சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Meena Rasi
சனி பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2017 – 2020
திருக்கணிதப்படி : (Thirukkanitham)
==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.
வாக்கியப்படி : (Vaakkiyam)
=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 9 மிடத்தில் மத்திம சனியாக இருந்து கொண்டு பல நல்ல பலனான தேவைக்கேற்ற பணவரவு, அட்டமசனியில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்திருப்பார், பூர்வீக சொத்தில் பிரச்சினை, தந்தையுடன் மனகசப்பு, தூரதேச பயணம், ஒப்பந்த தொழிலில் மேன்மை, லாபம், திருமணம், சுபகாரியங்கள் நடந்திருக்கும், கோவில் திருப்பணிகள், யாத்திரை சென்று வந்து இருப்பீர்கள்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் 10 மிடத்தில் அமர்ந்து 3,7,10 ஆம் பார்வையாக 12, 4, 7 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல அசுப பலன்களை தரவுள்ளார்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் தொழில், கவுரம், ஜீவனம் எனப்படும் 10 மிடத்தில் அமர்ந்து பல அசுப பலன்களான தொழில் / வேலை வழியில் பாதிப்புகள் சந்திக்க செய்வார், உறவுகளில் பிரச்சினைகளை தருவார், சேதாரம் தருவார், அவமான அடைய வேண்டிய சந்தர்பத்தை ஏற்படுத்துவார், உடல் நலியும் வேதனயையும் உண்டாக்குவார், அலைச்சல் திரிச்சல் ஏற்படும், லாபம் கிட்டாத காலம், களத்திர சுகமும் வீட்டின் அமைதியும் கெடும், பதவி / அதிகாரம் பறிபோகும், வெளியூர் வேலை மாற்றம், வீடு மாற்றம் உண்டாகும், வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும், பணப்பற்றாக்குறை, தீராப்பகை உண்டாக்குவார் எனவே கவனமுடன் செயல்பட நன்மை பயக்கும்.

உடல் ஆரோக்கியம் : (Health)
======================
உடல் நலம் கெடும், மன சுகம் கெடும், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், தாய், கணவன் / மனைவிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும், உடல் நலியும் வேதனைகள் உண்டாகும், தூக்கமின்மை உண்டாகும், இருதயம், இடுப்புக்கும்-வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரச்சினைகள் தோன்றும, வாகன விபத்தில் முட்டி முழங்கால் அடிபடும் / எலும்பு முறிவுக்கும் வாய்ப்புண்டு
பரிகாரம் : (Pariharam)
தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு
உத்தியோகம் / வருமானம் : (Employment and Income)
=========================
வேலை பறிபோகும் காலம் எனவே கவனமுடன் இருக்கவேண்டும் இருக்கும் வேலையை விடவேண்டாம் சிலருக்கு நல்லவேலையும் மாற்றமும் உண்டாகும், வேலையில் கெடுபிடி அதிகரிக்கும், விரும்பாத இடமாற்றம உண்டாகும் ஏற்று கொள்ளவும், வேலையில் குறுக்கீடுகள் அதிகரிக்கும், மேல்நிலை அதிகாரிகள் தொந்தரவு அதிகரிக்கும், வேலையில் அலைச்சல் போக்கு காணப்படும்,சம்பள உயர்வு பதவி உயர்வுகள் எதிர்பார்த்த படி அமையாது, சிலருக்கு பதவி குறைப்பு / சலுகைகள் குறைப்பு உண்டாகும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டாது, மற்றவர்களின் பணியையும் சேர்த்து பார்க்கும் சூழல் உண்டாகும்
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
தொழில் / வியாபாரம் / வருமானம் : (Business / Trading / Income)
======================================
