குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2018 – 2019 | Guru Peyarchi Mithuna Rasi 2018
குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2018 (Guru Peyarchi 2018 – Mithuna Rasi)
மிதுன ராசி
குருபகவான் வரும் புரட்டாசி மாதம்25 ந்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று இரவு 7.15 சுமாருக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு விசாகம் நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.
மேசராசிக்காரர்கள் உடல்உழைப்பால் பிழைப்பவர்கள் என்றால் மிதுன ராசிக்காரர்கள் தனது புக்தியால் பிழைப்பவர்கள். மேச ராசிக்காரர்கள் பாட்ஷா அப்படினா மிதுன ராசிக்காரர்கள் பாட்ஷா படத்தில் முன்பகுதியில் வரும் மாணிக்கம். சண்டைனா இவர்கள் ஒதுங்கி போய்விடுவார்கள்.
முக்கியமாக சமாதானத்தையே விரும்புவார்கள். எந்த ஒரு பிரச்னையையும் தனது அறிவால் புக்தியால் சமாளித்து விடுவார்கள். எந்த ஒரு பிரச்னைகளிலும் சிக்காமல் சாதுர்யமாக தப்பித்து விடுவார்கள். இவர்கள் ஒரு மாதிரியானவர்கள். வம்பை விலைக்கு வித்துட்டுவந்து விடுவார்கள்.
இவர்கள் பேசியே காரியத்தை சாதித்து கொள்ள கூடியவர்கள்.வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பொருந்தும். சிலர் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவர்.கபட தாரிகள்.சிரித்து பேசியே மயக்கிபோடுவார்கள்.ஏன்னா இவர்களுடைய ராசியாதிபதி புதன். கிருஷ்னருடைய கபட நாடகம் நீங்கள் அறிந்தது தானே!
இதுவரைக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த குருபகவான் எல்லையற்ற, அளவிறந்த நன்மைகளை செய்து வந்தார். சிலருக்கு திருமணம், புத்திரபாக்கியம், வேலை,போன்ற அவர்களுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் ஐந்தாம் இடத்து குருபகவான் கடந்த பதினொரு மாதமாக நல்ல பலன்களை செய்து வந்தார்.
தற்போது ஆறாமிடத்துக்கு வரப்போகும் குருபகவான் என்ன செய்ய போகின்றார்??
“பத்துடன் மூன்று நான்கும்,
பன்னிரண்டு எட்டோடு உறவும்
மத்தமம் ஆறில் ஒன்றில்
மன்னவன் இருந்த காலை
தத்துவம் நிட்டூரம் வாதம் பித்தம்
பெற்றவன் கேடும், பிறப்பு பிள்ளை,
பெண்சாதி பகையும் ஆவார்”
என்ற வருஷாதி நூல் வீண் பிரயாசைகள், அலைக்கழிப்பு, ஒரு காரியத்துக்குஒருமுறைக்கு பத்து முறை
நடக்கனும்.நோய் தொல்லைகளை தரும். அப்பாவுக்கும் டைம் சரியில்லை. உறவுகள் பகையும், நிம்மதி குறைவும் ஏற்படும் என்கிறது இந்த வருஷாதி நூல்.குரு ஆறிலே வர உறவிலே பகை என்று வரும்.
ஏற்கனவே குரு ஆறில் வரப்போகிறார்.போதாக்குறைக்கு சனிவேறு ஏழில் நிற்கின்றார்.சனி ஏழில் நின்று சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துவார்.முடவன்,நொண்டி, மந்தன் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒருராசியை கடக்கவே இரண்டரை ஆண்டுகள் ஆகும். ஒரு ராசிக்கட்டத்தை சுற்றி வர முப்பது வருடங்கள் ஆகும். எனவே ஏழில் நிற்கும் சனி திருமணத்தை தாமதப்படுத்துவார்.
போதாக்குறைக்கு சனி வேறு ராசியை தனது ஏழாம் பார்வையால் பார்த்து விடுவதால் சிலருக்கு உடல்நிலை தொந்தரவுகள் ஏற்படும். மனதில் தேவையில்லாத பயம் ஏற்படும். சனியின் பார்வை பலத்தால் தாய்க்கும் இடையூறுகள் ஏற்படும். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் தன்னுடைய வீடான ஒன்பதாம் வீட்டை பார்த்து விடுவதாலும், 6.3.2019 அன்று ராகு கேதுக்கள் பெயர்ச்சியாகி கேது சனியுடன் குருவின் வீட்டில் சேர்க்கை பெறுவதால்
இந்த காலங்களில் ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். சித்தர்கள் வழிபாடுஅதிகமாகசெய்வீர்கள்.அநேக கோவில்களுக்கு செல்லக்கூடிய பாக்கியங்களும்,தரும தானங்களும்,ஞானிகள், சித்தர்கள் தரிசினம் கிடைக்கப்பெறுவீர்கள்.பணம் கிடைக்குதோ இல்லையோ ??நிறைய புண்ணியங்களை அடுத்த ஜென்மத்திற்கு டெபாசிட் செய்து கொள்வீர்கள். சனி தன்னுடைய வீடான ஒன்பதாம் வீட்டை தனது மூன்றாம் பார்வையால் பார்த்து விடுவார்.எந்த கிரகமுமே தன் வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெறும் என்பது ஜோதிட விதி.பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுகிறது.
குருபகவான் தான் இருக்கும் வீட்டை காட்டிலும், தான் பார்க்கும் பாவங்களை வலுப்படுத்துவார் என்ற விதிப்படி குருபகவான் தன்னுடைய வீடான பத்தாம் வீட்டை ஆறிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் பார்த்து விடுவார்.எனவே வேலை இல்லாத மிதுன ராசிக்காரர்களுக்கு இனி வேலை கிடைத்து விடும். தொழில் சிறக்க போகின்றது.
அடுத்து குருபகவான் தன்னுடைய நேர் பார்வையால் பன்னிரண்டாம் பாவத்தை பார்த்து விரையங்களை அதிகப்படுத்துவார்.தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் தனம் குடும்பத்தை பார்த்து சனியால் ஏற்பட்ட தாமத திருமணத்தை குரு நிவர்த்தி செய்து மிதுன ராசிக்காரர்களுக்கு குருபகவான் இரண்டாம்,பன்னிரண்டாம் பாவங்களை பார்த்து இந்த ராசியை சேர்ந்த ஆண்,பெண் இருவர்களுக்கும் திருமணத்தை நடத்தி தருவார். திருமணத்தை கூட்டுவிப்பார்.
மொத்தத்தில் நன்மையும் தீமைகளும் கலந்த பலன்களை இந்த குருப்பெயர்ச்சி இவர்களுக்கு தரும் கூறி ஜாதகத்தில் தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த குருப்பெயர்ச்சி சாதமான பலன்களை செய்ய வாய்ப்பிருக்கிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியினால் வேலை கிடைத்து விடும்.கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொதுவாக கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் குறைவாக இருக்கும். அது சனி ஏழில் இருப்பதால்.
பரிகாரமாக இந்த ராசிக்காரர்கள் உங்களது ராசினாதனான புதன் பகவானுக்கு உரிய ஷேத்ரமான திருவெண்காடு சென்று அங்குள்ள சூரிய, சந்திர,அக்னி தீர்த்தத்தில் நீராடி மூலவரை வழிபட்டு பின்பு புதன் சந்நிதியில் வழிபட்டு வர உங்களுக்கு வரக்கூடிய தொல்லைகள் குறையும். கஷ்டங்கள் விலகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வருவது ,சனிக்கிழமை, சனிக்கிழமை பெருமாளுக்கு, ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வருவது உங்களுக்கு சனியால் வரக்கூடிய தொல்லைகளையும் குறைக்கும் என்று கூறி நன்றி.வணக்கம்.
Comments are closed.