குருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 - 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018

குருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 (Guru Peyarchi 2018 – Thula Rasi)

துலாம் ராசி

கிரகங்களில் முழுமுதல் சுபக்கிரகம் குருபகவான் .100/100சுபக்கிரகம் குருபகவான். ஆனால் ஒரேயொரு இடத்தில் முழுப்பாவியாக மாறுவார் .அது எந்த இடம். குருபகவான் பகை,நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து 8 1/2 டிகிரிக்குள் இணைந்து கிரகண தோசத்தை அடையும் போது போது குரு சண்டாள யோகத்தை அடைந்து முழுப்பாவியாக மாறுவார்.அப்போது அவருடைய பார்வையில் ஒளி இருக்காது. மற்ற கிரகங்களால் வரும் தோசங்களை நிவர்த்திக்க அவரால் முடியாது. அவரே அவருடைய ஒளியை ராகுவிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். அவர் எப்படி மற்ற கிரகங்களால் வரக்கூடிய தோசத்தை நிவர்த்தி செய்ய முடியும்???

குருபகவான் 100/100 முழுமுதலசுபகிரகம்.குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும். குருபார்க்க கோடி நன்மை. அப்பேர்ப்பட்ட குருபகவானின் விருச்சிக ராசி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது??

குருபகவான்விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25ம்தேதி சரியான ஆங்கிலம் 11.10.2018 வியாழக்கிழமை இரவு சு
மார் 7.15 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு விசாகம் நான்காம் பாதத்தில்
பெயர்ச்சியாக இருக்கிறார்.

துலாம் ராசி சுபராசி.அதிபதி சுக்கிரன் பகவான் என்பதால் இவர்கள் தங்களை நன்கு அலங்கரித்து கொள்வார்கள். அடிக்கடி கண்ணாடி முன்பு நின்று மேக்கப் போட்டு கொள்வார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் வெள்ளை வெளேர் என்ற தூய வெள்ளை நிற ஆடைகளை அணிவார்கள். இவர்களுக்கு சுத்தமாக இருக்க வேண்டும். தரமான ஹோட்டலுக்கு போய்தான் சாப்பிடுவார்கள். செலவை பார்க்க மாட்டார்கள்.

சிலர் பைவ்ஸ்டார்,திரிஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவார்கள். சாப்பிடுவார்கள். ஒருசிலர் வீட்டு வேலை அனைத்துக்குமே ஆள் வைத்திருப்பார்கள்.சுக்கிரன் இவர்களை சுகவாசியாக வைத்துள்ளார்.துலாம் தராசு சின்னத்தை உடையது என்பதால் பலர் கடைவீதியை ஒட்டிய இடங்களில் வியாபாரம் செய்வார்கள்.சுக்கிரன் சுபக்கிரகம் என்பதால் கஞ்சத்தனம் இருக்காது. ஆடம்பர பிரியர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே. பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். போகும் போது என்னத்த கொண்டு போக போறோம் இருக்கும் வரை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைவர்கள் இந்ததுலாம் லக்னம்,துலாம் ராசிக்காரர்கள்.

குருவுக்கு இணையான இன்னொரு சுபக்கிரகமான சுக்கிரன் உலக இன்பங்களுக்கு அதிபதி என்பதால் பெரிய வீடு,ஆடம்பரமான கார்,கட்டில்,மெத்தை போன்ற ஆடம்பர பொருள்கள் மேல் இவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும்.தேவையில்லாத வம்பு வழக்குகளுக்கு போகமாட்டார்கள்.பயந்த சுபாவம் உள்ளவர்கள்.

இந்த துலாத்திற்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த குருபகவான் நோய்தொல்லைகள்,கடன்,சத்ரு போன்ற கெட்ட பலன்களை செய்து வந்தார். தற்போது இரண்டாம் இடத்திற்கு குருபகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு குருபலம் வந்து விட்டது.

