குருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2018 – 2019 | Guru Peyarchi Rishaba Rasi 2018

6,031

குருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2018 (Guru Peyarchi 2018 – Rishaba Rasi)

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்கள் மிக பொறுமைசாலிகள்.பொறுமைக்கு உதாரணம் பூமி அதுபோல பூமியை போன்ற பொறுமைக்கு உதாரணமாக திகழ்பவர்கள் இந்த ரிஷப ராசிக்காரர்கள். நிலராசி.சௌம்ய ராசி.சுக்கிரன் குருவுக்கு நிகரான இன்னொரு சுபக்கிரகம். குரு கோடி தோசத்தை நிவர்த்தி செய்வார்.சுக்கிரன் இலட்சம் தோசங்களை லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது இலட்சம் தோசங்களை நீக்குவார்.புதன் நுறு தோசங்களை,லக்னாதிபதியோடு லக்னத்தோடு சம்பந்தப்படும்போது நீக்குவார்.

குருவின் லக்ன ராசியில் பிறந்தவர்கள் நேர்மை,நீதி, நியாயம், போன்று ஒரு விதிக்குள் வாழ்பவர்கள். ஒரு கோட்டுக்குள்,வரைமுறைக்குள் வாழ்பவர்கள்.
ஆனால் சுக்கிரனுடைய லக்ன, ராசியில் பிறந்தவர்கள் எல்லாத்தையும் அனுபவிக்கனும் என்று நினைப்பவர்கள்.மன்னு திங்கற உடம்ப மனுசன் தின்னா என்ன??அப்படீங்கற கொள்கையுடையவர்கள்.

இந்த உலகம் என்ன சொன்னா என்ன?நாம நமக்காக வாழனும் அப்படிங்கற மாதிரியான எண்ணம் உடையவர்கள். ஆடம்பர பிரியர்கள் .
உல்லாச பிரியர்கள். கலா ரசிகர்கள். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் .
அழகை ரசிப்பவர்கள்.ஆராதிப்பவர்கள்.
இவர்களது சின்னம் காளை என்பதால் சிறிய வயதிலேயே குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டியது வரும். குடும்ப பாரத்தை விருப்பத்துடன் சுமப்பார்கள்.

இதுவரையிலும் ரிஷப ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த குருபகவான் நோய்தொல்லைகளை அளித்தார். ஆறாமிடத்தில் குரு வந்த உடனேயே கடன் வாங்க வைத்தார். போதாக்குறைக்கு அட்டம சனியும் கூட சேர்ந்து கொண்டது.அட்டம சனியால் சிலருக்கு கர்மம் செய்ய கூடிய அமைப்பும்,(கர்மாதிபதி திசை புக்திகள் நடக்கும் போது அஷ்டமச்சனி வரும் காலத்தில் கர்மகாரியங்கள் செய்ய வேண்டிவரும்).,சிலருக்கு ராகுதசையும் அல்லது சனிதிசையும் நடைமுறையில் இருந்து அஷ்டம சனி நடக்கும் காலத்தில் வறுமை ,துன்பம், தொல்லை, கஷ்டம் போன்ற கெடுபலன்கள் நடந்து இருக்கும்.

இதுபோன்ற நிலையில் இந்த குருப்பெயர்ச்சி யால் இவர்களுக்கு வரக்கூடிய எல்லா தொல்லைகளையும் குருபகவான் நீக்குவார்.
பன்னிரண்டு வருடங்களுக்கு வரக்கூடிய கஜகேசரி யோகம் என்று சொல்லக்கூடிய குரு சந்திரனை பார்த்து, சந்திரன் குருவைபார்த்து வரக் கூடிய சகல தோசங்களையும் போக்கக்கூடிய கஜகேசரி யோகம் வரப்போகுது. துன்பங்கள் சூரியனை கண்ட பனிபோல விலகப்போகுது.

இப்போ இவர்களுக்கு இதுவரையில் ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்த குருபகவான் ஏழாமிடத்துக்கு செல்ல போகிறார். குருபகவான் திருக்கணிதப்படி 11.10.2018 வியாழக்கிழமை இரவு 7.16 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.அது இவர்களுக்கு ஏழாமிடம் ஆகும்.

குருபகவான் ஏழில் இருப்பது ஏற்ற இடமாகும்.
பூபதி ஏழில் நிற்க புனிதன் . பேரும் புகழை எல்லாம் தரும். பாராட்டுக்கள் கிடைத்தல்,பண உதவிகள் கிடைக்கும். பேங்க்ல லோன் போட்டாக்கூட லோன் ஈசியாக கிடைத்து விடும்.
சிலருக்கு திருமணம் நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் லாபம் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரும்.

குருபகவான் ராசிக்கு 2,5,7,9,11 போன்ற இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலமே குருபலம் என்று அழைக்கப்படும். இவர்களுக்கு அட்டம சனியிலிருந்து வரக்கூடிய கொடுமையான பலன்களை குருபகவான் நிவர்த்தி செய்வார்.குருபகவான் ரிஷப ராசிக்கு எட்டாம் இடத்துக்கு பன்னிரண்டாம் பாவத்தில் மறைந்து எட்டாமிட ஆதிபத்தியத்தை குறைத்து கொண்டு தன்னுடைய ஐந்தாம் பார்வையால் தன்னுடைய வீடான லாப ஸ்தானத்தை பார்த்து
லாபத்தை அதிகப்படுத்தி ,தன்னுடைய நேர் ஏழாம் பார்வையால் ஜென்ம ராசியை குருபார்த்து ராசியை வலுப்படுத்தி ,
தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் மூன்றாம்இடத்தை பார்த்து ,தோற்ற பொலிவையும், லாபத்தையும், காரிய வெற்றிகளை தருவார்.

இதுக்கு முன்னாடி சாதாரணமாக நடக்க கூடிய காரியத்துக்கு கூட பத்து முறை நடந்த நீங்கள்
இனி டக்னு போற காரியத்தை ஈசியாக முடித்து கொண்டு வருவீர்கள்.தொழிலில் நல்ல லாபம் வந்து கடன்களை அடைப்பீர்கள் .சிலருக்கு ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டு.

குருபகவான் திருக்கணிதப்படி 11.4.2019 அன்று வக்ரம் பெற்று 11.8.2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைவார். அந்த காலங்களில் ரிஷப ராசிக்காரர்கள் நோய்தொல்லைகளுக்கும்,சிறு விபத்துக்களுக்கும் ஆளாக நேரிடும். அப்போது அதிகமான கவனம் தேவைப்படும்.சுபக்கிரகங்கள் நல்ல இடங்களில் வக்ரம் அடையும் போது நல்ல பலன்களை தராது என்ற விதிப்படி அந்த நான்கு மாத காலங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது.

பொதுவாக ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லிக்கொண்டு அஷ்டம சனியிலிருந்து இவர்களை பாதுகாக்கும் ஒரு கேடயமாக இந்த குருப்பெயர்ச்சி கண்டிப்பாக இருக்கப்போகிறது என்பது சந்தேகமே இல்லை.

பொதுவாக இவர்களுக்கு ஒருவருட காலம் நல்ல காலமே என்பது சந்தேகமே இல்லை கூறி

குரு பதினொன்று,ஏழு ஒன்பான்
கூறும் ஐந்து இரண்டில் நிற்க
திருமகள் கிருபை உண்டாகும்
தீர்த்த யாத்திரை உண்டாகும்
சுபகாரியங்கள் உண்டாகும்
தரும தானங்கள் உண்டாகும்
தந்தை தாய் உதவியும் உண்டாகும்
அருமையும், பெருமையும் உண்டாம்
அரசர் சேவையும் உண்டாமே என்று

பூர்வ நூல்கள் சிலாகித்து கூறுகின்றன.
சுபகாரியங்கள், லட்சுமி கடாட்சம், தீர்த்த யாத்திரைகள், தாய் தந்தை உதவி,அரசாங்க உதவி, மேலிடத்து உதவி அதாவது அரசாங்க உதவிஅனைத்தும்,பெற்று அருமையாக குரு பதினொன்று, ஏழு,ஒன்பது ,ஐந்து, இரண்டு போன்ற இடங்களில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் போது நல்ல பலன்களை ஜாதகன் அடைந்து அருமையும் பெருமையும் பெற்று
பேரும் புகழையும் பெற்று அருமையாக பிழைப்பான்.

இவர்களுக்கு பரிகாரமாக அஷ்டம சனி நடந்து கொண்டு இருப்பதால் காலபைரவ வழிபாடு மிகுந்த ,நல்ல பலன்களை அளிக்கும். இவர்கள் இவர்களுடைய ராசிநாதனான சுக்கிரனுடைய ஸ்தலமான ஸ்ரீ ரங்கம் சென்று வழிபட்டு வர நன்மைகள் அதிகம் பெற்று நலமுடன் வளமுடன் வாழ்வர்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More