குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2018 - 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2018 – 2019 | Guru Peyarchi Dhanu Rasi 2018

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2018 (Guru Peyarchi 2018 – Dhanu Rasi)

தனுசு ராசி

தனுசு ராசி சுபராசி. நெருப்பு ராசி.இதன் அதிபதி குரு என்பதால் நல்லவர்களாக இருப்பார்கள். குரு பிராமண கிரகம் என்பதால் நல்ல எண்ணம் கொண்டவர்கள். யாரையும் கெடுக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்.

கோதண்டம் என்ற சொல்லக்கூடிய வில்லு அம்பை சின்னமாக கொண்டது இந்த ராசி.குதிரையை போன்ற வேகம் கொண்டவர்கள்.வில்லிலிருந்து புறப்படும் அம்பு எப்படி இலக்கை போய் சரியாக அடையுமோ?? அதுபோல எடுத்த காரியத்தை முடித்துபோட்டுத்தான் வேறு ஜோலி பார்ப்பார்கள்.

இவர்களுக்கு குரு ராசியாதிபதி. இதுவரை பதினொன்றாம் பாவத்தில் இருந்த குருபகவான் “மன்னவன் பதினொன்றில் ஒரு மன்னர் சேவை;
வாகனங்கள் உள்ளோன்;அன்றும் பொன்பொருள் சேரும் தாயே ” என்ற செய்யுள்படி நல்ல பலன்களை தன மேன்மையை அளித்து வந்தார்.

வரும் புரட்டாசி மாதம் 25ந்தேதி (அக்டோபர் 11)அன்று பெயர்ச்சி யாகும் குருபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் பாவத்தில் சஞ்சரிக்க போகின்றார். அது குருபகவானுக்கு உகந்த இடம் இல்லை. சனியும் ஜென்ம சனியாக ராசியிலே சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார். ராகு கேதுக்களும் முறையே 2,8 ல் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதால் பெரும்பாலான ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் நல்லபடியாக இல்லை. கோட்சாரம் சிறப்பாக இல்லை.

குரு பன்னிரண்டாம் பாவத்தில் இருப்பது பற்றி வருஷாதி நூல்
“பத்துடன் மூன்று, நான்கு ,பன்னிரண்டு
எட்டோடு உறவு மத்தமம் ஆறில் ஒன்றில்
மன்னவன் இருந்தக்காலை, நித்தமும் அலைச்சல், நிட்டூரம், வாதம் பித்தம் பெற்றவன் கேடும் ,பிறப்புபிள்ளை பெண்சாதி பகையும் ஆவார். என்று கூறுகிறது.

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததுவும் என்று வரும். அதாவது பன்னிரண்டாம் பாவத்தில் குருவரும்போது கண்டங்கள், தோல்விகள் ஏற்படும்.

சந்திரன் நின்ற ராசிக்கு சனி நின்ற பலன்;

“பன்னிரண்டு,ஏழு,எட்டு,ஒன்பான பத்து, ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்றில் சனியனே இருந்திட்டால் தனம். உயிர்சேதமாகும்.தனிச்சிறை.மானபங்கம், தன்னறிவானே மோசம். மனைவிட்டு மாடிவிட்டு மறுநகரம் ஏகுவானே”
இந்த செய்யுள் மிக எளிமையானது.எல்லா பஞ்சாங்கங்களிலும் இருக்கும். இதை விளக்க வேண்டியது இல்லை.

ஜென்ம ராசியிலசனிசஞ்சாரம் செய்யும்
காலங்களில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். மனச்சஞ்சலம் .
சந்திரன் மனசுகாரகன்.சந்திரன் தாய் காரகன்.சந்திரன் உடல் காரகன்.எனவே சிலருக்கு உடல்நிலை பாதிக்கும்.சிலருக்கு தாயாரின் உடல்நிலையை பாதிக்கும். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் 8 1/2 டிகிரிக்குள் சனி சந்திரனுடன் இணையும் போது அதீத கவனம் தேவைப்படும்.

குருபகவான் 12ல் இருப்பதுவும் நன்மை யளிப்பதாக இல்லை. தனகாரகன் பன்னிரண்டாம் பாவத்தில் மறைவது பண வரவில் தடைகளை ஏற்படுத்தும். விரையங்களை அதிகளவில் ஏற்படும். பணம் வரும்.ஆனா வராது. பணம் வராததற்கு முன்னாடியே செலவு காத்திட்டு இருக்கும். பற்றாக்குறையை ஏற்படுத்தி கடனை ஏற்படுத்தும்.

இந்த மாதிரி நேரம் மோசமாக இருக்கும் போது புதியதாய் தொழில் தொடங்க கூடாது. லாபம் ரொம்ப குறைவாக இருக்கும். பேராசை படக்கூடாது.பணம் கொடுக்கல் வாங்கல்களில் அதிக கவனம் தேவை. வருமான வரி கட்ட வேண்டியவர்கள் சரியாக வருமான வரி கட்டி விடுங்கள். முறையற்ற வழிகளில் பணம் சம்பாதித்தால் இன்கம்டாக்ஸ் ரெய்டு வரும்.கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருங்கள்.

