
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கடக ராசி | 2017 New Year Rasi Palangal Kataka Rasi
ராசி நாதன் சந்திரன் 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உற்சாகம் மிகுந்ததாகவும், வளர்ச்சி நிறைந்த ஆண்டாகவும் இருக்கும்.
புதிய சிந்தனை , செயல்களில் ஆர்வமும், வேகமும் கொள்வீர்கள்,
திருமணம் போன்ற சுப முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி கிட்டும்,
கணவன், மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும்.
கூட்டு தொழில், புதிய வர்த்தக ஒப்பந்தம், வெளிநாடு தொடர்பு வியாபாரத்தில் முதலீடுகளால் லாபம் ஏற்படும், தொழில், வியாபார கடன்கள் எளிதாக கிடைக்கும். வேலையில் விரும்பிய இடமாற்றம் , ஊதிய உயர்வு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாரா திடீர் தனவரவு உண்டு.
இந்த வருடம் பயணங்கள் அதிகம் இருக்கும், நீண்ட நாள் எண்ணிய புண்ணிய ஸ்தலங்களுக்கு ஆன்மிக பயணமும் மற்றும் விரும்பிய சுற்றுலா ஸ்தலங்களுக்கும் () சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு அமையும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஆர்வம், தந்தை வழி சொத்துக்களால் லாபம் ஏற்படும்.
இந்தாண்டு நடைபெறும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதே,
உபஜெய ஸ்தானமான 6 இடம் சனி பகவானுக்கு உகந்த இடமே,
தொழில்,உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியையும்,வருமானத்தையும், வழக்குகளில் வெற்றியையும், நல்ல தன வரவையும் தரும்.
ராசிக்கு 2 மிட ராகு , 8 மிட கேது சற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல், பிறருக்கு வாக்கு கொடுப்பது, வாகன போக்குவரத்து போன்றவற்றில் கவனம் தேவை, வாகன பராமரிப்பு அவசியம், உணவினால் உணவு முறைகளால் உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்புண்டு, முடிந்த வரை நேரம் தவறிய உணவு, வெளியிட உணவு முறைகளை தவிர்ப்பது நலம். உடல் ரீதியான இனம்புரியாத தொந்தரவுகள் அவற்றால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
குடும்பத்தில், பணியிடத்தில் தேவையற்ற பேச்சு , வாக்குவாதம் இவற்றை விடுத்தால், தேவையற்ற அவப்பெயர், மனஸ்தாபம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
நகை ஆபரணங்கள் கடன், அடமானம் மற்றும் பழுது அடைந்தல் போன்றவை ஏற்படும். இவற்றை பிறரிடம் கொடுத்து வாங்குதல், வெளியே அணிந்து செல்லும் பொழுதும் கவனம் தேவை,
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், உயர் கல்வியில் சேர விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
பேச்சு, செயலில் வேகத்தை குறைத்து, விவேகத்தை கடைபிடித்தால் வெற்றி மேல் வெற்றியே.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
திங்கட்கிழமை சிவ வழிபாடு, செவ்வாய்கிழமை துர்க்கை, காளி அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்றோர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
Comments are closed.