குருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2018 – 2019 | Guru Peyarchi Simha Rasi 2018

5,047

குருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2018 (Guru Peyarchi 2018 – Simha Rasi)

சிம்ம ராசி

திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25 ந்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று 7.15 சுமாருக்கு துலாம் விருச்சிக ராசி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.

சுத்த வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 4ம்தேதி தமிழுக்கு புரட்டாசி மாதம் பதினெட்டாம் தேதி இரவு 10 மணி சுமாருக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.நமக்கு திருக்கணிதம்,சுத்த வாக்கியம் இரண்டுமே நமக்கு இரண்டு கண்கள் மாதிரி. யாருக்கு எது அனுபவத்தில் சரியாக வருகிறதோ அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியது.

நவகிரகங்களுக்கு ராஜா சூரியன்.
காட்டுக்கு ராஜா சிங்கம். இந்த உலகத்தையே தன்னுடைய ஒளியால் வாழவைத்து கொண்டிருப்பவர் சூரியன். மற்ற எல்லா கிரகங்களும் சூரிய ஒளியை வாங்கியே திரும்ப பிரதிபலிக்கிறது.எல்லா உயிர்களையும் தன் ஒளியால் வாழவைத்து கொண்டிருக்கும் சூரியனே உங்கள் ராசிநாதன்.அப்ப நீங்கள் எப்படிபட்டவர்களாக இருப்பீர்கள்???

சூரியன் ஒரு துரித கிரகம். எனவே நீங்கள் சுறுசுறுப்பானவர்கள்.சிவந்த கண்களை உடையவர்கள். அப்படினா கோபக்காரர்கள் அப்படினு அர்த்தம்.
கௌரவமானவர்கள்.எந்த நிலையிலும் தங்களது கௌரவத்தை விட்டு தர மாட்டார்கள். இவர்களுக்கு கடன் கொடுத்தால் எப்படியும் ,எப்பாடுபட்டாவது கடனை கட்டிவிடுவார்கள்.ஏன்னா
நீங்கள் ரோட்டில் வைத்து பணத்தை கேட்டு வீட்டீர்களானால் இவர்களுடைய மரியாதை என்னாவது,மானம் என்னாவது,கௌரவம் என்னாவது???

தான் என்ற எண்ணம் உள்ளவர்கள். “சிம்மத்தோன் சீறியே சினந்து நிற்பான்”
கோபமுள்ளவன்.தைரியசாலிகள். சிங்கத்தின் தைரியம் தான் நமக்கு எல்லாத்துக்கும் தெரியுமே??சிம்மத்தின் கம்பீரம்.??சிம்மத்தின் வேகம் சுறுசுறுப்பு இவர்களிடம் உண்டு. சொந்த காலில் நிற்பார்கள். மகன்கிட்ட உதவிகேட்க தயங்குவார்கள். தனிவலையில் வாழ்பவர்கள். உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பிறரை பார்த்து சொல்லுவார்கள். தானும் அதுபோலவே நடப்பார்கள்.சிம்மத்தின் மகிமையோ மகிமை.

அரசாங்கத்தை குறிப்பிடக்கூடிய சிம்ம ராசிக்கு இதுவரையில் மூன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது நான்காம் இடத்திற்கு வருகிறார். மூன்றாம் இடம் குருபகவானுக்கு உகந்த இடம் இல்லை. தனகாரகன், புத்திர காரகன் மறைவு பெறுவது நல்லதல்ல என்ற விதிப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு நோய்தொல்லை,அலைக்கழிப்பு,உறவுகள் பகை,கடன்,குழந்தைகளால் தொல்லை, அவமானம் போன்ற கெட்ட பலன்களை மட்டுமே இதுவரையிலும் உங்களுக்கு தந்தார்.

இனி நான்காம் இடத்திற்கு வரும் குருபகவான் என்ன செய்வார்??
நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது.அஷ்டமத்தில் பாதி அர்த்தாஷ்டமம் . அட்டமம் என்றால் எட்டு. எட்டில பாதி நான்கு.இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும். குரு நல்லது செய்வாரா?அல்லது கெட்டது செய்வாரா?என்று.

