விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மகர ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 6 ஆம் இடத்தில் ராகுவும் 12 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
தங்களுக்கு லாப குரு என்ற ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார் இருந்தாலும் கடந்த ஒன்றரை வருடமாக கேது பகவான் ராசியில் இருந்து கொண்டு பலவித சங்கடங்களையும் மன உளைச்சலையும் பிரச்சனைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தார் தற்போது அவர் 12-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார் இனி வரும் குரு பெயர்ச்சி வரை உங்களுக்கு பலவிதமான நல்ல பலன்கள் கிடைக்கும் இனி முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் காலம் மனம் பூரிப்படையும் காலம் பல காலம் குழந்தை பாக்கியத்திற்கு தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் உண்டாகும் திருமணம் நடந்தேறும் காலம் புதிய நண்பர்கள் மூலம் லாபங்கள் உண்டாகும் பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் சகோதரர்கள் வழியில் இருந்து வந்த தொந்தரவுகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு புதிய வீடு வண்டி வாகன வசதிகள் ஏற்படும் கடன் தொந்தரவுகள் படிப்படியாக குறையும் கடன்களை செலுத்தும் காலம் எதிரிகள் தொந்தரவு முற்றிலுமாக மறையும் உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் முழுவதும் சரியாகி உடல் நலம் தேறும் நோய் நொடிகள் தொந்தரவுகள் நீங்கும் வெற்றிகள் குவியும் காலம் மறைமுக லாபங்கள் திடீரென்று எதிர்பாராத லாபங்கள் யூகவணிகம் பங்குசந்தையில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக உறுப்பு வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும் காலம். சுகம் கூடும்
மாணவ மாணவிகள் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் காலம் உயர் படிப்பு பட்டப்படிப்பு இவைகளில் விரும்பிய படிப்புகளில் இடம் கிடைக்கும்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தற்போது உங்களுக்கு ஏழரை சனியில் விரைய சனி இரண்டரை ஆண்டுகாலம் முடிவடைந்து ஜென்ம சனியாக மாற உள்ளார் எனவே பலவிதமான தொந்தரவுகள் இடைஞ்சல்கள் ஏற்படும் உங்களுடைய மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் சோம்பேறித்தனம் முயற்சியின்மை இவற்றை உண்டாக்கும் இருந்தாலும் குரு பகவான் பார்வை உள்ளதால் தடை ஏற்படுவது தவிர்க்கப்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் பிரிவினைகள் உண்டாகும் நண்பர்களுடன் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனமாக நடந்துகொள்ள சிறப்பு
தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழில் வியாபாரத்தை விருத்தி செய்ய விஸ்தரிக்க புதிய தொழிலை ஆரம்பிக்க தவிர்க்க வேண்டிய காலகட்டம் புதிய முதலீடுகள் கண்டிப்பாக செய்வதை தவிர்க்க வேண்டும் அதிக அளவில் கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் முற்றிலுமாக அட்வான்ஸ் செக் கொடுப்பது வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் எழுத்து ஒப்பந்தங்கள் ஜாமீன் கொடுப்பது உத்தரவாதம் தருவது அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவது இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய காலம் உத்தியோகம் செய்பவர்கள் மேலதிகாரிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய காலம் தேவை இல்லாத சுய முடிவுகளை தவிர்க்க வேண்டும் பதவி உயர்வு சம்பள உயர்வு இவைகளை எதிர்பார்க்கக்கூடாது இருக்கும் இடத்தை விட்டு புதிய இடம் மாறுவது சிறப்பான காலம் அல்ல. இருக்கும் வேலையில் கண்ணும் கருத்துடன் செயல்பட சிறப்பு மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது
பரிகாரம்
இஷ்ட தெய்வம் குல தெய்வத்தை தினமும் வழிபட சிறப்பு
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
வியாழக்கிழமையில் குரு பகவான் அல்லது சித்த புருஷர்கள் அல்லது குருமார்களை வழிபாடு செய்ய செய்ய சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்