சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 | Sani Peyarchi 2017 Mithuna Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Mithuna Rasi

சனி பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2017 – 2020

===========

திருக்கணிதப்படி :

================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :

=============

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசிக்கு 6 மிடத்தில் யோகம் தரும் சனியாக இருந்து பல சுப பலன்களான சத்ருக்கள் தொல்லையை குறைத்தார், கடன் பிரச்சினை, உடல் நல பிரச்சினைகளை தீர்த்து வைத்தார், நல்ல வருமானத்தையும் யோகத்தையும் அளித்தார், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார், பட்டம் பதவி கொடுத்தார், வழக்குகளில் வெற்றி தேடி கொடுத்தார்

இனி சனிபகவான் அடுத்து உங்கள் சப்தம ஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்துக்கு பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 9, 1, 4 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது இனி ஏற்கனவே சந்தித்த சுப பலனுக்கு மாறாக பல அசுப பலனையும் பிரச்சினைகளையும் தர உள்ளார் எனவே கடந்த காலம் போல் இருக்கும் என நம்பி எதிலும் அகல கால வைப்பது, யோசனைகள் இல்லாமல் முடிவெடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய காலம்

இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் கண்டச் சனியாக இருந்து பல கெடு பலன்களான கணவன் மனைவி கருத்து வேறுபாடு, பிரிவு, விவாகரத்து, மாங்கல்யா பிரச்சினை, குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் சுழல், வெளிநாடு, தூர தேச பயணங்களுக்கு சாதகமான காலம், செலவுகள் தலை விரித்து ஆடும், திருமண தடை, நண்பர்கள் விரோதம், குடும்பத்தில் தகாராறு, உடல் அசதி, மன நலம் பாதிப்பு, வண்டி வாகன பராமரிப்பு செலவுகள், விபத்துக்கள், தாய் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் காலம் எனவே தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட சிறப்பு

உடல் ஆரோக்கியம் :

======================

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உடல் மன நல பிரச்சினைகள் தோன்றும், சரியான நேரத்தில் உணவு உன்ன முடியாத சூழல் உண்டாக்கும், வண்டி வாகன பயணத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வயிறு சம்பந்தமான உபாதைகள் அடிக்கடி தோன்றும், வெளியிடத்தில் சாப்பிடுவதையும் சுகாதாரமற்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது, தீட்டு வீடுகளில் இனம் தெரியாத நபர்கள் தரும் உணவையும் தவிர்க்க வேண்டும்

பரிகாரம் :

தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு அடிக்கடி செய்ய சிறப்பு, தினமும் காகத்துக்கு பழைய சாதம் வைக்க வேண்டும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்து கொள்ள நலம், உடல் மன நலத்தை பேன வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும், யோக செய்ய சிறப்பு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும்.

உத்தியோகம் / வருமானம் :

=========================

உத்தியோகஸ்தர்களுக்கு சனிபெயர்ச்சிக்கு முன்பாக வேலை மாற்றம் உண்டாகும் உடனே மாற்றி கொள்வது நல்லது இல்லையெனில் ஏற்கனவே இருக்கும் இடத்தில் வேலை பளு கூடும், இடமாற்றம், பணி மாற்றம், சம்பள குறைப்பு, மேலதிகாரியின் கெடுபிடி, மெமோ தருவார்கள், ஊர் மாற்றம், உழைப்புகேற்ற மதிப்பு, ஊதியம் கிடைக்காது, வேலை இழப்பு உண்டாகும், கதவடைப்பு, வெளிநாட்டுக்குக்கு விருப்பாத இடமாற்றம், ஊதிய உயர்வு தடை, கொடுத்திருந்த சலுகைகள் பறிப்பு, புதிய வேலை வாய்ப்பு அமைவதில் சிக்கல், இருக்கும் இடத்தை விட்டு வெகுதூரம் / வெளிநாட்டில் வேலை செய்வது சிறப்பை தரும். வருமானம் குறையும் செலவுகள் கட்டுக்கு அடங்காமல் தலைவிரித்து ஆடும் கடன் வாங்கும் நிர்பந்ததுக்கு தள்ளபடுவீர்கள், கடந்த கால சேமிப்புகள் கரையும் காலம்

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு சிறப்பு

தொழில் / வியாபாரம் / வருமானம் :

======================================

தொழில் / வியாபாரம் மந்த நிலை சந்திக்கும் காலம், தொழில் மாற்றம் உண்டாகும் காலம், இடத்தை விட்டு வெகுதூரம் சென்று தொழில் செய்வது சிறப்பை தரு,. விரிவாக்கம் செய்வது, அகல கால வைப்பது போன்றவற்றை நிறுத்தி வைக்க சிறப்பு, கூட்டு தொழில் செய்வது தவிர்ப்பது உத்தமம், வருமானம் பாதிக்கப்படும் காலம், பாக்கி வரவுகள் நின்று விடும், வசூல் ஆவதில் சிக்கல் உண்டாகும், பெரிய முதலீடுகள் தவிர்ப்பது உத்தமம், உற்பத்தி செய்த பொருள் விற்பனை ஆகாது,