அர்த்தாஷ்டம குரு கண்டிப்பாக நன்மை செய்ய மாட்டார். ஆனால் மூன்றாமிடத்தில் இருந்ததை காட்டிலும் பரவாயில்லை என்ற நிலைதான்.பரவாயில்லை. குருபகவான் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் இடத்தை வலுப்படுத்துவார் என்ற விதிப்படி குருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்த்து தொழிலை பலப்படுத்துவார். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். சுயதொழில் எனப்படும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். லாபம் உண்டு.

குருபகவான் தன்னுடைய விஷேஷ பார்வையான ஐந்தாம் பார்வையால் அட்டம ஸ்தானத்தை பார்த்து அட்டம ஸ்தானத்தை வலுப்படுத்துவார். சிலருக்கு சிறிய அளவிலானவிபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. குருபகவான் அட்டமத்தை பார்ப்பதால் ஆயுள் கெட்டி.ராசிக்கு அட்டமாதிபதி அட்டமாதிபதி அட்டமத்தை பார்ப்பதால் தொல்லைகள் இருக்கும். “எட்டும் ஈராரும் இலகு பன்னிரண்டும் எவ்வளவு நெருக்கடிய கொடுக்குமோ அவ்வளவு நெருக்கடிய கொடுக்கும். ஒரு தொல்லை போனா ஒரு தொல்லை வரும்”

அவருடைய ஒன்பதாம் பார்வையால் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டை பார்த்து
விரையங்களை அதிகப்படுத்துவார்.இங்கே நீங்கள் கேட்கலாம். குருபார்த்தா விரையங்கள் குறையும் தானே?நீங்கள் என்ன விரையங்கள் பெருகும் என்கிறீர்கள் என்றால் அது அப்படித்தான். குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும்.அதே சமயத்தில் அவர் பார்க்கும் இடங்கள் எல்லாம் பெருகும். வளரும். அப்ப ஆறாமிடத்தை குரு பார்த்தால் கடன் குறையும் என்று கணிக்கக்கூடாது.கடன் பெருகும் வளரும் என்று கணிக்கவேண்டும்.

அப்ப அவருடைய பார்வை பலன்கள் சிம்மத்திற்கு சிறப்பில்லை.தொழில் மட்டுமே சிறக்குது.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு ,விரும்பும் இடத்திற்கு பணிமாற்றம் கண்டிப்பாக உண்டு. சிலருக்கு வெளிநாட்டு உத்யோகம் கிடைக்க வாய்ப்புகள் அதிக அளவில் உண்டு. ஏன் குருபகவான் அட்டமத்தையும் ,விரையத்தையும் நீர் ராசியில் இருந்து பார்வையிடுவதால் கடல்கடந்து ஊர்விட்டு ஊரு,நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

நான்கில் குருபகவான் கோட்சாரத்தில் வருவதைபற்றி புலிப்பாணி முனிவர்

“சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா
சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே
அல்லப்பா அகிலங்கள் எல்லாம் தோற்று
அப்பனே ஆரண்யம் சென்றார் ஐவர்.
நல்லப்பா நாலதனில் குருவுமேற
நரச்சுகம் உழங்கிட்டாது நலிவுமுண்டு
மன்னப்பா மன்னாலும்,பொன்னாலும் வேதை மகத்தான குருபதியின் கடாட்சத்தாலே”

அதாவது நான்கில் குரு வந்த காலத்தில்தான் தருமபுத்திர் மற்றும் அவரது சகோதரர்கள் சூதில் நாட்டை இழந்து ஆரண்யம் எனும் கானகம் சென்றனர். அடுத்து நாணயத்தடுமாற்றம் ,ஏமாற்றம், மற்றும்
தங்க நகைகளை பேங்க்ல அடமானம் வைப்பதுவும்,விவசாய நிலங்களில் நஷ்டத்தையும் குருபகவான் தருவார் என்கிறார் புலிப்பாணி முனிவர்.

