ராசி நாதன் சனி லாப ஸ்தானம் எனும் 11 ல் இருக்க மற்றும் குரு 9ம் இடத்திடத்திலிருந்து ஜென்ம ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு தொழில், உத்தியோகம் சார்ந்த இடப்பெயர்ச்சி, அசையா சொத்துக்களின் மீதான முதலீடு, புதிய இடங்களுக்கான பயணம் போன்றவை முக்கியத்துவம் பெற்றதாக அமையும்.
தேவைக்கேற்ற தன வரவு சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
மூத்த சகோதரர்கள், அந்நிய நபர்களால் ஆதாயம் ஏற்படும், தொழில், உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி எதிர்பார்க்கலாம், வேலை பளு அதிகரித்தாலும் ஊதிய உயர்வு உண்டு.
இந்தாண்டு நடைபெறும் சனிபெயர்ச்சியானது விரையசனி காலமாகும். தொழில், வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த லாபம் இன்மை, மந்தநிலை, ஊர், வீடு இடமாற்றம் போன்றவை நடக்கும்.
புதிய சொத்துக்கள், இடம், நிலம் போன்றவை வாங்கும் போது கவனம் தேவை, நிதி பற்றாக்குறை ஏற்படும், மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
நம்பிக்கைக்குரியவர் என்றாலும் பிறருக்காக ஜாமீன் போடுவது, பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றை ஆலோசித்து செய்தல் நலம்.
தொழில், வேலையில் தொழில் போட்டியாளர்கள் உருவாக வாய்ப்புண்டு. இடமாற்றம் விரும்புபவர்கள் புதிய வேலை வாய்ப்பு உறுதியான பின்பே இருக்கும் வேலையை விடுதல் நலம். புதிதாக வேலை தேடுவோருக்கு வெளிநாடு, வெளியூர் வேலைவாய்ப்புகளே அதிகம் வரும்.
பயணங்களில் கவனமாக செல்வது நல்லது, பொருளிழப்பு ஏற்படலாம். வெளிநாடு முயற்சி உடையவர்களுக்கு வெற்றி தரும்.
குடும்பத்தினர், உறவினர்களிடம், தொழில், வேலையில் பகை ஏற்படலாம், வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு தொழில், வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் நிலையும், தன் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகை வீட்டு செல்லும் நிலையும் உருவாகும்.
சனிபகவான் ராசிக்கு 2, 6, 9 ம் இடங்களை பார்வை செய்கிறார். குடும்ப மற்றும் சகோதரர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும், கடன்கள் எளிதில் கிடைக்கும், பூர்வீகம், தந்தை வழி உறவுகளால் பிரச்சனை ஏற்படலாம் .
அதே நேரத்தில் குரு பகவான் ராசிக்கு 9ம் இடத்திலிருப்பதும், ஜென்ம ராசி, 3ம் இடம், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடங்களை பார்வை செய்வதால், இறையருளால், துணிவுடன் எதிர்வரும் பிரசனைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சகோதரர்களுடான கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்ப்படும், பூர்வ புண்ணிய வீடு, நிலம் போனற்வற்றில் பிரச்சனைகள் சுமூக முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியம் தாமத்தித்தவர்களுக்கு குழந்தை செல்வம் கிட்டும்.
பிறரை எதிர்பாராமல் சுய முயற்சியுடன் செயல்படும்காரியங்களில் தாமதித்தாலும் வெற்றி உறுதி, தொழில், வியாபார தொடர்பான பயணங்களால் லாபம் உண்டு.
மாணவர்கள் கல்வியில் விரும்பிய இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும், முக்கிய பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் கவலை கொள்ள தேவையில்லை.
எதிர்கால லட்சியம், இலக்கை நோக்கி ஆர்வமுடனும், கவனமுடன் அடியெடுத்து வைக்கக்கூடிய நேரமிது. உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாடு, முதியோர், உடன் ஊனமுற்றோர்களுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செயவது சிறந்த பலன்களை தரும்.