குருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Kataka Rasi 2018
குருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி 2018 (Guru Peyarchi 2018 – Kataka Rasi)
கடக ராசி
குருபகவான் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25ம்நாள் சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு விசாகம் நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.
கடக ராசி பன்னிரண்டு ராசிகளில் முதல்தரமான ராசி. சரம்,ஸ்திர, உபயம ராசிகளில் சர லக்னங்களுக்கு ராஜயோகத்தை வழங்கக்கூடிய வலிமை உள்ளது. அந்த ராஜயோகத்தை வழங்கக்கூடிய சர லக்னங்களில் கடகமே முதல் இடத்தை பிடிக்கிறது. சர லக்னங்களுக்கு மட்டுமே நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் உச்ச பலத்தை அடையும்.
அதிலும் கடக ,சிம்ம லக்ன ராசியாதிபதிகளுக்கு ஒரேயொரு ஆதிபத்தியம் சுப ஆதிபத்தியமான லக்னாதிபத்தியம் மட்டுமே உள்ளது. மற்ற ராசியாதிபதிகளுக்கு மற்றொரு பாவ ஆதிபத்தியம் வரும். கடக ராசி நாடாளும் ராசி என்றே அழைக்கப்படும். அநேகர் கடக ராசியில் பிறந்தவர்கள் ஆட்சி பீடத்தை அலங்கரித்து உள்ளனர். மற்ற ராசிகளுக்கும் கிரகங்கள் அமர்வை பொறுத்து ராஜயோகத்தை தந்தாலும் கடகமே நாடாளும் யோகத்தில் முதலிடத்தை பிடிக்கறது.இவ்வளவு உயர்வாக கடகத்தை பற்றிசொல்வதால் நான் ஒன்றும் கடகராசியில் பிறந்தவன் அல்ல.
கடகம் சுபராசி.சந்திரன் சுபக்கிரகம். பொதுநலவாதிகள்.நாட்டிற்காக மக்களுக்காக உழைப்பவர்கள்.புகழ்ச்சிக்கு மயங்கி விடுவார்கள். சுறுசுறுப்பு உள்ளவர்கள். இங்கே ஒரு நுணுக்கத்தை காணலாம். சூரியன் தான் ராஜா.மற்ற கிரகங்கள் வேலைக்காரர்கள்.இந்த நவ வேலைக்காரர்களில் மிகவும் சுறுசுறுப்பான வேலைக்காரன் யாருனு பாத்தா ? அது சந்திரன்தான்.
சந்திரன் ஒரு ராசியை இரண்டேகால் நாலில் சுற்றி வந்து விடுவார்.ஒரு ராசிக்கட்டத்தை 27 நாளில் ஒரு முழுச்சுற்றாக சுற்றி வந்து விடுவார்.27 நாளில் அனைத்து நட்சத்திரங்களையும்,
அனைத்து கிரகங்களையும்,அனைத்து ராசிகளையும் தொட்டுவிட்டு வந்து விடுவார்.இவர் ஒரு சுறுசுறுப்பான துரித கிரகம் என்பதால் சூரியனுக்கு ரொம்ப புடிச்சு போன வேலைக்காரன் சந்திரன்.
எனவேதான் உடுமகாதசை சந்திரனை வைத்து கணிக்கப்படுகிறது.வளர்பிறை சந்திரனாக இருந்தால் உறுதியான முடிவெடுப்பவர்கள். சந்திரன் அரசுகிரகம் என்பதால் தலைமை தாங்கும் தகுதி வந்து விடும். தான தர்மங்கள் செய்பவர்கள் .சந்திரன் சுபக்கிரகம் என்பதால் தானம், தர்மம் செய்பவர்கள். கஞ்சத்தனம் இல்லாதவர்கள்.
“பார்க்க படிக்க பலதொழில் கற்க
தேட சுவைக்க கற்கடகம்
சிம்மம் கன்னிக்கல்லாது வேறு ஒரு உயிர்க்கு உண்டோ”
கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது?
இதுவரை நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் இனி கடக ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வரப்போகின்றார்.இவர்களுக்கு வலுத்த குருபலம்வந்து விட்டது. “பூபதியும் ஐந்தில் ஏற பிரபுக்கள் சேவை.கீர்த்தி. புனிதன் என்று புகழ்கிறார் புலிப்பாணி முனிவர்.
உத்தியோக உயர்வு, மேலைநாடுகள் அனுகூல பலன்,அதாவது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.ஆடம்பரமான வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான பணம் வரும். வாழ்க்கை குதூகலமாக இருக்கும். அடிப்படையான நிலையான வருமானம் வர இருக்கிறது.
குருவின் பொன்னொலி பார்வை ஜென்ம ராசிமீது விழுவதால் தோற்ற பொலிவு கூடும். சுயபலம் அதிகரிக்கும். தன்பலம் கூடும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை, அந்தஸ்து உயரும்.குருபகவான் ஐந்தாம் பாவத்தில் இருந்து ஒன்பதை பார்ப்பதால் தாய் தந்தை உதவிகிடைக்கும்.
குருபகவான் ஐந்தில் இருந்து பதினொன்றாம் வீட்டை பார்ப்பதால் செய்தொழிலில் லாபம் மிகுந்து காணப்படும். பலருக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர்.தெய்வ பாதுகாப்பு கிடைக்கும்.
