மீனம் ( பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை )
மீன ராசி அன்பர்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ராசி நாதன் குரு ராசிக்கு 7 ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு குடுமப்த்தில் திருமணம், வீடு, மனை, வாகனம் போன்ற சுப காரியங்களில் வெற்றியை தரும் ஆண்டாக இருக்கும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால், உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கு கூடும்.
குறிப்பாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும், வர வேண்டிய பாக்கி தொகைகள் கைவந்து சேரும், தொழில்,வியாபரத்தில் மேன்மை அடைவீர்கள், மன மகிழ்ச்சி, உற்சாகம் பெறுவீர்கள், சிலருக்கு வேலையில் ஊதிய உயர்வும்,விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.
தொழில்,வியாபாரம், விரிவாக்கம், புது கிளை ,உப தொழில் முயற்சி கைக்கூடும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும், மறைமுக எதிரிகள், போட்டியாளர்கள் ஒதுங்குவார்கள்,
கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும், குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் முக்கிய பொருட்கள் வாங்குதல், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடை பெறுவதற்கும், குழந்தை தாமதம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் சாதகமான காலம்.
அரசியல், பொதுசேவையில் உள்ளவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.
குரு ஜென்ம ராசி 3, 11 இடங்களை பார்வை செய்கிறார், மன சோர்வு நீங்கி, உற்சாகமும், மகிழ்ச்சியும் உருவாகும், சகோதர்களால் நன்மையை யும், முயற்சிகளில் வெற்றியும், அதிர்ஸடமும் உண்டு.
இந்தாண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடத்திலிருந்து 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
தொழில், வேலையில் போட்டிகள் ஏற்படும், வேலைபளு அதிகரிக்கும், உங்கள் திறமைகள் வெளிபடும், சிறிது அலைச்சல், சோர்வு தரும்.
பொது சேவை, சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிலருக்கு தொழில், வேலை இடமாற்றம் ஏற்படும், தொழில் கடன்கள் கிடைக்கும்.தொழில் மூதலிடுகளில், வேலையாட்களிடம் கவனம் கொள்வது நல்லது.
அதே நேரத்தில் புதிய நண்பர்கள், தொழில் பங்குதாரர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும், வீடு, நிலம், தொழில் தொடர்பான பத்திரங்களில் கையெழுத்திடும் முன் சரிபார்ப்பது நலம்.
தொழில் ரீதியான வெளிநாடு முயற்சி வெற்றி பெறும். புதிய வேலைக்காக முயற்சிபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
சனிபகவான் ராசிக்கு 12, 4, 7ம் இடங்களை பார்வை செய்கிறார்.
சிலருக்கு வீடு, வாகனங்கள் விற்கும் அல்லது மாற்றும் நிலையும், உடல் நலனில் சிறிது பிரச்சனைகளும் உருவாகலாம். கணவன், மனைவிடையே சிறிய பிரச்சனைகள் தரலாம். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து செல்வது நலம்.
திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் நீண்ட நாள் கனவுகள், எண்ணங்கள் செயலாகும் நேரமிது.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செய்வது சிறந்த பலன்களை தரும்.