குருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2018 – 2019 | Guru Peyarchi Kanya Rasi 2018

12,797

குருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2018 (Guru Peyarchi 2018 – Kanni Rasi)

கன்னி ராசி

குருபகவான் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25 ம்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று இரவு ஏழு கால் மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

கன்னி ராசிக்காரர்கள் கடைக்கண் பார்வையுடைவர்கள்.சாமர்த்தியசாலிகள்.வாதத்திறமையுள்ளவர்கள்.பேசியே எல்லா காரியங்களையும் சாதித்து கொள்வார்கள்.இவர்கள் பேசினால் பழம் நழுவி பாலில் விழுந்து, அதுவும் நலுவி வாய்க்குள்ளயே விழுந்துரும். அப்படி வார்த்தைகளில் தேன் கலந்த மாதிரியான பேச்சு இருக்கும்.

பளிச்சென்று இருப்பார்கள். ஆண்களாக இருந்தால் மீசைஇல்லாமல் மாதவனை போல அப்பாஸை போல கொலுக் மொலுக் என்று இருப்பார்கள். பெண்களை கவருவதில் வல்லவர்கள். அதனாலோ என்னவோ அவருக்கு என்னப்பா கன்னி ராசி என்று சொல்ல நாம் கேட்டிருப்போம்.

இந்த ராசிக்கு புதனே பத்துக்கு உடையவனும் ஆவதால் பலர் சொந்த தொழிலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஜோதிடம், கணிதம், கலைகளில் நாட்டம் ,ஓவியம், சிற்பிகள்,எழுத்து வேலைகள்,எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டே இருக்கும் கிளர்க்,ஆடிட்டர், போன்ற துறைகளில் நான் பல கன்னி ராசி, லக்ன காரர்களை பார்த்து உள்ளேன்.

சிலர் தொழிலதிபர்களாக உள்ளனர்.
இந்த ராசிபலன் கன்னி லக்ன ம்,கன்னி ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். இவர்கள் காதல் மன்னர்கள். சமயோசித புக்தி உள்ளவர்கள். இவர்கள் சுயகாரியப்புலிகள் . பொதுவாக கமிஷன் அடிப்பவர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி இவர்களுக்கு எப்படி??கடந்த ஒரு வருட காலங்களாக இவர்களுக்கு குருபலம் இருந்து கொண்டு வந்ததால் இவர்களுக்கு வந்த எல்லா தொல்லைகளையும் குருபகவான் விலக்கிட்டு இருந்தார்.தற்போது குருபகவான் இரண்டில் இருந்து மூன்றுக்கு செல்வது அவ்வளவு உகந்த இடம் இல்லை.

தீதில்லாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதுவும் என்ற செய்யுளின்படி குரு மூன்றில் வந்த காலத்தில் துரியோதனன் போரில் தோல்வி அடைந்தான் என்ற பொருளில்
வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டிவரும்.

புலிப்பாணி என்ன சொல்றார் அப்படினா???

“கேளப்பா குருமதியும் மூன்றிலேற
கெடுதி மெத்த செய்வானடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவும் போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேதான்”

குரு புத்திர காரகன், தனகாரகன்,அறிவுகாரகன் என்பதால் அவர் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது அல்ல. இருந்தாலும் குருபகவான்தன்னுடைய ஐந்தாம் பார்வையால் ஏழாமிடமான தன்வீட்டை தானே பார்த்து விடுவார்.எனவே திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். ஏழாம் பார்வையால் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை பார்த்து தாய்தந்தை இருவரின் உதவி கிடைத்துவிடும்.

தந்தை மகனுக்கும் இடையிலான உறவு மிக நன்றாக இருக்கும். பதினொன்றாம் இடமான லாபஸ்தானத்தை பார்த்து
தொழிலின் மூலம் லாபமும், பணவரவுகளும் நிச்சயம் உண்டு. குருபகவான் பதினொன்றாம் பாவத்தை பார்த்து இருப்பதால் முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்கள் திருமண வழக்குகள் நல்லபடியாக முடிந்து இரண்டாம் திருமணத்தை நடத்தி வைப்பார். ஜனன ஜாதகத்தில் ஏழாமிடம், ஏழாமிடத்ததிபதி வலுக்குறைந்து பதினொன்றாம் இடம் ,பதினொன்றாம் அதிபதி அதிபலம் பெற்று குடும்ப ஸ்தானத்தில் பாவக்கிரகங்களால் சூழப்பட்ட ஜாதகர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மறுமணத்தை ஏற்படுத்தி வைக்கும்.

ஜனன ஜாதக அமைப்புகளையும் பிறப்பு ஜாதகத்தையும் கோட்சார பலன்களையும் ஒப்பிட்டு பார்த்தால் 100க்கு 80 சதவீதம்சரியான பலன்களை அறிய முடியும் என்பது ஜோதிட ஆர்வலர்களுக்கு நான் தரும் டிப்ஸ் ஆகும். இப்ப உதாரணமாக நான்காம் அதிபதியின் தசாபுக்திகளில் ,அல்லது மனைக்காரகன் சுக்கிரன் தசாபுக்திகளில் நடக்கும் போது கோட்சாரங்களில் குருபகவான் நான்கை அல்லது நான்காம் பாவத்தோடு வலுவாக தொடர்பு கொள்ள ,நான்காம் அதிபதியை கோட்சாரங்களில் தொடர்பு கொள்ள சொந்த வீடு கட்டுவார்கள்.

