சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Makara Rasi

31,844

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 – 2020

திருக்கணிதப்படி (Thirukanitha panchangam) :

==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை

இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி (Vakya panchangam) :

=============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 11 மிடத்தில் இருந்து கொண்டு யோக சனியாக இருந்து பல சுப பலனா அதிக தனவரவு, பதவி,பாராட்டு,பரிசு,எண்ணியவை எளிதில் முடித்து கொடுத்து இருப்பார், மகிழ்ச்சி குடும்ப சூழல் அமைந்திருக்கும், சுப நிகழ்வுகள்,மூத்தவர்களின் பூரண உதவிகள், ஒப்பந்த தொழிலில் நல்ல லாபம், குழந்தை பாக்கியம், கடந்த காலத்தில் இழந்த பொருளை மீட்டு இருப்பீர்கள், இளமாதர் தொடர்பு, குதூகலம்

இனி சனிபகவான் அடுத்து உங்கள் 12 மிடத்தில் அமர்ந்து ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடம் விரைய சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 2, 6, 9 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சுப அசுப பலன்களை தருவார்

இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் முதல் இரண்டரை ஆண்டுக்கு விரைய சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல சுப அசுப கெடு பலனான அதிக விரையம் தருவார் அதை நீங்கள் சுப விரையமாக மாற்றி கொள்ளவேண்டும் அதவாது இக்காலத்தில் வீடு கட்ட துவங்கலாம், திருமண செலவுகள், சொத்துகள் வாங்கி போடலாம், அடுத்த இரண்டு வருடம் லாபம் தாராத சொத்தில் முதலீடு செய்து அதன் பிறகு நல்ல லாபம் கிடைக்கும் முதலீடு செய்யலாம், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், களவு / மோசம் போகும், நஷ்டம், தண்ட செலவுகள், ஜாமீன் போடுவது தவிர்க்க வேண்டும், வம்பு வழக்கில் சிக்காமல் இருப்பது சிறப்பு, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும், தவறி விழ வாய்ப்புகள் அதிகம் உண்டு, வேலை / தொழிலில் கவனம், கடன், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, குடும்ப விரோதம் / பிரிவு , தொடை மற்றும் முழங்காலில் ரோகம் உண்டாகும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Makara Rasi
Sani Peyarchi 2017 Makara Rasi

உடல் ஆரோக்கியம் (Physical Health) :

======================

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், கண் சம்பந்தமான பிரச்சினை, தொடை / முழங்காலில் ரோகம், விபத்தில் கால் முறிவு, அடிக்கடி தவறி விழுந்து சங்கடபட சந்தர்ப்பம் உண்டாகும். உடனுக்குடன் மருத்துவம் எடுத்து கொள்ளவது சிறப்பு

பரிகாரம் (Remedies) :

அனுமானுக்கு வடைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சபரிமலைக்கு அடுத்த 7 வருடமும் வருடம் ஒரு முறை சென்று வர சிறப்பு சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு

.

உத்தியோகம் / வருமானம் (Job / Income) :

=========================

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகாரிகளின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் குறைவாக தான் இருக்கும் கடன் வாங்கிய பல செயல்களை செய்ய வேண்டியிருக்கும் அதனால் பற்றாக்குறை நீடிக்கும்

பரிகாரம் (Remedies) :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

(Profession/ Business / Income)

======================================

இக்காலத்தில் சுய தொழில் கூட்டு தொழில் ஆரம்பிப்பது பல சிரமத்தை நஷ்டத்தை ஏற்படுத்தும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் நசிந்தால் உடனே அடிமை வேலைக்கு செல்வது பலவிதமான இக்கட்டிலிருந்து / நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வதை தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,

பரிகாரம் (Remedies) :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு

பெண்கள் (Female) :

==========

பெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்

பரிகாரம் (Remedies) :

=========

சனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு

அரசியல்வாதிகள் (Politician) :

===================

பதவி இழப்பு ஏற்படும், அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய சூழ்நிலை, தண்ட செலவுகள், அடிதடியில் கால் முறியும், காலில் அடிவிழும், பணம் மோசம் போகும், வம்பு வழக்கு, நீண்ட நாள் ஒளிந்து வாழும் சூழல் உண்டாகும், இதுவரை அனுபவித்து வந்த சுக பதவிகள் எல்லாம் பறிபோகும்

பரிகாரம் (Remedies) :

அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு

விவசாயிகள் (Formers) :

==============

பயிர் நாசம் உண்டாகும், பூச்சி தொல்லையால் உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்

பரிகாரம் (Remedies) :

குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு

மாணவ மாணவியர்கள் (Students):

==========================

பொது தேர்வு எழுதும், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டிய காலம், எதரிபார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது, எதிர்பார்த்த பட்ட படிப்பும் அமையாத காலம், படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின்/ பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும்

பரிகாரம் (Remedies) :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் (Artists) :

===============

புதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்

பரிகாரம் (Remedies) :

சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More