பலருக்கு பெரும் பணம் வந்து பையை நிரப்பும். காடு ,மனை இதுவரை விற்பனை செய்வதில் இழுபறி இருந்தவர்களுக்கு சொத்து விற்பனை யாகி லட்சக்கணக்கில் பணம் கையில் புழங்கும். சரி குருபலம் மட்டும் தான் இவர்களுக்கு இருக்கா ???அப்படினா! இல்லை.
இவர்களுக்கு சனிபலமும் உள்ளது. என்னய்யா இது நாங்கள் இதுவரைக்கும் குருபலம் கேள்வி பட்டிருக்கோம். அதென்னயா சனிபலம்???
சனிபகவான் உங்களுக்கு ஆறாம் இடத்தில் இருந்து நற்பலன்களை வாரி வழங்கிகொண்டு உள்ளார். சனிபகவான் உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 இந்த இடங்களில் இருந்தால் தான் நன்மைகளை செய்வார்.பத்தில ஒரு பாவியாவது பழுதாவது இருக்கலாம். சனி ஆறாம் இடத்தில் இருந்து ஆறாமிடமான கடன்,நோய், சத்ரு,வம்பு வழக்கு இந்த காரகங்களை கெடுத்து கடன் நோய் எதிரி இல்லாமல் பிழைக்க வழிவகை செய்வார்.சனி தான் இருக்கும் இடத்தை கெடுப்பார் என்பது ஜோதிட விதி.
“ஆறு பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்குமாகில்
கூறு பொன்பொருள் மிகவுண்டாம்
குறைவில்லா செல்வமுண்டாகும்
ஏறு பல்லக்கு முண்டாம்
இடம் பொருளே வலுவுண்டாம்
காறு பாலஷ்டலட்சுமியோகம்
உண்டாகும் தானே”
சனி ஆறில் நிற்பதால் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும். கார் ,பைக் போன்ற வாகனங்கள் வாங்குவீர்கள். வீடு வாசல் எல்லாம்கட்டி பிழைக்கிற யோகம் உண்டாகும்.நகை நட்டு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பேங்க்ல நகை அடமானம் வைத்திருந்தால் திருப்பக்கூடிய யோகம் உண்டாகும். கல்யாணம் நடக்கும். கல்யாணத்திற்கு நகை எடுப்பீர்கள். பொன்னகையோடு புன்னகையும் பூத்து குலுங்கும்.
அஷ்ட லட்சுமி யோகம் வருதா ?வீட்டுக்கு மகாலட்சுமி வந்து விடுவாள்.அதாவது விளக்கேத்தறதுக்கு மகாலட்சுமி வந்து விடுவாள்.ரைட்டு இவ்வளவு தானா இன்னும் இருக்கா??
6.3.2019 அன்று திருக்கணிதப்படி ராகுகேதுக்கள் பெயர்ச்சி யாகி தனுசு,மிதுனத்த்திற்கு பெயர்ச்சியாகி கேது சனியுடன் சேர்ந்து சுபத்தன்மை பெற்று குருவின் வீட்டில் அமர்ந்து ஆன்மீக வழிகளில் முன்னேற்றங்களும்,பல புண்ணிய நதிகளுக்கு ஸேத்ராடனம் செய்ய வேண்டிவரும். ஆன்மீக வழிகளில் பலருக்கு லாபமும் வேலையும் கிடைக்கும். ஏற்கனவே குரு ஐந்தாம் பாவத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகு கேதுக்கள் அந்நிய கிரகங்கள் என்பதால் மூன்றாவது மனிதர்களுடைய சப்போர்ட்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, ஏற்றுமதி, இறக்குமதி இனங்களில் லாபம் அதிகளவில் வரும். உங்களுக்கு ஜனன ஜாதகத்தில் திசாபுக்திகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில்
நான் சொன்ன பலன்களை காட்டிலும் கூடுதலாக நற்பலன்கள்கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு.
ஏதாவது குறை சொல்லனுமே !! இல்லைனா கடக ராசிக்காரர்களுக்கு கன்னுபட்ரும்.
11.4.2019 ___11.8.2019இந்த காலகட்டத்தில் குருபகவான் ஒரு நான்கு மாதகாலங்களுக்கு வக்கிரம் அடைவார். அந்த நான்கு மாதகாலங்களும், குருவால் நன்மைகள் இருக்காது.சனி வக்ரம் அடையும் 30.4.2019___18.9.2019 இந்த காலகட்டத்தில் சனியால் நன்மைகள் இருக்காது.
இந்த காலங்களில் குருவால் பிள்ளைகளுக்கு தொல்லைகளும்,பணத்தட்டுப்பாடு, வண்டி வாகனம், தாயாரால் செலவுகள் ஏற்படும்.சிலருக்கு சனியால் நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அது அவரவருகளுடைய ஜனன ஜாதகத்தை பொறுத்தது.
மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு குருபலம்,சனிபலம்,ராகுகேதுபலன் அனைத்தும் உள்ளதால் நன்மைகள் மட்டுமே நடக்கும் என்று கூறி
நன்றி
வணக்கம்
Comments are closed.