குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2018 – 2019 | Guru Peyarchi Khumba Rasi 2018

4,057

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2018 (Guru Peyarchi 2018 – Khumba Rasi)

கும்ப ராசி

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25 ந்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று குருபகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார்.

கும்பம் ராசி கும்பத்தை சின்னமாக கொண்டது.பூரண கும்பம்.இவர்கள் அடுத்தவரிடம் மரியாதையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.இது காற்று ராசி என்பதால் வாயுவை போல வேகமானவர்கள்.

இந்த ராசியில் ராசிக்கு ஆறுக்கு உடையவனான சந்திரன் ராசியில் அமரப்பெறுவது அவ்வளவு நன்மையல்ல.சுபச்சந்திரனாக வளர்பிறை சந்திரனாக அமர்ந்து சுபகிரகங்கள் பார்வைபெற நல்ல நிலைக்கு மேலான நிலைக்கு வருவார்கள்.

மாறாக ஏற்கனவே ராசிக்கு ஆறுக்கு உடையவன் ராசியில் அமர்ந்து இருக்கும் நிலையில் அவர் தேய்பிறை சந்திரனாக பட்சபலம் இல்லாத சந்திரனாக அமரப்பெறும்போது மேலும் பாவக்கிரகங்கள் ,அழுக்குடை கிரகங்கள், தீய கிரகங்கள் ராசியோடு, ராசிஅதிபதியோடு சம்பந்தப்படும் நிலையில் குடத்துக்குள்ள இட்ட விளக்கு போல இவன் புகழ் வெளியே தெரியாமல் இருப்பான்.

ராசியாதிபதியே விரையாதிபதியும் ஆவதால் வெகுசெலவாளிகள்.50,000ரூபாய் சம்பாதித்தால் 40,000ரூபாய் செலவளிப்பார்கள்.காம உணர்வு மிக்கவர்கள். இந்த ராசியில் எந்த கிரகமுமே உச்சமும் அடைவதில்லை. நீசமும் அடைவதில்லை. எனவே இவர்கள் வாழ்க்கை பெரிய உச்சத்தையும் தொடுவதில்லை. பெரிய நீச்சத்தையும் அடைவதில்லை. இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடுவார்கள்.மேலேயும் போக முடியாமல் கீழேயும் வரமுடியாமல் அல்லாடுவார்கள்.

இதுவரை உங்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் எல்லையற்ற நற்பலன்களை வாரிவழங்கி கொண்டு இருந்தார்.குரு லக்னத்தை பார்த்து உங்களுக்கு ஒருசுயபலத்தை ஏற்படுத்தியிருப்பார்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடியிருக்கும். குருபலத்தால் சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலை போன்ற இனங்களில் முன்னேற்றம் கண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பர்.

அடுத்து பத்தாமிடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். பத்தாமிடம் குருவுக்கு உகந்த இடம் இல்லை. பத்தில குருவரும்போது ஈசனொரு பத்திலே தலைஓட்டிலே இரந்து உண்டதும் என்று வரும். அதாவது குரு பத்தில வரும் போது பதவி போகும். பதவிக்கு இடைஞ்சல் என்று சொல்வார்கள். விரும்பாத ஊர்களுக்கு இடமாற்றம் என்றெல்லாம் சொன்னாலும்
ராசியாதிபதியை பொறுத்து மற்ற மற்ற கிரகங்களை பொறுத்து மற்ற கிரகங்கள் சேர்க்கை பார்வையை பொறுத்து இந்த பலன் கூடவோ குறையவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. ராசியாதிபதியின் நிலையை பொறுத்து அந்த இடமாற்றம் நல்ல இடமாற்றமா?இல்லை தேவையில்லாத இடமாற்றமா என்பதை கண்டு கொள்ள முடியும்.

இங்கே உங்கள் ராசியாதிபதி எப்படி இருக்கிறார் என்று பார்த்து விட்டு உங்களுக்கு வேலைமாற்றம்,உத்யோகமாற்றம் இருக்கிறதா??அந்த மாற்றத்தினால் உங்களுக்கு நன்மை இருக்கிறதா?அல்லது தீமையா? அந்த இடமாற்றத்தினால் முன்னேற்றம் உண்டா என்று காண்பது அவசியம் இல்லையா???

இப்ப உங்கள் ராசியாதிபதி எங்கே இருக்கிறார். ராசிக்கு பதினொன்றாம் பாவத்தில். அவர்யார்?? உங்கள் ராசியாதிபதி சனிபகவான். சனிக்கு பதினொன்றாம் பாவம் மிகவும் பிடித்த இடம்.அவருக்கு அந்த இடம் திண்டுக்கல் தலைப்பா கட்டு பிரியாணி சாப்பிட்ட மாதிரி.!! எதற்கு உங்களுக்கு நன்மைகள் செய்வதற்காக ஆக…

அமர் அமர்ந்துள்ள வீடு பொதுச்சுபரான குருபகவான் வீடு.அது சுபராசி என்பதால் உங்கள் ராசியாதிபதி சுபத்தன்மை அடைந்து ராசியை பார்க்கிறார்.அப்ப உங்களுக்கு இரட்டிப்பு லாபம். ராசியாதிபதி ராசியை பார்த்து கொண்டு இருக்கிறார்.உங்களுக்கு ஒரு பலம் கிடைச்சுபோச்சு.உங்களுக்கு ஒரு வெயிட் கிடைச்சு போச்சு. உங்களுக்கு ஒரு தன்பலம் கிடைச்சு போச்சு.

சொந்த காலில் நிற்பீர்கள். சுய சம்பாத்யம் ஏற்படும். இதுவரைக்கும் ஐந்துக்கும்,பத்துக்கும் வயதான அப்பா அம்மாவிடம் நச்சரித்துவந்த நிலையில் உங்கள் முதல் மாத சம்பள கவரை அம்மாவிடம் தந்து அவர்களை மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காட செய்வீர்கள்.சரி அப்ப உங்கள் ராசிநாதன் பார்த்து ராசியை வலுப்படுத்திய நிலையில், நீங்கள் உங்களுக்கு வரக்கூடிய எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

சரி உங்களுக்கு பத்தாமிடத்தில் உள்ள குருபகவானால் இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நல்ல இடமாற்றமாக,உங்களுக்கு பிடித்த ஊருக்கு ,பிடித்த வேலையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஏன்?ராசியாதிபதி வலுவாக இருப்பதால் வரக்கூடிய இடமாற்றம் சம்பள உயர்வையும், மனமகிழ்வையும்,ப்ரமோசனையும் தரக்கூடிய மாற்றமாக இருக்கும்.

உங்களுக்கு குருவால் வரக்கூடிய பிரச்னைகளை சனி தடுக்கிறார். குருவின் வீட்டில் இருக்கும் சுபத்தன்மை பெற்ற பதினொன்றாம் இட சனியால் உங்களுக்கு பொன், பொருள் சேர்க்கையெல்லாம் உண்டாகும். குருவேறு பத்தில் இருந்து இரண்டாம் வீடான தன்வீட்டை தானே பார்த்து இரண்டாம்வீட்டை வலுப்படுத்துவதால் கல்யாணத்திற்கு நகை எடுப்பீர்கள். பணவசதி வசதி ஏற்படும்.பணவரவில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும்.

சனி பதினொன்றாம் பாவத்தில் இருப்பதால் “இடம் பொருளே வலுவுண்டாம் “என்று செய்யும் படி வீடுவாசல் கட்டி பிழைக்கும் வாய்ப்பை தரும்.குருபகவான் பத்தில் இருந்து கொண்டு தன்னுடைய 180 டிகிரி நேர் பார்வையாக நான்காம் வீட்டை பார்த்து வீடுகட்டுவதற்கு சனியுடன் சேர்ந்து குருவும் ஒத்துழைப்பு கொடுப்பார்.

உங்களுக்கு சனிபலம் உண்டு. குருவின் பார்வைபலம் சிறப்பாக உள்ளது. ராகு கேதுக்கள் பலமும் உள்ளது. கொடியவர்கள் மூன்று, ஆறு,பன்னிரண்டில் மறைந்து பலனை கொடுக்கவேண்டும் என்ற விதிப்படி ராகு கேதுக்களும் உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வாரிவழங்கி கொண்டுள்ளார்கள்.இது அபூர்வமாக அதிசயமாக பலவருடங்களுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும்.

நான் சிலபேருக்கு இந்த வருடத்தில் பிறக்க போகும் சிசேரியன் குழந்தைகளுக்கு முன்கூட்டியே டைம் வைத்துக்கொடுத்தேன். கும்ப லக்னமாக வைத்துக் கொடுத்தேன். லக்னத்தை குரு பார்த்து, லக்னத்தை லக்னாதிபதி பார்த்த அருமையான அமைப்பு. ராகு கேதுக்களும் ஆறு பன்னிரண்டில் மறைந்து ,குருபகவான் ஒன்பதாம் பாவத்திலும்,லக்னாதிபதி பதினொன்றாம் பாவத்திலும் அமர்ந்த மிக அற்புதமான கிரக நிலைகள்.பலவருடங்களுக்கு பிறகுதான் இந்த மாதிரியான அமைப்பு வரும்.

குருபகவானின் ஐந்தாமிட பார்வையால் இரண்டாமிடமான தன்வீட்டை தானே பார்த்து இரண்டாமிடத்தை வலுப்படுத்துவார்.திருமணமாகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும்.பண வரவுகளுக்கு தடையேதும் இராது.

குருபகவானின் நான்காம் பார்வைபலனால் தாயார், மனை,மாடு,கொடுக்கல் வாங்கல் போக்குவரத்து, செய்தொழில் வலுப்பெறும். சிலர் நீண்ட நாட்களாக எண்ணியிருந்த சொந்தவீடு என்ற அமைப்பு கிடைத்து விடும்.பதினொன்றாம் இடத்து சனியால் ஆறுமிடத்தை குருபார்ப்பதால் ஏற்படக்கூடிய கடனை வெல்ல முடியும்.வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த மறைமுகமான பகையை வெல்ல முடியும். சிலர் உங்களை பற்றி மேலிடத்தில் இல்லாததும், பொல்லாததும் சொல்லி சிண்டு முடிந்து விடுவார்கள். ஆறாமிடத்தை குரு பார்ப்பதால் நோய் வந்தாலும் பதினொன்றாம் இட சனியால் நோய் வந்தவுடன் விலகிவிடும்.

ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, பகை என்றால் பதினொன்றாம் இடம் அதிலிருந்து உங்களை மீட்டெடுக்கும் பாவகமாகும். ஆறாமிடம் நோய் அப்படினா!பதினொன்றாம் பாவகம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பாவகமாகும்.ஆறாமிடம் கடன் அப்படினா பதினொன்றாம் இடம் கடனிலிருந்து உங்களை மீட்டெடுக்கும் பாவகமாகும்.ஆறாமிடம் வழக்கு அப்படினா பதினொன்றாம் இடம் வழக்கு தீரக்கூடிய வெற்றியை தரக்கூடிய உபஜெய ஸ்தானத்தில் உச்ச ஸ்தானம் இந்த பதினொன்றாம் பாவகமாகும் .

கடன் எப்ப தீரூம்?? அதிகமான பணம்வருமானம் வந்து ,உபரிபணம் மிச்சமாகும் போது சனிபகவான் அந்த கடனையெல்லாம் அடைப்பார்.பதினொன்றாம் இடத்து சனியால் உங்கள் கடனெல்லாம் தீரும் என்பதில் சந்தேகமில்லை.

