சனி பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2017 – 2020
=========
திருக்கணிதப்படி :
==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.
வாக்கியப்படி :
=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 4 மிடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்து பல அசுப பலன்களான வம்பு, தகராறு தடை தாமதம், பயண தடை சுகக்கேடு, தாயின் உடல் நல பாதிப்பு, மண் மனை ரிப்பேர் செலவு சிலருக்கு புது வீடு கட்டும் வாய்ப்பு அல்லது மாடி எடுக்கும் / விரிவாக்க செலவுகளை கொடுத்திருப்ப்பார், வண்டி வாகன விபத்துகள் / ரிப்பேர் செலவுகள் கட்டுக்கடங்காமல் ஆகியிருக்கும், தொழில் சிக்கல் மந்தம் , உயர் கல்வி தடை , வேலை இடமாற்றம், தோல்விகள், அலைச்சல் திரிச்சல் கொடுத்திருக்கும்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் பஞ்ச, பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 7, 11, 2 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த கெடு பலன்கள் மாறி சில நல்ல பலன்களை வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் மத்திம சனியாக இருந்து கடந்த காலத்தை விட கெடு பலன்களை குறைந்து தரவிருக்கிறார் எனினும் சிறப்பான ஒரு சிறப்பான காலம் அல்ல என்றே கூறலாம் கிழ்கண்ட பலன்களை தருவார் மன கலக்கம், எதிலும் குழப்பம், உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலை, அபவாதம் உண்டாகும், பொருள் நஷ்டம் இழப்பு, மனைவி மக்கம் சம்பந்தமான கவலைகள், குழந்தைகளுக்கு மருத்துவ கல்வி செலவுகள் உண்டாகும், வாரிசு தடை, குலதெய்வ வழிபாடுகள் தடை, மனதில் கிலேசம் , பய உணர்ச்சி இப்படி சிறிய சிறிய பிரச்சினை கொடுப்பார் எனவே அதிக தீவிரம் இருக்காது

உடல் ஆரோக்கியம் :
======================
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் மன நல பிரச்சினைகள் சரியாகும். மன பயம், கிலேசம், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் உண்டாகும், சிறிய சிறிய உடல் உபாதைகள் வந்து மறையும், குழந்தைகளுக்கு மருத்துவ செலவு உண்டாகும், இருதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் உடனுக்குடன் சரிசெய்து கொள்ள பூரண குணம் கிட்டும்,
.
பரிகாரம் :
பெருமாள், தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வாங்கி தரவும்.
உத்தியோகம் / வருமானம் :
=========================
உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கும் வேலையில் நீடிக்கும் சூழல் உண்டாகும், எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் காலம், தேவைக்கு ஏற்ப ஓரளவு பணம் வந்து கொண்டே இருக்கும், தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டால் அபவாதம் வந்து சேரும் எவ்வளவு ஒதுங்கி சென்றாலும் அபவாதம் ஏற்பட்டு உங்கள் பெயரை கெடுத்து விடும் எனவே மிகுந்த கவனம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதிய வேலையை தோடுவதை நிறுத்தி இருக்கும் வேளையில் கவனம் செலுத்த சிறப்பு, பெரிய சம்பள உயர்வு, பதவி உயர்வு,சலுகைகள் கிட்டாத காலம்
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
தொழில் / வியாபாரம் / வருமானம் :
======================================
தொழில் / வியாபாரம் சுமாராக தான் இருக்கும், மனதில் தொழில் குறித்த பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும், புதிய வாய்ப்புகள் சுமாராக இருக்கும், தொழிலில் ஒரு மந்தம்/தேக்கம் உண்டாகும், உற்பத்தியில் எதிர்பாராத நஷ்டங்களும், இழப்பீடுகளுக்கும் வாய்ப்புண்டு, வெளிநாடு ஆர்டர் கிடைக்கும் அதில் லாபம் உண்டாகும் காலம் எனவே அதில் கவனம் செலுத்த சிறப்பு, தேவைக்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும், வருமானம் தடைபட வாய்புகள் குறைவு. பத்திரிக்கை துறை, டெக்ஸ்டைல்ஸ், கலை துறையினருக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும் எனவே கவனமுடன் ஆக்கபூர்வமாக செயல்பட சிறப்பு,
