட்டும், வங்கி கடன் (Bank loan) கிட்டும்,நல்ல சாகுபடி நல்ல விலைக்கு போகும், வேலைகாரர்கள் ஒத்துழைப்பு சுமூகமாக இருக்கும், மிகுந்த நன்மையான காலம்

பரிகாரம் (Remedies) :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு, கோவிலுக்கு விளைந்த பொருளை தானமாக கொடுக்க சிறப்பு,

மாணவ மாணவியர்கள் (Students) :

==========================

மாணவ மாணவியருக்கு நல்ல காலம், அதிக மதிப்பெண்கள் கிட்டும், விரும்பிய மேல்படிப்பு அமையும், கல்வியில் உங்கள் விரும்பங்கள் நிறைவேறும் காலம், பட்டம்,பாராட்டு, நற்சான்றிதழ் கிட்டும் காலம், எதையும் சாதிக்கும் காலம்

பரிகாரம் (Remedies) :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்.

கலைஞர்கள் (The Artists):

===============

புதிய படைப்புகள் வெற்றிபெறும், ஏற்கனவே நின்று போயிருந்த அனைத்தும் தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெறும், வெற்றிகள், பாராட்டுகள், பரிசுகள் குவியும் காலம். எடுத்த காரியத்தில் லாபம் அதிகம் கிட்டும் காலம், மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும், சக கலைஞர்கள் ஆதரவு கிட்டும், சுபமான கால கட்டம், இக்காலத்தில் நல்ல பெயர் சம்பாதிக்கும் காலம்

பரிகாரம் (Remedies) :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள் (Planet transit), உங்கள் ஜனன ஜாதகத்தின் (Birth chart) வலு மற்றும் தசா புத்திகள் (Dasa -Bhukthi) பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

Blog at WordPress.com.

%d bloggers like this: