லக்னம் அடிபடையில் தின பொதுபலன்

உச்சிஷ்ட மஹாகணபதி துணை

 

லக்னம் அடிப்படையில் தின பொதுபலன்.

 

ஜோதிடத்தில் இருள் விலகட்டும் ஒளி பெருகட்டும்.

 

இருள் ( சந்திரன்:ராசி ) ஒளி ( சூரியன்:லக்னம் )

 

கடவுளிடம் ஒரு வரம் பெற விழைகிறேன். எனக்கு ஒரு நாள் காலஅளவு 30 மணிநேரமாக வேண்டும் என வரம் பெற விளைகிறேன். காரணம் ஒவ்வொரு லக்னதுகும் அரைமணி நேரம் விதம் 12 லக்னங்களுகும் தின பொதுபலன் கணிக்க 6 மணிநேரம் தேவைபடுகிறது.

தினபலன்:

 

லக்னம் அடிப்படையில் தின பொதுபலன்.

 

சூரிய உதயம்:

 

லக்னம்:

 

ஒவ்வொரு நாளும் சூரியன் 12 ராசிகளில் ஒன்றில் உதயம் பெறுவார். சூரியன் உதயமாகும் ராசி தான் உதயமாகும் ராசிக்கு ஒரு விளைவையும், மற்ற 11 ராசிகளுக்கும் 11 விதமான விளைவுகளையும் தருவார்.

 

ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் நேரம், நிமிடம் படி. சூரிய உதயம் 12 ராசிகளுக்கும்  12 விதமான விளைவுகள் தருவதை ஒரு கணக்கில் கொண்டும்.

 

சந்திரன்:

 

திசா புத்தி: ( தினமும் சந்திரன் பிரவேசிக்கும் நட்சத்திரம் )

 

திசா ( அன்றைய நாள் )

 

அன்றைய நாளில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மேலும் ஒரே நாளில் ஒரு குறிபிட்ட நேரத்திற்கு பிறகு இன்னொரு நட்சத்திரம் கூட ஒரே நாளில் கூட சந்திரன் மாற்றம் பெறலாம்.  ஆக சந்திரன் அன்றைய நாளில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதர்களை திசா நாதர்களாக ஒரு கணக்கில் கொண்டும்,

 

புத்தி ( அன்றைய நாளில் 24 மணி நேரங்கள் )

 

இன்னும் ஒரு படி மேலே கேபி பஞ்சாங்கம் ( பயன்படுத்தி ) வரை சென்று 24 மணி நேரங்களையும் ஆளும் 9 கிரகங்களையும் புத்தி நாதர்கலாகவும் கொண்டும், மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுகும் அன்றைய சூரிய உதயத்தை பலனுரைக்க கணக்கில் கொண்டு லக்னம் அடிப்படையிலான தினபலன் காணலாம். காண வேண்டும் என்றும், பதிவுகள் தினமும் வேலிட வேண்டுமென்றும், லக்னம் வைத்து பார்க்கும் பொழுது தினபலனில் பொதுபலன் நன்றாக நடைமுறைக்கு ஒத்து வருகிறதென்ற ஜோதிட அறிவியல் உண்மை வெளிப்பட்டு பல பேரிடமும் பாராட்டு பெற வேண்டுமென்றும் மனம் துடிக்கிறது.

 

நல்லநேரம் கெட்டநேரம்

 

நல்லநேரமும், கேட்டநேரமும் 12 லக்னங்களுகும் பொதுவானவை அல்ல

 

( முகுர்த்த நாள் ராகுகாலம் etc…போன்ற fixed கணக்கில் இல்லை ).

 

12  லக்னங்களுகும் அன்றைய நாளில் 24 மணி நேரங்களையும் ஆளும் 9 கிரகங்களின் அதிபத்யன்களை கணக்கில் கொண்டு, ஒரு நாளில் குறிப்பிட்ட அந்த மணி நேரத்தில் இருக்கும் கிரகத்தின் ஆதிபத்யன்களை கணக்கில் கொண்டு 12 லக்னங்களில் குறிப்பிட்ட ஒவ்வொரு லக்னதுகும் நல்லநேரம் கெட்டநேரம் கணிக்கலாம்.

 

பொதுபலனை தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஒப்பிட்டு பலன் காணுதல்:

 

இன்னும் ஒரு படி மேல் சென்று பயனாளிகள் அவரவர்களின் தனிப்பட்ட ஜாதகங்களை ஆராய்தல் ( லக்னவாரியாக குரிய நல்ல நேரம் கெட்ட நேரம் ) மேலும் பலன் தரும், தினபலனில் குறிப்பிட்ட அன்றைய குறிப்பிட்ட நாளின் திசா நாதர் கிரகம், திசா நாதர் நின்ற சாரநாதர் அன்றைய குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட மணி நேர புத்தி நாதர் கிரகம் அவரவர் ஜாதகங்களில் லக்னத்திலிருந்து அமர்ந்த ராசிகளை அறிந்து குறிபிட்ட அந்த நல்ல நேர விளைவுகளையும், கெட்ட நேர விளைவுகளையும் மேலும் அறிந்து கொள்ளலாம்.

