சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Dhanu Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Dhanu Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 – 2020

===============

திருக்கணிதப்படி :

==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 12 மிடத்தில் இருந்து கொண்டு ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து பல சுப அசுப விரையங்களை கொடுத்திருக்கும் அதாவது சொத்துகள் வாங்கியிருப்பீர்கள், வீடு கட்ட தொடங்கி இருப்பீர்கள், திருமண செலவு நடந்திருக்கும், வளர்ச்சி தாராத இடத்தில் உங்கள் பணம் முடங்கி போயிருக்கும், மருத்துவ செலவுகள், களவு, கொடுத்தவர் மோசம் செய்தல், நஷ்டம், நிதி நிறுவனத்தில் போட்ட பணம் திரும்ப கிடைக்காமல் அல்லாடி இருப்பீர்கள், ஜாமீன் போட்டு அதில் மாட்டி கொண்டியிருப்பீர்கள், வழக்கில் சிக்கி இருப்பீர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் செலவு உண்டாகியிருக்கும், தொழில் வழி சங்கடம், இடமாற்றம், குடும்ப பிரிவு, விரோதம், கொடுக்கல் வாங்கல் தடை தாமதம் இப்படி பல இரண்டும் கலந்து நடைபெற்று இருக்கும்

இனி சனிபகவான் அடுத்து உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 3, 7, 10 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய காலமாக தான் இருக்கும்

இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் அடுத்த இரண்டரை ஆண்டுக்கு ஜென்ம சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல கெடு பலனான உத்தியோகத்தில் வேலைப்பளு,அதிகாரிகளால் அவமதிப்பு,கெடுபிடி, செய்தொழிலில் அலைச்சல் திரிச்சல், இளைய சகோதரர்கள் உடன் பகை, கீர்த்தி பங்கம், ஆடை அணிகலன் இழப்பு, தொண்டையில் ரோகம், தன்மான இழப்பு, மந்த போக்கு, திருடு போதல், வறுமை, நோய், கஷ்டம், மேன்மக்கள் விரோதம், கணவன் மனைவி பிரிவு, டைவர்ஸ், கூட்டு தொழில் முறிவு, திருமண தடை, ரத்த சம்பந்தமான இழப்பு அதற்கு ஈடான நோய், வம்பு, வழக்கு, துக்க செய்தி, காரணமற்ற பயம்,பீதி உணர்வு, விபரீத சிந்தனைகள், கலகம், முறையான நேரத்தில் உணவருந்த இயலாத நிலை இது போல நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Dhanu Rasi
Sani Peyarchi 2017 Dhanu Rasi

உடல் ஆரோக்கியம் :

======================

உடல் மன ஆரோக்கியம் கெடும், தேவையற்ற சிந்தனைகள் வரும், மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் அதனால் உடல்நிலையை கவனிக்க இயலாத சூழ்நிலை உண்டாகும் ஆகையால் கவனமுடன் உடல் நலத்தை பேண வேண்டும். கடுமையான நோய்கள் அல்லது அரிஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, தலைவலி, ஒற்றை தலைவலி, தொண்டை வலி, தொண்டை சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான் நோய்கள், எலும்பில் கால்சியம் குறைபாடு,வயிறு,கணுக்கால் சம்பந்தமான நோய்கள். எனவே உடல் நிலையில் கவனமுடன் இருந்து உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள சிறப்பு

பரிகாரம் :

அனுமானுக்கு வெற்றிலைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு

.

உத்தியோகம் / வருமானம் :

=========================

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகார்களின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் இருக்கும் ஆனால் பற்றாக்குறை நீடிக்கும்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================

தொழிலில் அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும், பல இக்கட்டான சூழல் உண்டாகும், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வது தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் :

==========

பெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை செய்யுமிடத்தில் கண்ட்டிப்புக்கு ஆளாகி வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், தலைவலி, பல், எழுப்பு சம்பந்தமான நோய்கள் அடிக்கடி ஏற்படும், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்

பரிகாரம் :

=========

சனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு

அரசியல்வாதிகள் :

===================

கட்சியில் தலைவலிகள் கூடும், தலைவரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், பதவி பறிப்பு, துறை மாற்றம் உண்டாகும், அடுத்து வரும் தேர்தலில் சீட் கிடைக்க பெரும் அவஸ்தை பட வேண்டும் கிடைக்காது, பொதுமக்களின் விரோதமாகும் சூழலால் பாதிக்கபடுவீர்கள், நண்பர்கள் போட்டியாக வந்து நிற்ப்பார்கள், அரசியல் சண்டையில் வம்பு வழக்கு ஜெயில் கேஸ் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும், தலையில் அடிபடாமல் பார்த்து கொள்ளவும், ஆயுத தாக்குதல் உண்டாகும்

பரிகாரம் :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு

விவசாயிகள் :

==============

உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================

படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் கனவு தடைபடும், படிப்பு செலவுக்கு பற்றாக்குறை உண்டாகும், உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் உண்டாகும், கல்வி கடனும் கிடைக்காமல் அவதி படுவீர்கள்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============

புதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்

பரிகாரம் :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

Blog at WordPress.com.

%d