
2019 புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி – New year Rasi Palan 2019 Simha Rasi
Puthandu rasi palan 2019 Simha Rasi - New Year Rasi palan Simha Rasi 2019 in Tamil
2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் சிம்ம ராசி
(New Year Rasi Palan 2019 Simha Rasi – Puthandu Rasi Palan Simha Rasi 2019 in Tamil)
ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Simha Rasi)
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???
முன்கோபம், ஆளுமை திறமை, சுறுசுறுப்பு, நிர்வாக திறமை ,தலைமை தாங்கும் பண்பு மற்றும் சொந்த காலில் நிற்கும் சிம்ம ராசி நண்பர்களே! உங்களுக்கு 2019 ஆங்கில புத்தாண்டு எப்படி இருக்க போகின்றது…
உங்களுக்கு குருபகவான் நான்காம் இடத்திலும், சனி ஐந்தாம் இடத்தில் பஞ்சம சனியாகவும், ராகு பன்னிரண்டாம் இடத்திலும், கேது ஆறாமிடத்திலும் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார்கள். சிம்ம ராசிக்கு ராகு,கேதுக்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு பதினொன்று,ஐந்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கின்றார்கள்.
பொதுவாக பாவர்கள் 3,6,11 ல் நன்மைகளை செய்வார்கள். ராகு பதினொன்றாம் பாவத்துக்கு வர இருப்பது தொழிலில் லாபம் மிகுந்து காணப்படும்.. ராகுவால் பணவரவுகள் இருக்கும். ராகுவால் வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் இருக்கும்.
ராகுவால் ஆதாயங்கள் இருக்கும். எடுத்த காரியங்களை திறம்பட முடிக்க முடியும். ராகு பன்னிரண்டில் இருப்பதைவிட பதினொன்றாம் பாவத்தில் இருப்பது அதிகமான நன்மைகளை தரும்.
“மூன்று, ஆறு பதினொன்றில்
ராகு கேது முகம் மலர்ந்து இருக்குமானால்
ஆன்றோர்கள் சகாயம் உண்டாம்;
அதிகார உத்யோகம் உண்டாம்;
சான்றோரும் சினேகமாவர்;
சகலசம்பத்து செல்வம் தோன்றியே
மனமகிழ்ச்சி; சுகமுடன் ஜீவிப்பாரே’
என்பது பாடல்
பெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும். லட்சுமி கடாட்சத்தால் அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். பதினொன்றில் இருக்கும் ராகுவால் சகல சம்பத்துக்களும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ராகு பதினொன்றில் இருக்கும் போது கேது ஐந்தில் அமர்ந்து விடுவாரே ? என்ன செய்வது???
ஏற்கனவே சனி வேறு பஞ்சமச்சனியாக ஐந்தில் அமர்ந்துள்ளார்.சனியுடன் மார்ச் மாதத்திற்கு பிறகு கேது சேர்ந்து குருவின் வீட்டில் அமர்ந்துள்ளதால் அதிகமான ஆன்மீக ஈடுபாடுகளை தரும்.
காசி,ராமேஸ்வரம், கேதர்நாத் போன்ற புனித பயணங்களில், ஆன்மீக பணிகளில் ஈடுபடுத்தும்.
இந்த ராசியை சேர்ந்த ஆன்மீக வாதிகள், மடாதிபதிகள், பொதுநலவாதிகள்,சமூக சேவகர்கள் உலகப்புகழ் பெறுவார்கள்..
கோவிலை சுற்றி கடை வைத்திருப்பவர்கள்,ஆன்மீக தொழில் செய்பவர்களுக்கு இந்த2019 அருமையான, பேரும் புகழையும் அடையக்கூடிய ஆண்டாக இருக்கும்.
சனி+கேது இணைவது நல்லது… சனி+ராகு இணைவு யோகத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.. சனி+கேது இணைந்து குருவின் வீடான தனுசு ராசியில் இருப்பது ஆன்மீக எண்ணங்களை அதிகமாக தரும். ஆனால் புத்திரர்கள் வழியில் அதிகமான விரையங்கள், அவர்களை பற்றிய கவலைகள் இருக்கும். மக்களின் கல்விக்காக அதிக செலவினங்கள் இருக்கும். காலேஜ் படிக்கும் ,பருவ வயதில் இருக்கும் மாணவ,மாணவிகளை பெற்ற சிம்ம ராசிக்காரர்களே! அவர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
பூர்வீக சொத்துக்களில் வில்லங்கங்கள்இருந்தால் மார்ச் மாதத்திற்கு அது விலகும். அது கேதுவோடு சேர்ந்து சனி புனிதப்படுவதால் குலதெய்வ அனுக்கிரகத்தால் நன்மைகள் நடக்கும் காலகட்டங்களாகும்.குலதெய்வ வழிபாடுகளை அடிக்கடி மேற்கொள்ள மேற்படி பலன்கள் கூடுதலாகும்.
குருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்ப்பதால் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு
வேலைகிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் ,பேரும் புகழும் கிடைக்கும். உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள்.
2019 பிப்ரவரி 13 க்கு பிறகு மார்ச் 14 வரை உங்கள் ராசிநாதனான சூரியன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் உங்களுக்கு ஒருபலம் கூடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து உங்கள் செயல்திறன் கூடும் மாதமாகும்.அப்பொழுது உங்களுக்கு ஒரு யானைபலம் வந்தது போன்ற புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
அரசு வழி உதவிகள்,தந்தை வழி உதவிகள், சம்பாத்ய வலிமைகள், புகழ் பெறக்கூடிய வாய்ப்புகள், திருமண வாய்ப்புகள், சிறிய முயற்சிக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் மாதமாகும்.அந்த மாதத்தில் சந்திரனை (ராசியை)உங்கள் ராசிநாதன் பார்த்து கொண்டு இருக்கும் பௌர்ணமி யோகம் உண்டாகும் காலகட்டமாகும்.அப்போது உங்களுக்கு சூரிய பலம் உண்டாகும்.
அதேபோல 2019 மே பதினைந்து தேதியிலிருந்து 2019 ஜீன் பதினான்காம் தேதிவரை உங்கள் ராசிநாதன் சூரியன் பத்தில் திக்பலம் அடைவார். அந்த காலகட்டத்தில் மேலே சொன்ன பலன்கள் நடக்கும் .சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். தகப்பன் வழி உதவிகள்,ஆன்ம பலம் அதிகரிக்கும் காலமாகும். அரசியல் வாதிகளால் நன்மைகள் இருக்கும். இந்த ராசியை சேர்ந்த அரசியல் வாதிகள் புகழ் பெறும் காலமாகும்.
இந்த ராசிக்காரர்களுக்கு சனி ஐந்தில் இருந்து ஏழை பார்த்து கொண்டு இருப்பதால் ஏழாமிடம் வலுத்து திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்.எந்த ஒரு கிரகமுமே தன் வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெற்று விடும். அந்த அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு பிறகு சனி குருவின் வீட்டில் இருந்து கேதுவுடன் சேர்ந்து புனிதப்பட்டு சுபத்தன்மை அடைந்து ஏழை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்தே விடும். ஏழாம் வீடு அதிக வலிமை பெறுவதால் வீட்டில் மனைவியின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். குரு எட்டை பார்த்து எட்டை சுபப்படுத்தி ,ராகு பதினொன்றில் இருப்பதால் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.சிலருக்கு குரு எட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குருபகவான் நீர் ராசியில் இருந்து, இன்னொரு நீர் ராசியான தன்னுடைய எட்டாம் வீடான மீனத்தை பார்த்து,தனது ஒன்பதாம் பார்வையால் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான கடகத்தை பார்த்து எட்டு ,பன்னிரண்டாம் வீடுகளும் குருவின் பார்வையால் சுபத்தன்மை அடைவதால் வெளிநாடு உத்யோகம் கிடைக்க பெற்று திரைகடல் ஓடியும் ,திரவியம் தேடி பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2019 இருக்க போகின்றது..
மொத்தத்தில் 2019 நல்ல ஆண்டாக,மகிழ்ச்சியான ஆண்டாக,வீட்டில் மனைவியின் ஆதிக்கம் மிகுந்த ஆண்டாக, புத்திரர்கள் வழியில் கல்வி செலவுகள் அதிகரிக்கும் ஆண்டாக, பழைய ,நண்பர் அல்லது காதலியை சந்தித்து மகிழக்கூடிய ஆண்டாக, ஆன்மீக சுற்றுலா செல்லும் ஆண்டாக,திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் ஆண்டாக, வெளிநாடு சென்று லட்சக்கணக்கான சம்பாத்யம் செய்து பேரும், புகழும் கிடைக்க போகின்ற ஆண்டாக இருக்க போகின்றது.. என்பதில் சந்தேகமே இல்லை.
நன்றி வணக்கம்
Comments are closed.