சனி பெயர்ச்சி பலன்கள் துலா ராசி 2017 – 2020
=========
திருக்கணிதப்படி :
==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.
வாக்கியப்படி :
=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 2 மிடத்தில் பாத, குடும்ப, வாக்கு சனியாக இருந்து பல சுப பிரச்சினைகளான பணப்பிரச்சினை, வாக்கு வாதங்கள், படிப்பு, பட்டம், பதவி,குடும்பம் இவற்றில் பிரச்சனையும், பொருள் விரையம், வண்டி வாகன பீடை, தாய்க்கு உடல்நிலை மோசம், கால் வலி, காயம், புண், தீராத அலைச்சல் ஆகியவையும் கொடுத்திருப்பார்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் முயற்சி,வீரியம் ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 5, 9, 12 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி ஏற்கனவே சந்தித்த அசுப பலன்கள் மாறி நல்ல சகாயமான பலன்களை வழங்க உள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் சாகாய சனியாக இருந்து கடந்த காலத்தை போல அல்லாமல் சுப பலன்களை அதிகமாக தரவிருக்கிறார் அவை பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக வரும், தொழிலுக்கு உதவிகள் வந்து சேரும், அரசு சம்பந்தாமான ஆதாயம்,பாராட்டு , பொதுமக்கள் ஆதரவு பாராட்டு, எதிர்பாராத உதவி உங்களுக்கு வெகு உயரத்துக்கு இட்டு செல்லும், கைவிட்டு போன அனைத்தும் வந்து சேரும் காலம், இல்லறம் இனிக்கும், சகோதரர்கள் உதவி கிட்டும், சகல துறையிலும் வெற்றி கிட்டும் காலம் எனவே சரியாக பயன்படுத்தி வாழ்வில் வளமைகளை சேர்த்து கொள்ளுங்கள்

உடல் ஆரோக்கியம் :
======================
இது வரை இருந்து வந்த கால்வலி , உடல் பீடை, புண், வாதம், முடக்கநோய்கள் நிவாரணம் கிட்டும், கண் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், உடல் நலம் மன நலம் தேறும் ஆரோக்கியம் பெருகும், அலைச்சல் திரிச்சல் சம்பந்தமான வேலைப்பளு குறையும்,
பரிகாரம் :
தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும்,
.
உத்தியோகம் / வருமானம் :
=========================
இதுவரை உத்தியோகத்தில் இருந்த தடைகள் முழுதும் நீங்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும. பல வருடங்களாக வேலை தேடி கொண்டு இருந்தவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிட்டும் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும், பதவி உயர்வு, சம்பள உயர்வு, துறைகள் மாற்றம், பாராட்டு, வெகுமதி, அங்கீகாரம் கிட்டும். கடந்த ஆண்டுகளில் கைவிட்டு போன பதவி தேடி வரும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு / வேலை கிட்டும், சகல துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல காலம், எதிர்பார்த்தை விட சம்பளம் அதிகம் கிட்டும், இரண்டுக்கு மேற்பட்ட வருமான வாய்ப்புகள் உண்டாகி பண பற்றாக்குறை முழுதும் நீங்கி சுபிட்சம்கிட்டும்
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், , முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
தொழில் / வியாபாரம் / வருமானம் :
======================================
புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிட்டும், விரிவாக்கம் எதிர் பார்த்ததை விட நன்றாக் அமையும், தொழில் தொடங்க / விஸ்தரிக்க தொழில் கடன் உடன் வந்து சேரும், வருமானம் உயரும் காலம், இரண்டுக்கு மேற்பட்ட தொழிலை நிர்வகிக்கும் சூழல் உண்டாகும், கடந்த நிலைமை முழுதும் மாறும் காலம், கடன் பிரச்சினைகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கும், அரசாங்கத்தின் தடை நீங்கும் ஆதரவு கிட்டும், அரசின் தொழில் தொடங்க subsidy கிட்டும், கைவிட்டு போன தொழில் மீண்டும் புத்துயிர் பெரும், ஆர்டரும் கிட்டும். சகல துறையில் உள்ளவர்களுக்கும் இது வெற்றி தரும் காலமாக இருக்கும். அடுத்த இரண்டாண்டில் கடன் பிரச்சினை முழுதும் நிவர்த்தி பெரிய விரிவாக்கமும் உண்டு
