2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி | 2017 New Year Rasi Palangal Kumbha Rasi

952

 

கும்பம்   ( அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை  )
கும்ப   ராசி அன்பர்களுக்கு ஆங்கில புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

 

ராசி நாதன்  சனி   தசம   கேந்திரம்  எனும்  10 ல் இருக்க  மற்றும்  10ம் அதிபதியான செவ்வாய் ஜென்ம ராசியில்  என  பரிவர்த்தனை பெற்றிருக்க  தொடங்கும் இந்தாண்டு  உங்களுக்கு  தொழில், வியாபாரம்,  வேலை   போன்றவற்றிக்கான   சிந்தனை   மோலோங்கியிருக்கும்.

 

அதே  நேரத்தில் ராசியில் கேது, 7ல் ராகு  மற்றும்  8ல் குரு  ( அஷ்டம குரு  காலம் )  குடும்பத்தில் மருத்துவ  செலவுகள்   அதிகரிக்கும்,  நண்பர்கள், உறவினர்களால்  சில  பிரச்சனைகள்  ஏற்படலாம், வீண்  விவாதங்களை  தவிர்ப்பது  நலம்.

 

தனவரவு சுமாராக  இருக்கும்,   பிறரிடம்  பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

 

உடல்  நலனில் அக்கறை கொள்வது அவசியம், சிலருக்கு தொழில்,வேலை  தொடர்பான  கோர்ட், வழக்கு விவகாரங்களில் சாதகமற்ற நிலை  இருக்கும்,  மற்றவர்களுக்காக   ஜாமீன் கொடுப்பதும்,  வாக்குறுதிகளை   கொடுப்பதும்  அவபெயரை  உருவாக்கும்.

 

நீண்ட நாட்கள்  விற்காமல் இருந்த நிலம் , வீடு   போன்ற  சொத்துகள் விற்பனையாகும்.

 

குரு  ராசிக்கு  2, 4, 12  இடங்களை  பார்வை செய்கிறார், தேவை கேற்ற  பணவரவு  உண்டு,    சில தடை, தாமதங்களுக்கு  பிறகு முயற்சிகளில்   வெற்றி கிடைக்கும்.  திடீர்  பண வரவிற்கும்  வாய்ப்பு உண்டு.  வீடு, நிலம், வாகனம்  போன்றவற்றின் மூலம் கடன் கிடைக்கும்.  சிலருக்கு வீடு, மனை போன்ற பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.

 

இந்தாண்டு   நடைபெறும் சனிப்பெயர்ச்சி   ராசிக்கு    11 இடம் சனி பகவானுக்கு உகந்த இடமாகும், நன்மைகள் அதிகம் நடைபெறும், தொழிலில் நல்ல லாபம், பணியில் பதவி உயர்வு, உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறுதல் போன்றவை நடைபெறும். கவலைகள் குறையும், மன மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும்.

 

மூத்த சகோதர்களால் நன்மை, வரவேண்டிய பணம் கை வந்து சேரும், தொழில் கடன்கள் அடைபடும், தாரளமான பண புழக்கம் ஏற்படும்,

 

நீண்ட  நாள்   தாமதமான  எதிர் பார்க்கும் காரியங்கள்  வெற்றி பெறும்.

 

சனிபகவான் ஜென்ம ராசி, 5, 8 ம் இடங்களை பார்வை செய்கிறார், சிலருக்கு பூர்வீக சம்பந்தமான பிரச்சனைகளில் முடிவு ஏற்படும், நீண்ட நாள் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய கூடும். நிலம், சொத்துகளின் பேரில் கடன் வாங்க நேரிடலாம்.

 

கவலையை விடுங்கள், முயற்சியை  முன்னெடுத்து  செல்லுங்கள்,   தாமதித்தாலும் வெற்றி பெறுவீர்கள்

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில்  அம்மன்  வழிபாடு செய்வதும்,  புதன் கிழமைகளில்  பெருமாள்   வழிபாடு  செய்வது  ஆதரவற்ற  குழந்தைகளுக்கு  உணவு, உடை போன்ற  இயன்ற உதவிகளை செய்வது     சிறந்த பலன்களை தரும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More