சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2017 – 2020
===============
திருக்கணிதப்படி :
==================
கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.
வாக்கியப்படி :
=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் ராசியில் இருந்து கொண்டு ஏழரை சனியில் ஜென்ம சனியாக இருந்து செய்தொழிலில் அலைச்சல், திரிச்சல், அலுவலகத்தில் வேலைப்பளு, உற்பத்தி தேக்கம், அதிகப்படியான தேவையற்ற பயணம், எல்லாவற்றிலும் தடை தாமதம், அவமதிப்பு, கெடுபிடி, நோய், வறுமை, கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், கணவன் மனைவி பிரிவு, மேன் மக்கள் விரோதம், திருட்டு, சகோதர பகை, சில அரிஷ்டங்களை சந்தித்து இருக்கலாம், வாக்குவாதம் எதிலும், நெருங்கிய உறவினர் / நண்பர் வழியில் துக்க செய்தி, வம்பு வழக்கு இப்படி பல கெடு பலன் மற்றும் இன்னல்களை சந்தித்திருப்பீர்கள்
இனி சனிபகவான் அடுத்து உங்கள் இரண்டாமிடம் எனப்படும் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 4, 8, 11 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய காலமாக தான் இருக்கும்
இனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் கடைசி சனியான் பாத், குடும்ப,வாக்கு சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டாண்டும் பல கெடு பலனான தனம்,வாக்கு,படிப்பு,பட்டம்,பதவி,கண் சம்பந்தமான பிரச்சினை, பொருள் விரையம், வண்டி வாகன விபத்து, தாயார் மனைவிக்கு ஆடு மாடு இவைகளுக்கு பீடை, பணமுடை. வாக்குவாதத்தில் தோல்வி, வழக்கில் தோல்வி, காலில் காயம், வாதம், முடக்கம் ஏற்படும், இது போல பல இக்கட்டான சூழ்நிலை உண்டாகும் எனவே சுதாரித்து கவனமுடன் காலம் கடந்த வேண்டும்

உடல் ஆரோக்கியம் :
======================
உடல் நிலை கடந்த இரண்டைரை வருடம் போலவே தொடரும், குறிப்பாக கால் பகுதியில் கவனமாக இருக்க வேண்டிய காலம், காலில் அடிபடும்,வாதம்,முடக்கம் உண்டாகும் காலம். வயது முதிர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இவர்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்படலாம். தீராத அலைச்சல் உண்டாகும், வாழக்கையில் உற்சாகமோ ஊக்கமோ ஏற்படாது, சரியான நேரத்தில் உணவருந்த முடியாத சூழலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் குறையும் போது தகுந்த மருத்துவம் செய்து கொள்வது அவசியம் இந்த மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும் காலம்
பரிகாரம் :
தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு
.
உத்தியோகம் / வருமானம் :
=========================
இதுவரை உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் / தடைகள் தொடரும், சிலருக்கு வேலை இழப்பு உண்டாகும். எதிர்பாராத இடமாற்றம், அலைச்சல் திரிச்சல், சம்பள உயர்வுக்கு பதிலாக மெமோ தருவார்கள், சலுகைகள் பறிக்கபடும், எதிலும் லாபம் இல்லாத காலம், வேலை போட்டிக்கு ஆட்கள் அதிகம் வருவார்கள். வருமான பற்றாக்குறை தொடரும் காலம். எனவே இருக்கும் கவனமுடன் செயல்பட்டு இருக்கும் வேலையில் இருத்து மாறாமல் செயல்பட சிறப்பு
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், , முதியோர் இல்லத்துக்கு உதவிகள்
தொழில் / வியாபாரம் / வருமானம் :
======================================
தொழிலில் உற்பத்தி குறையும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், அதனை விற்க அலைச்சல் திரிச்சல் உண்டாகும், விற்ற பணம் கைக்கு வருவதற்குள் பெரும்பாடாய் இருக்கும், பணப்பற்றாக்குறை தொடரும், அடிக்கடி மெசின்கள் பழுது ஏற்படும். தொழில் விரிவாக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும், எதிலும் அகல காலை வைத்து அவஸ்தை பட வேண்டாம். தொழில் பேச்சுவார்த்தையில் தோல்வி எனவே கவனமாக இருக்க வேண்டும்,
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு
பெண்கள் :
==========
பெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், வேலைபார்க்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் வேலை பார்க்கவேண்டும், அவப்பெயர், இடமாற்றம், குற்றம் சுமத்துவர் மேலாதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், அலைச்சல் திரிச்சல் ஏற்படும் காலம், பணமுடையும் சிக்கலும் உண்டாகும் காலம். கணவன் மனைவி பிரிவினை உண்டாகும் காலம், காலில் காயம், எலும்பு முறிவு ஏற்படும்
பரிகாரம் :
=========
சனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு
அரசியல்வாதிகள் :
===================
ஏற்கனவே இருந்து வந்த நிலைமை நீடிக்கும், பலரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், அலைச்சல் திரிச்ச்சல், நேரத்திற்கு சாப்பிட இயலாத நிலை, தனநிலை மோசம் ஆகும் காலும், வெட்டி / தண்ட செலவுகள் அதிகரிக்கும், வீடு வண்டி வாகனம் விற்று செலவழிக்கும் சூழல் உண்டாகும். எதிலும் வாக்கு வாதம் உண்டாகும், வம்பு வழக்குகள் ஏற்படும், தலைவர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், ரெய்டு சம்பந்தமான பிரச்சினை, தத்துவம் பேசும் காலம்
பரிகாரம் :
அன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான் வழிபாடு
விவசாயிகள் :
==============
உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்
பரிகாரம் :
குலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு
மாணவ மாணவியர்கள் :
==========================
மேல்படிப்பு தடை படும், விரும்பிய துறை கிடைக்காது, படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் கனவு தடைபடும், படிப்பு செலவுக்கு பற்றாக்குறை உண்டாகும், உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் உண்டாகும், கல்வி கடனும் கிடைக்காமல் அவதி படுவீர்கள்
பரிகாரம் :
ஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்
கலைஞர்கள் :
===============
இதுவரை இருத்த பிரச்சினைகள் நீடிக்கும், புதிய சாதனை படைப்பதில் சிரமம் உண்டாகும், பணப்பற்றாக்குறை ஏற்படும், ஏற்கனவே உள்ள துறையில் இருந்து மாற நினைப்பவர்கள் பலமுறை சிந்தித்து மாற வேண்டும், எல்லாமே யோசித்து செய்யவேண்டிய காலம்
பரிகாரம் :
சரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
You must be logged in to post a comment.