 

( போதுமென்றால் நாள் வரையும் இன்னும் தேவையென்றால் 24  மணி நேரங்களில் குறிபிட்ட நேரம் வரையும் காணலாம் )

 

உதாரணம்:

 

ரிஷப லக்னம்

 

அன்றைய நட்சத்திரம்:

 

8 11 ஆம் ஆதிபதியன்களுக்கு உரிய குரு நட்சத்திரங்கள்.

 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

 

8 புறவாழ்வையும் 11 அகவாழ்வையும் குறிக்கும். குரு அவரவர் ஜாதகத்தில் அமர்ந்த பாவத்தை வைத்து லக்ன வாரியாக குரிய தின பொது பலனையும், நல்ல நேரம் கெட்ட நேரத்தையும் மேலும் அறிந்து இன்று அகவால்கைக்கு நன்மையா? புறவாழ்க்கைக்கு நன்மையா? என்றும், மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சொன்ன நல்ல நேரம் கெட்ட நேரத்தையும் இந்த நேரம் அகவால்கைக்கு சிறந்ததா? புரவால்கைக்கு சிறந்ததா? எனவும் தின பொதுபலன் போதுபலநிலேஹே ஓரளவு பலனை துள்ளியபடுதலாம் பெரும்பாலும் நடைமுறைக்கு மேட்ச் ஆகும்.

 

இன்னும் ஒரு படி மேலே கேபி அட்வான்ஸ் வரை:

 

ஆளும்கிரகங்களால் துல்லியமாக கணிக்கப்பட்ட கேபி அட்வான்ஸ் ஜாதகத்தில் 8 12 க்கு உடைய பாவாதிபதியின் நட்சத்திர நாள் என்றால் இன்னும் தெளிவு, ஒரு சில விசயங்களை தவிர்க்கலாம். அதுவும் குறிப்பிட நாள் 8 க்கு உடைய பாவாதிபதியின் நட்சத்திரங்களில் ஒன்று என்றால், 12 க்கு உடைய பாவாதிபதியின் நட்சத்திர hrs ஐ தவிர்க்கலாம் ஒரு சில விசயத்திற்கு.

 

பொதுவாக ஜோதிடர்கள் ஆளும் கிரகங்களால் துல்லியமாக கண்ணிகபட்ட கேபி அட்வான்ஸ் ஜாதகபடி தங்களுக்கு 8 12 ஆம் பாவாதிபதியின் நட்சத்திர நாட்களில், உதாரணமாக, அதுவும் முக்கியமாக அன்றைய நாள்  8 ஆம் பாவாதிபதி நட்சத்திர நாள் என்றால் 12 ஆம் பாவாதிபதியின் குறிப்பிட்ட hrs யில் ஜோதிடம் பார்ப்பதை தவிர்பர்.

 

காரணம்:

 

அன்றைய நாள் நட்சத்திரம் சம்பவம் 8

 

அன்றைய நாள் நட்சத்திரம் 8 உப நட்சத்திரம் 12 க்கு உடைய பாவாதிபதியின்  hrs நட்சத்திரம் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரம் வலு படுத்துகிறது. 8 பாவத்தின் திரிகோண பாவங்கள் 12 மற்றும் 4 ஆகும்.

 

இதுவே அன்றைய நட்சத்திர ( 8 ) நாளில் 7 11 மற்றும் 3 க்கு உடையவன் உப நட்சத்திர hrs ஆக இருந்தால் அன்றைய நட்சத்திரம் 8 காட்டிய nagative செயலை முறையே 100 %   60%   80%  என்று இயங்கவிடாமல் தடுக்கும். அதாவது 100% கெடுதி நிகழ்வதை தடுத்து நன்மை தரும் நேரங்கள், 40%  மட்டுமே நன்மை தரும் நேரங்கள், 20% மட்டுமே நன்மை தரும் நேரங்கள்.

 

காரணம் நட்சத்திரம் ( அன்றைய நாள் ) காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரம் ( அன்றைய நாளின் குறிபிட்ட மணி நேரங்கள் ) தடுக்கிறது.

 

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுணன் சி,காளிதாஸ்.

 

 

 

 

 

 

 

 

Blog at WordPress.com.

%d bloggers like this: