ராசி நாதன் புதன் சதுர் கேந்திரம் எனும் 4 ல் மற்றும் 4ம் அதிபதி குரு ஜென்ம ராசியில் என பரிவர்த்தனை பெற்றிருக்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு திருமணம், வீடு,மனை, வாகனம் , உப தொழில் போன்றவற்றிக்கான சிந்தனை மோலோங்கியிருக்கும், அதில் வெற்றியும் அடைவீர்கள்.
கணவன் – மனைவி வழி உறவினர்களால் நன்மை, அவர்களின் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய பேச்சுக்கள் துவங்கும். கடன், பொருளாதார நிலையால் பாதியில் நின்றிருந்த வீடு கட்டும் பணி சிறப்பாக தொடர்ந்து முழுமையடையும். வீட்டு உபயோக பொருட்க்கள், அழகு சாதன பொருட்க்களை அதிகம் வாங்குவீர்கள். பலருக்கும் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ஜென்ம குருவால் அலைச்சல், முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படடாலும், திருமணம் , கணவன்,மனைவி ஸ்தானமான 7ம் இடத்தினை அதன் அதிபதியான குரு பார்வை செய்வதால் திருமண ஆகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர், கணவன் – மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குழந்தை செல்வம் தாமதம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். பூர்விகம் மற்றும் தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சுமூக முடிவிற்கு வரும்.
விவசாயம், வீடு, மனை, வாகனம் வாங்கி, விற்பது போன்ற தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.
ராகு, கேதுவின் சற்று சாதகமான தன்மையால் எண்ணம், செயல்களில் ஆர்வம் கூடும். பலருக்கு தொழில், வேலை தொடர்பான வெளிநாடு பயணம் சென்றுவர வாய்ப்புண்டு. வெளிநாட்டு தொடர்பு வர்த்தகத்திலும் லாபம் உண்டு, பழைய கடன்கள் குறைந்து புதிய கடன்கள் எளிதாக கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்கள் விலகுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமூகமான போக்கு நிலவும்.
இந்தாண்டு சனிப்பெயர்ச்சி சற்று சாதகமில்லை என்றாலும், கவலை கொள்ள தேவையில்லை, புதிய முயற்சிகள், நண்பர்களிடம், பணபரிவர்தத்தினை , வாகன போக்குவரத்து போன்றவற்றில் சற்று கவனம் தேவை. பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களில் நன்கு ஆலோசித்து இறங்குங்கள். உடல் ரீதியாக சற்று சோர்வு நிலை, மருத்துவ செலவு ஏற்படலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், உயர்கல்வியில் தடை ஏற்படடவர்களுக்கு மீண்டும் படிப்பினை தொடர்ந்து வெற்றி அடைய வாய்ப்புண்டு.
எதிலும் இரண்டு யோசனை என்பது உங்களது ராசிக்குரியது, எனினும் ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது எதிலும் முழுமையான பலன் தராது என்பதை கவனத்தில் கொண்டு புதிய செயல்களில் நன்கு ஆலோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்கே.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு, புதன்கிழமை பெருமாள் செய்வதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பதும் சிறந்த பலன்களை தரும்.