ரைட்டு இப்ப குருபகவான் மூன்றில் வரும் போது ஸ்தான பலம் இல்லாவிட்டாலும், அவருடைய பார்வை பலத்தால் நன்மைகள் மிக அதிகளவில் ஏற்படும். குருவின் பார்வையால் வருமானம் வரும். ஆனால் சனியின் கோட்சார பலன்களால் வரக்கூடிய பணம், தனம் வந்த வழிதெரியாமல் ,வந்த சுவடு தெரியாமல் சென்று விடும். எப்படி வந்துச்சு, எப்படி போச்சுனே தெரியாது.எவ்வளவு சம்பாதிச்சாலும் சேமிக்கவே முடியவில்லைங்க ஐயா என்பார்கள். கையில வாங்குனே பையில போட்டேன் ,காசு போன இடம் தெரியல என்பது இப்போது கன்னி ராசிக்காரர்களுக்கு பொருந்தும்.

காரணம் சனியினுடைய கோட்சார பலன்களே காரணம். சனி நான்காம் இடத்தில் கடந்த ஒருவருடமாக சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார்.இது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படும்.அதாவது நாள்கண்ட சனி .அஷ்டமம் அப்படினா எட்டு. எட்டில பாதி நான்கு. அதுவே அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படும். நாள்கண்ட சனி என்று கிராமப்புறங்களில் அழைக்கப்படும்.

அதாவது ஒரு நாளைகடத்தறது ஒரு யுகத்தை கடத்தற மாதிரி இருக்கும். முகத்தில ஒரு இருள்.வீட்டில ஒரு இருள்.காலையில் எழுந்ததும் யார் மேலயாவது எரிந்து விழுவார்கள்.ஒருநாள் இவர்களுக்கு ஒரு யுகமென கழியும். சிலருக்கு அவர்கள் வயதுக்கு தகுந்தாற்போல வயிற்றுபிரச்னையும் ,ரொம்ப வயதான வர்களுக்கு இருதய பிரச்னையும் கடந்த ஆறுமாதங்களாக தந்திருக்கும்.

35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழிலில் பிரச்னையை தந்து கடன் ஏற்பட்டு இருக்கும். நிறைய தெண்டச்செலவுகள் இந்த ஒரு வருடகாலமாக ஏற்பட்டு வந்திருக்கும்.கையில் இருக்கும் பொருள் விரையம்.குடும்பத்தில் கணவன் மனைவி உறவு ,அன்னியோன்யம் கம்மியாக இருந்து இருக்கும். சிலர் இடம் விட்டு இடம் மாறியிருப்பார்கள்.

அதாவது ஊர்விட்டு ஊர் போகனும் அப்படிங்கறது விதி.கடைசிக்கு ஒரு நாலு வீடு தள்ளியாவது கன்னி ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் வந்திருக்கும். இதற்கு ஆதாரமாக

கண்டங்கள் நான்கில் எட்டில் கருதியே சனி சேய் நிற்க;
தெண்டங்கள் மிகவுண்டாகும்;
திரவியங்கள் நாசமாகும்:
கொண்டதோர் குடும்பம் வேறாகும்
குறித்திடும் செட்டு நஷ்டம்;
பண்டுள நாடுவிட்டு நகரம் விட்டு
மறுநகரம் ஏகுவானே ”

செட்டுனா __தொழில் அப்படினு அர்த்தம்.
மற்றவைகள் உங்களுக்கு ஈசியாக புரியும்.
சிலருக்கு வீடுகட்டுவார்கள்.அது பாதியிலே நிற்கும். சிலருக்கு வண்டி வாகனங்களில் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு தாயார் மூலமாக விரையங்களை சனிபகவான் தருவார்.தாயின் உடல்நிலைகளை கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த ஒருவருட காலமாக விவசாயிகளுக்கு போட்ட முட்டுவலி வந்திருக்காது.விவசாயிகளுக்கு லாபம் குறைவாக இருந்திருக்கும்.100 மூட்டை மகசூல் வரும் இடத்தில் 40 மூட்டை விளைச்சல் வந்து பற்றாக்குறையை தந்து பட்ஜெட் கையை கடித்திருக்கும்.

ஆக குருபகவானால் வருமானம் வந்து கொண்டிருந்தால் சனியால் ஒருபக்கம் செலவுகள் வந்து கொண்டு இருக்கும். பொதுவாக குருபகவானின் பார்வை பலன்களால் நற்பலன்களும் ,நாள்கண்ட சனியால் விரையங்களும் என 50/50
என்ற விகிதாச்சாரங்களில் உங்கள் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு உள்ளது.

கன்னி லக்ன, கன்னி ராசிக்காரர்களுக்கு 50 ரூபாய் வரவுகளும் 50 ரூபாய் செலவும்வரும் என்று கூறிபரிகாரமாக

வாயுபுத்திரன் ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு ஏற்றி ,உங்களது ராசினாதனான புதன்பகவானையும்,அவருடைய அதிதேவதையான பெருமாளையும் சனிக்கிழமை சனிக்கிழமை தரிசித்து,துளசி மாலை அணிவித்து வசதியிருந்தால் பச்சை பட்டு எடுத்து சாற்றி பச்சைப்பயறு,புளியோதரை, தயிர் சாதம் நிவேதனம் செய்து,அர்ச்சனை அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வர சனியால் உங்களுக்கு வரக்கூடிய தொல்லைகள்,கஷ்டங்கள் நீங்கும் என்று கூறி மீண்டும் சந்திப்போம்

நன்றி

வணக்கம்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More