தொழில் முடங்கி போகும் சூழல் உண்டாகும், எல்லாருடைய கெடுபிடிகள் அதிகரிக்கும், ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டாது, இயந்திரங்களின் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் மற்றும் அடிக்கடி பழுதாகி உற்பத்தி குறையும், தொழிலை விரிவுபடுத்த முடியாத காலம், அதிகாரிகளின் கெடுபிடி உண்டாகும், அரசால் அடிக்கடி சோதனை நடைபெறும், வங்கி கடன் கிடைக்காது தாமதம் ஆகும், எதை தொட்டாலும் ஜவ்வாக இழுத்து கொண்டு போகும் முடிவும் கிட்டாது சங்கடமும் பணமுடையும் உண்டாகும். தேவையற்ற வகையில் முதலீடு செய்வதை தவிர்க்கவும், பாக்கிகள் வசூல் ஆகாமல் நின்று பணமுடை உண்டாகும்
பரிகாரம் : (Remadies)
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு
பெண்கள் : (women)
================
கன்னி பெண்களுக்கு திருமணம் தடைபடும் காலம், முதிர் கன்னிகளுக்கு திருமணம் நிறைவேறும், பணிசெய்யுமிடத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் பணியாற்ற சிறப்பு, வேலைப்பளு கூடும், பணிமாற்றம்,இடமாற்றம் உண்டாகும், தேவையற்றவைகளில் முதலீடு செய்வது நஷ்டத்தை தரும்.தேவையற்ற விஷயத்தில் தலையிட வேண்டாம், ஜாமீன் போடுவதை தவிர்க்கவும், சட்டசிக்கல் வரும், கவுரவம் கெடும் காலம். வெளிய்டத்தில் ஆண்களுடன் கவனமாக பழக வேண்டும். கண்ணியம் கட்டுபாடுடன் நடந்து கொள்ள வேண்டிய காலம்
பரிகாரம் (Remedies)
=========
திருநள்ளாறு சனீஸ்வரன் வழிபாடு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு
அரசியல்வாதிகள் : (Politicians)
========================
பதவிகள் பறிபோகும், கவுரவ பதவிகள் பறிக்கப்படும், எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும், வேண்டாத தொந்தரவுகள் உருவாகும், பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படும், ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும், அவமானங்கள் ஏற்படும், தூக்கம் கெடும், அவஸ்தைகள் அதிகரிக்கும், எதரிகளின் பலம் கூடும், அதிகாரங்கள் வீழ்ச்சி அடையும், வருமான பற்றாக்குறை உண்டாகும், தலைவரின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்
பரிகாரம் : (Remedies)
அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு
விவசாயிகள் : (Agriculturist)
=======================
மகசூல் குறையும், நஷ்டம் உண்டாகும், பயிரில் பூச்சி தொல்லைகள் அதிகரிக்கும், கடன் கிடைப்பதில் தாமதம், விளைநிலம் விற்கும் சூழல் உண்டாகும், பணப்பற்றாகுறையால் எல்லாவகையான பயிர் பாதிப்புகள் வந்து சேரும்
பரிகாரம் : (Remedies)
குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு, கோவிலுக்கு விளைந்த பொருளை தானமாக கொடுக்க சிறப்பு,
மாணவ மாணவியர்கள் : (Students)
=============================
பட்டபடிப்பு, ஆராய்ச்சிகல்வி , வெளிநாட்டில் தங்கிபடிக்கும் மாணவ மாணவிகள் கல்வி தடைபடும், கவனமாக படிக்க வேண்டிய காலம், அரியர்ஸ் உண்டாகும், பலரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், கல்வியில் மந்தம் கவனம் சிதறும் காலம், வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்களின் ஆசை தள்ளி போகும், வங்கி கடன் கிட்டுவதில் தடை உண்டாகும்
பரிகாரம் : (Remedies)
ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்
கலைஞர்கள் : (Artists)
===================
புதிய படைப்புகள் தடைபடும், தேவையற்ற முதலீடு தவிர்ப்பது சிறப்பு, கவுரவ பதவிகள் பறிபோகும், பதவி பட்டம் நற்பெயர் கெடும், கவுரவ பாதிப்புகள் உண்டாகும், பணத்தட்டுப்பாடு காரணமாக உங்கள் புதிய படைப்புகள் வெளிவருவதில் சிக்கல் நீடிக்கும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது சிறப்பு தரும், சட்டசிக்கல் வரும்,
பரிகாரம் : (Remedies)
சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
Very accurate