நான்காம் வீட்டை குரு பார்ப்பதாலும், மூன்றாம் வீட்டை செவ்வாய் பகவான் தன்வீட்டை தானே பார்த்து கொண்டு இருப்பதாலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எந்த ஒரு கிரகமுமே தன்வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெறும். பலம் பெறும். என்பது ஜோதிட விதி.எனவே மாணவர்கள் உற்சாகத்துடன் படித்து குருப் ஒன்று, நான்கு ,I.A.S. ,I.P.S போன்ற போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை கிடைக்க பெறுவார்கள்.மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் தைரிய,வீரியம், பராக்கிரமம் கூடும்.

நான்காம் இடம் என்பது வித்தைஸ்தானம் ஆகும். மாணவ மாணவியர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.குரு நான்கை பார்ப்பதால் சுகம் கூடும். வாகன சுகம் கிடைக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவார்கள். நோய், நொடி இல்லாமல் சுகமாக இருப்பார்கள். இவர்களை குருபகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் நான்கை பார்த்து இன்னும் ஒரு பதிமூன்று மாதங்களுக்கு கும்ப ராசிக்காரர்களை சுகவாசியாக வைத்திருப்பார்.தாயார் உதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

6.3.2019 அன்று ராகுகேதுக்களும் பெயர்ச்சி ஆகி கேது பதினொன்றாம் பாவகத்துக்கு வந்து இன்னும் நற்பலன்களை கூட்டுவார்கள்.பதினொன்றாம் பாவம் ஞானஸ்தானம் ஆகும். புத்தருக்கு ஞானம் பிறந்தது போல உங்களுக்கும் ஞானம் பொறந்து இதுவரை உங்களுக்கு இருந்த மது,சிகரெட் போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு விடுவீர்கள்.இவைகளினால் வரும் தீமைகளை ஆராய்ந்து உணர்ந்து அல்லது மற்றவர்கள் படும் வேதனைகளை பார்த்து அதிலிருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டு ,ஞானத்தை பெற்று தீய பழக்கங்களில் இருந்து சனியும், கேதுவும் உங்களை விடுவிப்பார்கள்.

ஞான ஸ்தானமான பதினொன்றாம் பாவத்தில் இருக்கும் சனி,கேதுவால் நிறைய கற்று கொள்வீர்கள். ஞானத்தை பற்றிய தேடுதல் தொடங்கும்.அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். இதுவரை தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட இந்தியாவில், தமிழ்நாட்டில் எத்தனை கோவில் இருக்கிறதோ அத்தனை கோவில்களுக்கும் சென்று வரும் பாக்கியத்தை ஞானஸ்தானமான பதினொன்றாம் பாவகத்தில் உள்ள சனி+கேது தருவார்கள்.கும்ப ராசியில் உள்ள ஆன்மீகவாதிகள் திடீர் புகழைஅடைந்து ஆன்மீகத்தில் உச்ச நிலையை எட்டுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மிக மிக நல்ல காலம் இதுவாகும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் ,பதவிகள் கிடைக்கும்.தேர்தல்களில் வெற்றி கிடைக்கும். உபஜெய ஸ்தானங்களில் உச்ச ஸ்தானம் இந்த பதினொன்றாம் பாவம். உபஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். பதினொன்றாம் இடத்து சனி வெற்றியை தருவார். விவசாயிகள் நல்ல மகசூலை அடைந்து லாபத்தை அடைவார்கள்.

பத்தாமிடத்து குருவால் மட்டும் நீங்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.பணியில் கவனமுடன் செயல்படுங்கள்.பத்தாமிடத்து குருவால் வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர்கள் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். இருந்தாலும் சனிபலத்தால் நீங்கள் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

ஆறு,பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்குமாகில்
கூறு பொன் பொருள் மிகவுண்டாம்
குறைவில்லா செல்வம் உண்டாம்
ஏறுபல்லக்கு உண்டாம்
இடம் பொருளே வலுவுண்டாம்
காறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”

வீடு வாசல் கட்டி, வாகன யோகங்கள் கிடைக்கப்பெற்று ,பொன் பொருள் சேர்க்கையோடு ,லட்சமி கடாட்சம் பெற்று
நன்றாக பிழைப்பீர்கள்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More