2019 புத்தாண்டு பலன்கள் கடக ராசி – New year Rasi Palan 2019 Kataka Rasi

Puthandu rasi palan 2019 Kataka Rasi - New Year Rasi palan kataka Rasi 2019 in Tamil

10,940

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் கடக ராசி

(New Year Rasi Palan 2019 Kataka Rasi – Puthandu Rasi Palan Kataka Rasi 2019 in Tamil)

ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் கடக ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Kataka Rasi)

கடக ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

இந்த ஆண்டு குருபகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்திலும், சனிபகவான் ஆறாம் இடத்திலும், ஜென்ம ராசியில் ராகுபகவானும் ,ஏழாம் பாவத்தில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளனர். அடுத்த 2019 ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகின்றது???

ராசிக்கு குரு ஐந்தாம் பாவகத்தில் இருந்து ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். உங்கள் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு ஒரு சுயபலம் அதிகரிக்கும். உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் உயரும். உங்கள் ராசிக்கு குரு பாக்கியாதிபதி. பாக்கியாதிபதி ராசியை பார்ப்பது சகல பாக்கியங்களையும் தரும் ஆண்டாக 2019 நிச்சயம் இருக்க போகின்றது…

கடந்த சில ஆண்டுகளாகவே கோட்சாரம் பெரிய அளவில் உங்களுக்கு சப்போர்ட் பண்ணல. தற்போது ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன.

குருவின் பார்வை பலத்தால் உங்கள் தன்னம்பிக்கை லெவல் உச்சத்தில் இருக்கும். புண்ணிய காரகன் குரு , புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில் இருப்பது போன ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன்களை அனுபவிக்கும் காலமாகும். குருவின் ஐந்தில் இருந்து ராசியை பார்ப்பதால் திருமணமாகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்..

வெகுநாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். சனி ஆறிலும்,குரு ஐந்திலும், ராகு ,கேதுக்கள் 12,6 மறைவதாலும் ஆண்குழந்தை பாக்கியமே கிடைத்துவிடும். ஆண்வாரிசு யோகம் உண்டு.

பிரிந்து இருந்த தம்பதிகள் ஒருத்தர், ஒருத்தர் அன்பை புரிந்து கொண்டு மீண்டும் சேர்ந்துவாழ தொடங்கி விடுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும்.
சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2019 இருக்க போகின்றது.

ஏதாவது புதிய முயற்சிகள் எடுத்தால் அதில் வெற்றி கிடைக்கும். இப்போது புதிய தொழில் முயற்சிகள் எடுக்கலாம். என்ன செஞ்சாலும் நேரம் நன்றாக இருப்பதால் உங்களுக்கு வெற்றியை தரும். புதியதாக சிலர் அறிமுகமாகி உங்களுக்கு நன்மைகளை செய்வார்கள். ரோட்டில் போறவன் கூட ஏதாவது உதவி செய்துவிட்டு போவான். பேங்க் லோன் கிடைத்து விடும். அரசாங்க உதவி கிடைக்கும்.

தீர்த்த யாத்திரைகள் செல்வீர்கள்…, காசி, ராமேஸ்வரம், என்று கோவில் குளங்களுக்கு சென்று அடுத்த ஜென்மத்திற்கான புண்ணிய பலன்களை அதிகரித்து கொள்வீர்கள்.

உங்களுக்கு ருண,ரோக,சத்ரு ஸ்தானமான ஆறாமிடத்தில் சனியிருந்து, 2019 மார்ச் மாதத்திற்கு பிறகு கேதுவும் சனியுடன் சேர்ந்து,ஆறை ராகுவும் பார்த்து ஆறாமிட காரகத்துவங்களான கடன்,நோய், வம்பு, வழக்கு இவைகளை எல்லாம் அழித்து, அந்த ஸ்தானத்தை கெடுத்து கடன்,நோய்,எதிரி, வம்பு வழக்குகள் இல்லாத வாழ்க்கையை சனி,ராகு,கேதுக்கள் தருவார்கள்.

இதுவரை நோய் ஏற்பட்டிருந்தால் “சூரியனை கண்ட பனிபோல ” நோய் விலகி ஆரோக்யம் கூடும். வழக்குகள் ஏதாவது இருந்தால் வழக்கில் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடமுடியும். கேது ஆறில் இருப்பவர்களை பகைத்து கொள்ளவே கூடாது. காணாப்பிணம் ஆக்கி விடும். எதிரிகள் அழிந்து விடுவர்.

கொடியவர்கள் மூன்று, ஆறு,பன்னிரண்டில் மறைந்து பலனை தரவேண்டும் என்ற விதிப்படி ராகு கேதுக்களால் நன்மைகள் இருக்கும்.
இப்ப ஒரு கெட்ட கிரகம் ,கெட்டது பண்ணாம இருந்தாலே அது நமக்கு நன்மைதான். நமக்கு லாபம்தான்…சனி,ராகு போன்ற பாவக்கிரகங்கள் கெட்ட இடத்தில் சென்று மறைவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்ற அமைப்பில் நன்மைகளை தரும்.

2019 மார்ச் மாதத்திற்கு பிறகு வெளிநாடு சென்று நன்கு சம்பாதிக்க முடியும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் ராகுவால் நன்மைகள் இருக்கும். பன்னிரண்டாம் இடம் என்பது அயன,சயன, போக,மோட்ச,விரைய ஸ்தானமாகும். ராகு பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து சனி,கேதுவால் பார்க்கப்படும் போது விரையங்கள் இருக்காது. செலவுகள் வெகுவாக குறைந்து வருமானம் அதிகரித்து உபரி பணம் மிச்சமாகி

இடம்,பொருள், வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நடந்து போறவங்க சைக்கிளில் போவீங்க. சைக்கிள் வச்சுருக்கறவங்க பைக்கில் போவீங்க.
பைக் வச்சுருக்கறவங்க கார்வாங்குவீங்க…லட்சுமி கடாட்சம் உண்டாகும். நேரம் நல்லாருக்கும்போது இதை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கும். வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் சாதாரண வட்டச்செயலாளர் M.L.A ஆக முடியும்.
.M.L.A வாக இருந்தவருக்கு மந்திரி பதவி கிடைக்கும். மந்திரியாக இருந்தவர் முக்கிய மந்திரியாக ஆகமுடியும்.

மாணவர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவர். .. பாடசாலையில் துரோணாச்சாரியாரின் பரீட்சையில் அர்ஜீனன் குறி எப்படி ஒருமுகப்பட்டு பறவையின் கண்ணை மட்டும் குறி வைத்ததோ அப்படி ,
அதாவது கிளிக்கு பக்கத்தில் உள்ள இலையோ,காயோ,பழமோ,கிளையோ அர்ஜுனனின்
கண்ணுக்கு தெரியவேயில்லை.அதுபோல மாணவர்கள் ஒருமுகப்பட்டு நன்கு படித்து பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்து நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள்.தொழிலதிபர் களுக்கு தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும். பெண்களுக்கு ஆபரணங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் நான் சொன்ன பலன்கள் இன்னும் கூடுதலாக நடக்கும். தசாபுக்திகள் மோசமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் குறைவாக இருக்கும்…

நல்ல காலம் பொறந்தாச்சு…நம்மோட கஷ்டம் எல்லாம் விலகிருச்சு என்று ஆடி,பாடி மகிழக்கூடிய, கொண்டாட்டமான,குதூகலமான, மகிழ்ச்சியான, வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக 2019 ஆங்கில புத்தாண்டு நிச்சயம் இருக்க போகின்றது…பரிகாரங்கள் தேவையில்லை.

நன்றி
வணக்கம்

1 Comment
  1. praba says

    anal enaku neraya problems dan vanthuruku…

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More