ரிஷப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019

4,091

விளம்பி வருட பலன் ரிஷப ராசி

ரிஷப ராசி (50%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவானும்,சனி பகவானும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால்

💑 திருமணம் தடைபடும், தள்ளி போகும், வரன் அமைவதில் கால தாமதம் ஆகும், திருமண விஷயத்தில் குழப்பமே மிஞ்சம், குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும், சிலருக்கு இந்த காலகட்டத்தில் நடைபெறவிருந்த திருமணமே நின்று விடும், குழந்தை பாக்கியம் தாமதப்படும், உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

🏠புதிய நிலம்,வீடு வாங்க ஒப்பந்தம் போடுவதை தவிர்த்து கொள்ளவும், யாரையும் நம்பி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்,

🛵🚗புதிய வண்டி வாகனம் வாங்குவதை தவிர்க்கலாம், இருக்கும் வண்டி வாகன செலவுகள் அதிகரிக்கும், வண்டி வாகன பயணம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும், இரவு தனி வாகண பயணம் தவிர்த்தல் உத்தமம்

📖 படிப்புகள் தடைபடும், விரும்பிய கல்வி அமைவதில் தடை உண்டாகும், மேல்படிப்பு சேர முடியாமல் போகும், கல்வி கடன் கிடைப்பதில் இழுபறி நீடிக்கும், மதிப்பெண்கள் குறையும்

வியாபாரம்/தொழில் செய்வோர் பணவிஷயத்தில் கவனம், விஸ்தரிப்பு தள்ளி வைக்கலாம், கடன் வசூல் ஆவதில் இழுபறி, திட்டமிட்ட படி பணிகள்/ பண வரவுகள் அமையாது, புதிய வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும், பதவி/சம்பள உயர்வு தள்ளி போகும், இருக்கும் வேலையை தக்க வைப்பதிலே போராட வேண்டியிருக்கும், விரும்ப தகாத இடமாற்றம்,மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்படும்

🕉திட்டமிட்ட தூரதேஷ பயணம் தடைபடும்

🔘புரட்டாசிக்கு பிறகு குருபகவான் சாதகமாக மாறுவதால் நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்

வரன்/திருமணம் கூடி வரும், தொழிலில் உள்ள கடன் / பாக்கிகள் வசூல் ஆகும், தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும்,புதிய வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கூடி வரும்,நல்ல பணியில் இடமாற்றம்/பதவி/சம்பள உயர்வு ஏற்படும்,நிலம்/வீடு வாங்கும் காலம், பந்து ஜன விரோதம் மாறும் நன்மை ஏற்படும், மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள், கல்வி கடன் கைக்கு கிட்டும்,படிப்பில் பாராட்டு சான்றிதழ் கிட்டும்

பரிகாரம்
=======

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்ற்றி வழிபாடவும

நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபாடு

அனாதை இல்லத்துக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொறுத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More