பரிகாரம் :

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு

பெண்கள் :

==========

இளம்பெண்களுக்கு திருமணம் தடைபடும், நித்தம் சண்டை சச்சரவு கணவனுடன் ஏற்படும், கணவருடன் பிரிவினை, சண்டை சச்சரவு, விவாகரத்து, கோபதாபம் பிரிந்திருக்கும் சூழ்நிலை உண்டாகும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை போட வேண்டாம். கொடுக்கல் வாங்கலை தற்காலம் தவிர்க்க சிறப்பு, பொன் நகை ஆபரணங்கள் அடகுக்கு போகும், அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது சிறப்பு, அடுத்தவருக்கு கியாரண்டி கொடுக்ககூடாது,

பரிகாரம் :

அமைதி காப்பது சிறப்பு, சனீஸ்வரன் வழிபாடு சிறப்பு

அரசியல்வாதிகள் :

===================

பதவி, பட்டம், புகழ் இவைகளில் பிரச்சினை போட்டி உண்டாகும், பண விரயம் அதிகம் ஏற்படும், பதவியை தற்காத்து கொள்ள ஏகப்பட்ட சிரமங்கள் செலவுகள் ஏற்படும் சில சமயத்தில் கடன் ஏற்படும் சூழல் உண்டாகும்,. பழைய இருப்புகள் கரையும் காலம். எல்லாவற்றிலும் எச்சரிக்கை தேவை, வழக்குகளில் மாட்டும் சூழல் உண்டாகும், கட்சியினருடன் தகராறு ஏற்படும், சில காலம் தூர தேசத்தில் / வெளிநாட்டில் தலை மறைவாக இருக்க வேண்டிய கால கட்டம் உண்டாகும்

பரிகாரம் :

அடிக்கடி திருச்செந்தூர் கடலில் குளித்து முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபாடு செய்ய சிறப்பு, ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, சனீஸ்வரன் அர்ச்சனை வழிபாடு சனிக்கிழமைகளில் செய்ய சிறப்பு

விவசாயிகள் :

==============

விவாசாயம் நஷ்டத்தை தரும் காலம், கடன் வாங்கி செலவு செய்து கடைசியில் அதற்க்குண்டான பலன் கிடைக்காமல் கடன் ஏற்படும் வட்டி செலுத்த முடியாத சூழல் உண்டாகும். மாடு கன்றுகளுக்கு மருத்துவ செலவு / நோய் / இறப்பு உண்டாகும். பச்சை பயிர் வகை முழுவதும் நட்டம் ஏற்படும் சூழலால் அதிக பாதிப்பு உண்டாகும்

பரிகாரம் :

குலதெய்வ வழிபாடு, புதன் தோறும் பெருமாள் வழிபாடு, சனிக்கிழமை சனீஸ்வரன் நல்லெண்ணெய் தீப வழிபாடு

மாணவ மாணவியர்கள் :

==========================

கவனமுடன் படிக்க வேண்டிய கால கட்டம், படிப்பில் மறதி உண்டாகும், அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டும், மதிப்பெண்கள் குறைவாக தான் கிட்டும், மேல்படிப்பு / உயர்கல்வி / வெளிநாட்டு கல்வி தடை படும், ஆசிரியர்கள் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், கவனம் சிதறும் காலம். விருப்பிய கல்வி கிடைப்பதில் மிகுந்த சிரமங்கள் உண்டாகும்

பரிகாரம் :

ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்

கலைஞர்கள் :

===============

புதிய துறையில் / நவீன துறையில் இருப்பவர்கள் மிகுந்த சங்கடத்தை சந்திக்க நேரிடும், தொழில் மூலம் கடன் பிரச்சினை தலை தூக்கும், அகல கால் வைப்பதை தவிர்க்க உத்தமம், தொழில் வழி சாதனங்ககுள் அடிக்கடி பழுது அடைவது மற்றும் செலவுகள் ஏற்படும், எவ்வளவு தான் சிக்கனமாக செலவு மேற்கொண்ட்டாலும் ஒரு கால கட்டத்தில் அதிக சுமையை ஏற்படுத்தி விடும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டிய கால கட்டம் ஆகும்

பரிகாரம் :

பெருமாள் ,சனீஸ்வரன், ஐயப்பன் வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்

மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.

எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்

நன்றி

வாழ்க வளநலமுடன்

Blog at WordPress.com.

%d