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, அஷ்டமி திதியில் எலுமிச்சை வைத்து காலபைரவர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு
பெண்கள் :
==========
பெண்களுக்கு தடைப்பட்டிருந்த திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்கியம் தள்ளிபோகும், தூக்கம் கெடும், செய்தொழில் நன்மை தரும், பணப்புழக்கம் அதிகரிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு கடந்த ஆண்டுகளில் இருந்த பிர்ச்சினைகள் நீங்கும், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும், அலுவலகத்தில் அனைவரின் ஆதரவும் கிட்டும், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் மட்டும் தோன்றும், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினையும் உண்டாகும், நெடு நாள் நினைத்து இருந்த காரியங்கள் வெற்றி பெரும்
பரிகாரம் :
=========
சனீஸ்வரன் வழிபாடு, அடிக்கடி இளநீர் சாப்பிடவும்
அரசியல்வாதிகள் :
===================
வெற்றிகள் குவியும் காலம், இழந்த பதவிகள் கிட்டும் காலம், தலைவர்களின் நேரடி பார்வையில் வரும் காலம், இழந்த செல்வங்கள் பதவிகள் கிட்டும், தூர தேச பயணம் அரசு செலவில் சென்று வரும் வாய்ப்புகள் அமையும், பட்டம் கிட்டும், வழக்குகள் நல்ல முடிவை தரும், பல தரப்பினரும் தாமே வந்து உங்களுக்கு உதவும் காலம், கடன் முழுதும் நீங்கும், அரசாங்கம், பொது மக்களின் ஆதரவு கிட்டும் காலம்
பரிகாரம் :
அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
விவசாயிகள் :
==============
விவாசாயிகளுக்கு தொழில் செழிக்கும், எதிர்பார்த்ததை விட வருமானம் பெருகும், பணப்பயிரில் மூன்று மடங்கு லாபம் கிட்டும், விவாசய கடன், நகை கடன், வீட்டு அடமான, நில அடமான கடன் எல்லாம் தீர்ந்து கைவிட்டு போன சொத்து, நிலபுலம், பொன் பொருள் கைக்கு வந்து சேரும், ஆடு மாடு வண்டி வாகன வசதிகள் பெருகும், விவாசய நில விரிவாக்கம் செய்யும் காலம், பண்ணை காடுகள் திட்டத்தில் நல்லா மானியம் கிட்டும் வருமானமும் பெருகும்
பரிகாரம் :
குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு
மாணவ மாணவியர்கள் :
==========================
தடைபட்டு கொண்டிருந்த ஆரம்ப கல்வி தடை நீங்கும், பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிட்டும், கவனம் முழுதும் படிப்பில் இருக்கும், கடந்த கால கசப்பான நினைவுகள் மறைந்து நல்ல விதமாக படிப்புகள் அமையும், உடல் நல மன நல பிரச்சினைகள் முழுதும் நீங்கும், படிப்பில் பாராட்டு, பொன் முடிப்பு பெறுவீர்கள்
பரிகாரம் :
ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்
கலைஞர்கள் :
===============
இதுவரை இருத்த அணைத்து முட்டுக்கட்டைகள் நீங்கி விறுவிறுப்பாக வேலைகள் நடக்கும், புதிய பரிமானங்கள் வெளிப்படும், அரசின் பாராட்டு விருதுகள் போன்முடிப்புகள் கிட்டும், நல்ல வலிமையான முன்னேற்றம் கிடைக்கும், அரசின், பொது மக்களின் முழு ஆதரவும் கிட்டும் காலம். இனி வெற்றி வெற்றி வெற்றி தான்
பரிகாரம் :
சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
You must be logged in to post a comment.