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, அஷ்டமி திதியில் காலபைரவர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, அன்னதானம் செய்ய சிறப்பு
பெண்கள் :
==========
இளம்பெண்களுக்கு திருமணதடை படும், குடும்பத்தில் சண்டை சச்சரவு அடிக்கடி உண்டாகும், தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும், புதிய தொழிலில் ஈடுபடவேண்டாம், நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை சேமிக்க வேண்டாம், உடல்நிலை மந்தம், மருத்துவ செலவுகள், மார்பக நோய்கள் உண்டாகும், சுரப்பிகள் சம்பந்தமான பிரச்சினைகள் வரும், எதிலும் நல்ல பெயர் எடுக்க முடியம் போகும், தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு அபவாதம் ஏற்படும், எழுத்து துறையில் உள்ள பெண்மணிகளுக்கு சிறப்பான காலமாக இருக்கும், வீடு கட்டும் / மாரமத்து / விரிவாக்கம் யோகம் உண்டாகும்
பரிகாரம் :
காலபைரவர் வழிபாடு, காளி, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு
அரசியல்வாதிகள் :
===================
சுமாரான காலம், இருக்கும் பதவிகளை தக்க வைத்து கொள்ளுங்கள், மனபயம், கிலேசம், அபவாதம் உண்டாகும், செய்யாத செயலுக்கு பலரின் பேச்சுக்கு ஆளாக வேண்டி வரும், மனக்குழப்பம் அதிகரிக்கும் காலம், சம்பந்தமில்லா கோபம் உண்டாகும், உடல் உபாதைகள் தலைகாட்டும், தேவைகேற்ற பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத காரியத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது. தலைவர்களின் உத்தரவுகளை மட்டும் செயல் படுத்தினால் போதுமானது.
பரிகாரம் :
அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
விவசாயிகள் :
==============
விவாசாயிகளுக்கு சுமாரான காலம், முயற்சிக்கு ஏற்ற பலன் மட்டுமே கிடைக்கும், பணப்பயிர்கள் லாபம் தரும், பாரம்பரிய விவசாயத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும், விவாசய மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், மாற்று வகை பயிரில் லாபம் கிட்டும்
பரிகாரம் :
குலதெய்வத்துக்கு வழிபாடு விளைச்சலில் ஒரு பகுதியை ஈஸ்வரன்பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்க சிறப்பு
மாணவ மாணவியர்கள் :
==========================
ஆரம்ப கல்வி, முதுநிலை கல்வி படிப்பவர்களுக்கு தடை உண்டாகும் / மதிப்பெண்கள் குறையும். கல்வியில் தடை தாமதம் உண்டாகும். பட்ட படிப்பில் தடை, தேடும் துறை அமையாது அமைந்தாலும் மதிப்பெண்கள் குறையும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய கால கட்டம், நிர்வாகம் / ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும், உடல் உபாதைகள் உண்டாகும், மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாகும் சூழல் உண்டாகும், அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது அபவாதத்தை தடுக்கும்
பரிகாரம் :
ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்
கலைஞர்கள் :
===============
வழக்கமான செய்யும் பணியை செய்யும் காலம் கட்டமாக இருக்கும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது அபவாதத்தை தடுக்கும், பணவரவு தேவைக்கேற்றபடி வந்து சேரும், அகல கால் வைக்காமல் இருப்பது சிறப்பு, புதிய படைப்புகள் காலம் தள்ளி போகும்
பரிகாரம் :
சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
You must be logged in to post a comment.