2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி | 2017 New Year Rasi Palangal Thula Rasi

1,073

 

துலாம்  (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை  )

 

துலாம்   ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்

 

ராசி நாதன்  சுக்கிரன்   திரிகோணம் எனும் 5ல்   இருக்க  தொடங்கும் இந்தாண்டு  உங்களுக்கு  பல்வேறு  நன்மைகளை வழங்கும் சாதகமான ஆண்டாக  இருக்கும்.

 

இந்தாண்டு  நடைபெறும்  சனிப்பெயர்ச்சியானது  முழுமையாக   ஏழரை  சனி  விலகும்  காலமாகும்.  இதுவரை  இருந்த எதிர்பாரா  இழப்பு, கடன்,  நம்பியவர்களால்  ஏமாற்றம், காரிய  தாமதம்  போன்ற  சாதகமற்ற  சூழ்நிலை   கடந்து  விட்டது.  தொழில்,  வியாபாரம், உத்தியோத்தில்  நல்ல  முன்னேற்றமான  காலமாகும்.  உடல், மன  ரீதியான  சோர்வு, கவலை  நீங்கும்.

 

தொழில், வேலை  காரணமாக குடும்பத்தினரை  பிரிந்து  வெளிநாடு, வெளியூரில்  இருப்பவர்கள்  குடும்பத்துடன்  ஒன்று சேர்வர்.

 

குடும்பத்தில்  கருத்துவேறுபடடால்  பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர்.

 

குரு  12ல்  மறைவு  பெற்றிருந்தாலும், ராசிக்கு  6 ஆம் அதிபதி  12ல்  இருப்பது  விபரீத  ராஜ  யோகம்  அடிப்படையில்  நன்மையான  பலன்களையே  அதிகம்  தருவார், வீண்  செலவுகள்  குறைந்து  சுப  செலவுங்கள்  அதிகரிக்கும்,   அசைய சொத்து  எனும்  நிலம் வாங்கும்  யோகம்  தரும்,  6ம்  அதிபதியான  குரு  6ம்  இடத்தினை  பார்ப்பது

புதிய வேலை வாய்ப்புகள்,  ஊதிய  உயர்வு,  விரும்பிய  இடமாற்றம், உங்களுக்கு  எதிரான  வழக்குகளில் வெற்றி,  தேவைக்கேற்ற தனவரவு  போன்ற  சாதகமான  பலன்கள்   நடைபெறும்.

 

முன்பு  வாங்கிய  கடன்கள் சிறிது, சிறிதாக  அடைபடும்,   தொழில், வியாபாரம்  சார்ந்த  வங்கி  கடன்  கிடைக்கும்.

 

சொந்த  தொழில் செய்ப்பவர்களுக்கு  தகுந்த வெளியாட்கள்  அமைவர்,

வியாபாரத்தில்  மறைமுக  போட்டியாளர்கள் பின்வாங்குவர்.

 

ராகு  லாப,  வெற்றி  ஸ்தானம்  எனும்  11ல்  இருப்பது  புதிய முயற்சிகளில்,  காரியங்களில்   வெற்றியை   தரும்,   மூத்த  சகோதரர்கள்,    நண்பர்கள்,   அந்நிய  நபர்களால்  ஆதாயம்  அடைவீர்கள்,  வெளிநாட்டு  தொடர்பு  ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங்களில்  லாபம்  கிடைக்கும்,     சிலருக்கு   வெளிநாடு சென்று வரும்  வாய்ப்பு  வரும்.

 

கலைத்துறை, விளையாட்டுத்துறை,  பங்கு சந்தை முதலீட்டுளாளர்கள்  போன்றோருக்கு  நல்ல முன்னேற்றம்  ஏற்படும்.  உடல் நலனில் சற்று கவனம் கொள்ள வேண்டும், மருத்துவ செலவுகள் குறையும்.

 

மாணவர்களுக்கு  கல்வியில் ஆர்வம் கூடும்,  விரும்பிய  பாடங்களில்  நல்ல மதிப்பெண்கள்  பெறுவார்கள்.

 

கடந்த  கால அனுபவங்கள் உங்களுக்கு  உண்மையாக உங்கள் மீது  நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்கள்  யார் என்பதை  உணர்த்தியிருக்கும்.

 

கவலையை  விடுங்கள்,  நன்கு  திட்டமிட்டு  செயல்பட  நீங்கள் நினைத்த  வெற்றியை  தரும்  காலமாகும்  இது.

 

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து   நன்மையான  பலன்கள்  அதிகம் நடைபெறும்.

 

பரிகாரம்

சதுர்த்தி  விநாயகர்  வழிபாடு,  வெள்ளிக்கிழமை  அம்மன்  வழிபாடு,  திருக்கோவில்  பணிகளுக்கு நன்கொடை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு   அன்னதானம் செயவது சிறந்த பலன்களை தரும்.

 

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More