அரசு ஊழியர்கள் கைசுத்தமாக நேர்மையாக இருக்க வேண்டும். டிஸ்மிஸ் ,இடமாற்றம், மெமோ சிறை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகலாம்.
. சிறை அல்லது ஜென்மம் என்று சொல்லுவார்கள். இந்த காலங்களில் உங்களுக்கு உறவுகள்னா என்ன?வாழ்க்கை என்றால் என்ன??பணம் னா என்ன என்று வாழ்க்கை பாடத்தை
அனுபவ பாடத்தை உங்களுக்கு ஆண்டு கிரகங்கள் தரப்போகின்றன.உங்களை பட்டை தீட்டிய வைரமாய் உங்களை ஜொலிக்க வைக்க போகிறது.

ஏழரை சனி நல்லது. பணத்தின் அருமை புரியவைக்கும்.பணத்தின் அருமை பணம் இல்லாத போதுதான் தெரியும். மனைவி வெள்ளி கொலுசு கேட்டால் தங்க கொலுசு எடுத்து தரும் போது தெரியாத பணத்தின் மதிப்பு ,குழந்தைக்கு பென்சில் வாங்கி தர முடியாதபோதுதான் அந்த பணத்தின்மதிப்பு தெரியும்.

பிரயாணச்செலவுகள்,துயரம், கூட்டு வியாபாரங்களில் நஷ்டம் ,பிறரால் ஏமாற்றப்படுதல்,சொத்து நஷ்டம், அனாவசிய செலவுகள், சொத்து நஷ்டம், திருட்டு போகுதல் ,போன்ற பலன்கள் நடக்க இருப்பதால் பெண்கள்அதிக நகை போட்டுக்கொண்டு வெளியே செல்ல கூடாது.

அரசியல் வாதிகளுக்கு இது போறாத காலம். மக்களிடையே செல்வாக்கு குறையும். வெற்றிக்கு மிக அருகில் வந்து கோட்டை விடுவார்கள். கெட்ட பெயர்கள் ஏற்படும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கவனங்கள் வேறு இனங்களில் ஸ்போர்ட்ஸ், நண்பர்கள், செல்ஃபோன்,காதலி என்று வேறுபக்கம் கவனங்கள் திரும்பி அரியர்ஸ் வைக்க வேண்டியது வரலாம்.

விவசாயிகளுக்கு லாபம் மிகமிக குறையும். பயிர்களில் பூச்சி தாக்குதல் கள் அதிகளவில் ஏற்பட்டு செலவுகள் அதிகரித்து வரவுகள் குறையும். ஒருவர் சொன்னார் இந்த வருடம் எனக்கு 50,000ரூபாய் லாபம் என்றார்.அப்படியா!!! என்ன கரும்பு போட்டிருந்தீர்களா?வாழை போட்டிருந்தீர்களா ???என்று கேட்டார். அதற்கு இவர் ஒன்னுமே போடலீங்க.இந்த வருடம் விவசாயமே செய்யல ..அதனால எனக்கு இந்த வருடம் 50,000 லாபம் என்றாரே பார்க்கலாம்.

சரி எல்லோருக்கும் இந்த பலன்கள் தான் நடக்குமா என்றால் இல்லவே இல்லை. லக்னாதிபதி வலுவாக இருந்தால் நீங்கள் எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கலாம் .ஜனன ஜாதகத்தில் சனி சுபக்கிரகங்களால் அதிக சுபத்தன்மை அடைந்தாலும் இந்த குருப்பெயர்ச்சி, ஜென்ம சனியால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது

தசாபுக்திகள் நன்றாக இருந்தாலும் இந்த ஏழரைச்சனியால் பாதிப்புகள் இல்லை.
சிலர் ஏழரைச்சனியில் ஓடி ஓடி தோட்டம் வாங்குவார்கள். ஏழரைச்சனியில் திருமணம் நடக்கும். ஏழரைச்சனியில் வெளிநாடு போவார்கள். ஏழரைச்சனியில் ப்ரமோசன் கிடைக்கும். இதெல்லாம் எப்படி நடந்தது???
தசாபுக்திகள் நன்றாக இருக்கும். தர்ம கர்மாதிகள் தசாபுக்திகள், லக்னாதிபதி,பஞ்சமாதிபதிகள் தசாபுக்திகள் நடந்து இருக்கும். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய விரையங்கள் சுபவிரையங்களாக உள்ளது.

ஏழரைச்சனியில் ராகு தசை, ஏழரைச்சனியில் சனிதசை,ஏழரைச்சனியில் சந்திர தசை,ஏழரைச்சனியில் 6×8×12ம் அதிபதிகள் தசை நடக்கும் போது வாழ்க்கையில் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும்கூட அதல பாதாளத்தில் தள்ளும். பெரிய பள்ளம் விழுகும்.

பூர்வ புண்ணியம் வலுத்தவர்களையும் சனி தன்னளவில் பெரிய கெடுதல்களை செய்வதில்லை. எனவே இந்த காலங்களில் பேராசைப்படாமல் நேர்மையாக இருந்தாலே போதும் சனியால் பாதிப்புகள் ஏற்படாமல் தப்பிக்கலாம். அதிகமாக சம்பாதிக்காட்டிலும் பரவாயில்லை. இருப்பதையாவது காப்பாற்றி கொள்ளுங்கள் என்று கூறி இந்த குருப்பெயர்ச்சியால் விரையங்கள் அதிகளவில் ஏற்படும் என்று கூறி நாளை
மகர ராசி குருப்பெயர்ச்சி பலன்களில் நான் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்று கொள்வது

Blog at WordPress.com.

%d bloggers like this: