தனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகுவும் ராசியில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
குருபகவான் ஆனவர் தற்போது உங்களுக்கு விரைய குருவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் இது வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை தொடரும் ஆகையால் வண்டி வாகனம் வீடு ஆகியவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் ஆகிக்கொண்டே இருக்கும் தாயின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுடைய சுகம் கெடும் இது எல்லாம் தவிர்த்துக்கொள்ள விரயச் செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்ள புதிய வீடு வண்டி வாகனம் ஆகியவற்றை வாங்கிக் கொள்ள சிறந்த காலம்
நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடன்கள் எல்லாம் கிடைக்கும் அதேபோல் ஏற்கனவே இருக்கிற கடனை அடைக்கும் காலம் எதிரி தொந்தரவுகள் குறையும் உடல்நலம் மருத்துவத்தின் மூலம் சரியாகும் எதிர்பாராத திடீர் பண வரவு ஏற்படும் யூக வணிகம் பங்குசந்தையில் திடீர் லாபங்கள் உண்டாகும் மறைமுக எதிரி பிரச்சினைகள் எல்லாம் மறையும் காலம் ஆயுள் கண்டம் பிரச்சனை ஆகியவை நீங்கள் காலம் இருப்பினும் வரும் சனிப்பெயர்ச்சி வரை புதிய வேலை முயற்சிகள் வெற்றி தருவதில் தாமதங்கள் உண்டாகும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரிவுகள் தொந்தரவுகள் ஏற்படும் தூரதேச வாசங்கள் உண்டாகும் இளைய சகோதரருக்கு பிரச்சனைகள் ஏற்படும்
தொழில் வியாபாரம் முடக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு இடமாற்றம் இவைகளெல்லாம் ஏற்படுத்தும் சிலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் காலம் வேலை பார்க்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது தொழில் வியாபாரத்தை விஸ்தரிக்க கூடாது இருக்கும் தொழிலை சீராக நடத்திக்கொள்ள சிறப்பு கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிவினைகள் உண்டாகும் அல்லது தொழில் முடங்கிப் போகும்
மாணவ மாணவிகள் கண்ணும் கருத்துமாக தேர்வுகளையும் போட்டித் தேர்வுகளையும் எழுத சிறப்பு மேல் படிப்பு உயர்கல்வி இவற்றில் நினைத்த படிப்பில் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாக செயல்படவேண்டிய காலம்
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு ஜென்ம குருவாக வருகிறார் எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரிவினைகள் ஏற்படும் அதை தவிர்த்துக் கொள்ள குடும்பத்திலிருந்து பிரிந்து வெளியூரில் தங்கி வேலை பார்க்க வியாபாரம் செய்ய சிறப்பு தேவையில்லாத பிரச்சனைகள் வரும் வெளிநாடுகளில் வேலை கிடைத்தால் உடனே மாற்றிக் கொள்ள சிறப்பு
வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் நடைபெறும் காலம் உங்கள் காதல் வெற்றி பெறும் காலம் பாக்கியங்கள் அனைத்தும் பெறும் காலம். குழந்தை பாக்கியம் தள்ளிப் போனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் ஜென்ம குரு பல தொல்லைகளை கொடுத்தாலும் பல நன்மையையும் செய்யும்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி பகவான் உங்கள் இரண்டாம் வீடு என்று சொல்லப்படும் தன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் அதாவது ஏழரை சனியில் பாதச் சனியாக பெயர்ச்சியாகிறார். இது ஒரு நல்ல காலம் என்றே சொல்லலாம் கடந்த ஐந்து வருடமாக சந்தித்துவந்த பல பிரச்சனைகளும் தொந்தரவுகளும் குறையும் காலம். உங்கள் வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடக்கும் தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் மருத்துவச் செலவுகள் ஏற்படும் உங்கள் உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை தேவைக்கேற்ப உடனுக்குடன் மருத்துவச் செலவுகளை செய்து கொள்ள சிறப்பு.
வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபகங்கள் குறையும். பணமுடை உண்டாகும் பண விஷயங்களில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும் காலம். எப்பொழுதும் தொழிலில் பரபரப்பாக செயல்பட வேண்டும் அப்படி செயல்பட்டால் தான் ஓரளவாது லாபத்தைப் பார்க்க முடியும். உத்தியோகம் செய்பவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பதவி உயர்வு சம்பள உயர்வு இவற்றை எதிர்பார்த்து இருப்பது நன்மையை தராது இருக்கும் வேலையை விடாது செய்து கொண்டு இருப்பதே சிறப்பு இடமாற்றம் பணி மாற்றம் செய்ய உகந்த காலம் அல்ல
மாணவ மாணவிகள் படிப்பில் கவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் மேற்படிப்பு கிடைத்தாலும் சில பல இன்னல்கள் தடை ஏற்படும் காலம் எனவே கல்விக் கூடத்தில் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டும்
பரிகாரம்
இஷ்ட தெய்வம் குல தெய்வத்தை தினமும் வழிபட சிறப்பு
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்துவர சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்
suber