“குரு பதினொன்நேழ்,ஒன்பான
கூறும் ஐந்து இரண்டில் நிற்க
திருமகள் கிருபை உண்டாகும்.
தீர்த்த யாத்திரை உண்டாகும்
சுபகாரியங்கள் உண்டாகும்
தரும தானங்கள் உண்டாகும்
தந்தை தாய் உதவியும் உண்டாகும்
அருமையும் பெருமையும் உண்டாம்
அரசர் சேவையும் உண்டாமே”

குருபகவான் இரண்டில் அமைய லட்சுமி கடாட்சம் உண்டாகும். பணம் நிறைய வரும். பணம் நிறைய வந்து பையை நிரப்பும். கோயில் குளத்துக்கு எல்லாம் சென்று வரும் பாக்கியம் ஏற்படும். புண்ணிய நதிகளில் நீராடக்கூடிய வாய்ப்புகள் தானாக வரும். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. தன்னை பார்த்து பின்னப்பாரு என்பார்கள். நமக்கு மேலதான் தரும தானங்கள். ஆனால் குருபகவான் இரண்டில் வரும் போது அடுத்தவங்களுக்கு தருமம் செய்யும் அளவிற்கு பணம் வரும் என்கிறது .
பேரும், புகழும் ஏற்படும். உங்களுடைய சமுதாய அந்தஸ்து உயரும். அரச பூஜிதை உண்டாகும். சிலருக்கு அரச விருதுகள், அரச பாராட்டுக்கள், அரசாங்கத்தினால் நன்மைகள்,பேங்க்ல லோன் போட்டாக்கூட லோன் கிடைச்சு போயிடும்.

மண்ணு,பொன்னால் லாபம் உண்டாகும். விவசாய பலிதம் உண்டாகும். நகை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். துலாம் ராசிக்காரர்கள் பலருக்கும் டக்,டக்னு கல்யாணம் நடந்துகிட்டு இருக்கிறது. பலர் வீடு கட்டிட்டாங்க.பலர் கார் மாதிரியான வாகனங்கள் வாங்கிட்டாங்க. வாங்க முயற்சி செய்து கொண்டு உள்ளார்கள்.இதையெல்லாம் நான் இங்கிருந்து பாத்துகிட்டே இருக்கிறேன்.

இதற்கு காரணம்இவர்களுக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது. சகாயசனி ஆரம்பித்து விட்டது. சகாய சனி பல சகாயங்களை இவர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறார்.செய்ய போகிறார். சனி அந்நிய கிரகம் என்பதால் மூன்றாவது மனிதர்கள் சப்போர்ட்கள் . (Therd person) ஆதரவுகள் கிடைக்கும்.
ஏறு பல்லக்கு என்ற வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.

கொடியவர்கள் மூன்று, ஆறு,பன்னிரண்டில் மறைந்து பலனை கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி சனி மூன்றாமிடமான உபஜெய ஸ்தானத்தில் இருப்பது காரிய வெற்றிகளை தரும்.இந்த ராசி,லக்னங்களை சேர்ந்த அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கும். வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலை அடைவார்கள். செலவு குறைந்து வருமானம் அதிகளவில் வரும். பயிர்கள் நன்கு விளையும். இவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்கள் ,காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சியாக அமோகமாக இருப்பர்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மாணவர்களாக தேர்ச்சி பெறுவர்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவர்.

“ஆறு பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்கும் மாகில்
கூறு பொன் பொருள் மிகவுண்டாம்
குறைவில்லா செல்வமுண்டாம்
ஏறு பல்லக்குமுண்டாம்
இடம் பொருளே வலுவுண்டாம்
காறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”

6.3.2019 அன்று ராகு கேதுக்களும் பெயர்ச்சியாகி கேது மூன்றாம் இடத்திற்கு வந்து நற்பலன்களை வாரி வழங்க காத்திருக்கிறார்கள்.இதுவரை தொழிலில் அலைச்சல் என்ற நிலை மாறி குறைவான உழைப்பு அதிக லாபம் என்ற நிலையை தருவார்கள். வெளிநாட்டு இனங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அபாரமாக இருக்கும். நேரம் நல்லாருக்கறப்ப என்ன தொழில் செஞ்சாலும் ஜெயிக்கும். பலருக்கு சம்பள உயர்வு, ப்ரமோசன் கிடைக்கும். விரும்பிய ஊர்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகும். இந்த ராசிக்காரர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.பாவர்கள் உபஜெய ஸ்தானங்களில் அமரும் போது கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். மண்ண தொட்டாலும் பொன்னாக மாறும்.

ஜனன ஜாதகத்தில் திசாபுக்திகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில் கோள்சாரம் என்ற கோட்சாரம் நன்றாக இருப்பதால் நற்பலன்கள் அதிகரித்து அருமையாக பிழைப்பார்கள் என்று கூறி

மீண்டும் விருச்சிக ராசியில் சந்திப்போம் என்று கூறிஅதுவரை உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்வது

Blog at WordPress.com.

%d bloggers like this: