
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி | 2017 New Year Rasi Palangal Simha Rasi
ராசி நாதன் சூரியன் 5ல் இருக்க, ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் (தர்ம கர்மாதிபதிகள் ) இணைந்து 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக இருக்கும்.
தான ஸ்தானம் எனும் 2-ஆம் இடத்தில் இருக்கும் குருவினால் நன்மையான பலன்கள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் தடை பெற்றிருந்த சுப காரியங்கள் மன நிறைவாக நடைபெரும். சுப செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை நிலம், வீடு, போன்றவற்றில் முதலீடாக மாற்றி கொள்வது சிறப்பு. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். மறைமுக போட்டியாளர்கள் பின் வாங்குவர்.
நீண்ட நாள் இருந்த இனம்புரியா நோய்கள், வலிகள் நீங்கும், உடல் ஆரோக்கியம் கூடும், மருத்துவ செலவுகள் குறையும்.
தேவைக்கேற்ற பண வரவு நனறாக இருக்கும், வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் வந்து கைவந்த சேரும்.
இந்த வருடம் இன்சூரன்ஸ், மெடிக்கல் பாலிசி தொடர்பான தொழில் செய்ப்வர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
இந்தாண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியும் சற்று சாதகமாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்றிருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும்.
தொழில், வேலைக்கு தகுந்த தொழிலாளர்கள் அமைவார்கள்.
ஏற்கெனவே வாங்கிருந்த கடன்கள் குறையும், நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களின் பேரில் புதிய கடன்கள் கிடைக்கும்.
நிலுவையில் உள்ள நீண்ட நாள் வழக்குகளில் சாதகமான வெற்றி கிடைக்கும்.
ராகு, கேது பெயர்ச்சி வரை மன சோர்வு , முன்கோபம், குழப்பம், நண்பர்கள், நம்பியவர்களால் ஏமாற்றம் போன்றவை இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன் நன்கு ஆலோசிப்பது நலம். சிறிய, சிறிய பிரச்சனைகள் கூட பெரியதாக தோன்றும், பழைய இழப்புகளை நினைத்து வருந்துவதை விடுங்கள்.
கணவன் – மனைவி உறவில் மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். தொழில் கூட்டாளிகள், புதிய நண்பர்களால் சில இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும்.
மன அமைதிக்கு தியானம் , யோக போன்றவை கைகொடுக்கும்.
எந்த காரியங்களிலும் பிறரை முழுவதும் சாராமல் நீங்கள் முன்னெடுத்து சென்றால் தாமதமானாலும் வெற்றி உறுதி.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்ற முதியோர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வது சிறந்த பலன்களை தரும்.
Comments are closed.