மன்னு ,பொன்னு வேதை அப்படிங்கறார்.
வேதைனா பகைனு அர்த்தம். மன்னு பகை.மாடு,கன்னு விவசாயம் பலிதமாகாது.யாருக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு.

இன்னும் ஒன்று முக்கியமாக சொல்ல வேண்டியது .சிலருக்கு இடமாற்றம் இருக்கும். இன்னும் சிலருக்கு விரும்பாத ஊருக்கு, தண்ணியில்லாத ஊருக்கு மாற்றல் ஆகி போவார்கள். பஞ்ச பாண்டவர்களுக்கு நான்காம் இடத்தில் குருபகவான் வரும் போது தான் அவர்கள் நாட்டை இழந்து காட்டுக்கு சென்றார்கள் என்பதால் அப்ப இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் இருக்கும்.

சரி. குருபகவான் தான் அப்படி. சனி என்ன செய்ய போகிறார். சனி ஐந்தாம் பாவத்தில் இருந்து குழந்தைகளால் சங்கடங்களையும்,அவமானங்களையும்,அவர்களால் விரையங்களையும் ஏற்படுத்துவார்.
பிள்ளைகள் கைக்கு மீறுவார்கள்.பருவ வயதில் இருக்கும்பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ஒருசிலருக்கு குழந்தைகள் திருமண விஷயங்களில் அதிருப்தி ஏற்படும்.
சனி ஐந்தில் இருந்தாலே பூர்வ புண்ணிய பலன் குறைவு என்று அர்த்தம்.ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி அபகீர்த்தியை உண்டு பண்ணுவார்.

ஐந்தாம் இடம் என்பது திரிகோணங்களில் ஒன்றாக வரும். இந்த பாவகத்தில் சனி இருப்பது கையில் இருக்கும் பொருள் விரையமாகும்.சோப்புல பணமே வச்சுக்க முடியாது ங்கற நிலைமையை தரும். பற்றாக்குறையை தரும். கடவுள் நம்பிக்கை குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் வம்பு, வழக்கு, கோர்ட்,
கேசு வரும்.ஜனன ஜாதகத்தில் ஐந்தில் பாவகிரகங்கள் இருந்து அவர்களுடைய தசாபுக்திகள் நடந்து, கோட்சாரங்களில் சனி ஐந்தில் இருக்கும் காலங்களில் கண்டிப்பாக பூர்வீக சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கும். அல்லது பூர்வீக சொத்துக்கள் அடமானத்தில் இருக்கும்.

கோள்சாரம்,ஜனன ஜாதகம் இரண்டையும் இரண்டு தராசு தட்டுகளில் நிறுத்தி ,இரண்டையுமே சீர்தூக்கி ஆராய்ந்து அறிந்து பலன் சொல்ல பலன் சரியாக வரும்.

ராகு கேதுக்கள் பெயர்ச்சியால் ராகு நன்மைகளை தரும் அமைப்பான பதினொன்றாம் பாவத்தில் இருப்பது பணவரவுகளுக்கு தடை இல்லை. ராகு பதினொன்றாம் பாவத்தில் இருந்து லாபமேன்மைகளை தருவார். திருக்கணிதப்படி
6.3.2019 அன்று ராகு ,கேதுக்கள் பெயர்ச்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் நன்மைகளும், தீமைகளும் கலந்து நடக்க கூடிய காலம் என்றாலும் இதற்கு முன்பு இருந்ததைகாட்டிலும் தற்போது உள்ள நிலை சிறப்பானதே என்று கூறி ,ஜனன ஜாதகத்தில் தசாபுக்திகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் நன்மைகளும்,நற்பலன்களும் அதிகளவில் ஏற்படும.

பரிகாரமாக உங்களது ராசிநாதனான சூரியனை வணங்கி வாருங்கள். பிரதோச காலங்களில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்து, சிவப்பு கலரில் பட்டு எடுத்து சாற்றி,செந்தாமரை மலர் மாலையை இறைவனுக்கு சாற்றி வழிபட்டு வர உங்களுக்கு அதிகளவில்நன்மைகள் ஏற்படும்
என்று கூறி

நன்றி வணக்கம்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More