குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 - 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika Rasi 2018

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 (Guru Peyarchi 2018 – Vrischika Rasi)

விருச்சிக ராசி

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25ந்தேதி சரியான ஆங்கிலம் 11.10.2018 வியாழக்கிழமை அன்று இரவு சுமார் 7.15 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசியில் விசாகம் நான்காம் பாதத்தில் பிரவேஷிக்கிறார்.

மேசத்திற்கும்,விருச்சிகத்திற்கும் ராசியாதிபதியாக வரக்கூடிய கிரகம் செவ்வாய் .இரண்டுக்குமே ராசியாதிபதி ஒருத்தர் தான். ஆனால் மேசத்திற்கும், விருச்சிகத்திற்கும் வித்தியாசம் உள்ளது அது என்ன???

மேசம் கட்டுக்குள் அடங்காத காட்டுத்தீ.
கோபம் வந்தால் அவ்வளவு தான். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்கள். வம்புனு வந்துட்டா கடைசி வரைக்கும் மோதி பார்த்து விடுவார்கள். மண்டையே உடைஞ்சாலும் சரி.ஒரு கை பார்த்து விடுவார்கள். அடித்து விட்டுத்தான் பேசுவார்கள். அவசரப்பட்டு தேவையற்ற விவகாரங்களில் சிக்கி கொள்வார்கள் மேசராசிக்காரர்கள்.செவ்வாய் மேச ராசியில் இருக்கும் போது நெருப்பு, வெடிமருந்து, ஆயுதங்களில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். ஆனால் அடி உதை என்ற அளவுக்கு போகமாட்டார்கள். கண்டபடி திட்டுவார்கள். இவர்களின் ராசியின் சின்னம் தேள்.தேளை போல கொட்டுவார்கள்.விருச்சிகம் நீர் ராசி என்பதால் இவர்கள் பிரச்சினை வரும் போது பின்வாங்கிவிட்டு சமயம் வரும் போது பதுங்கி பின் பாயுவார்கள்.சமயம் கிடைக்கும் போது பழிவாங்கி விடுவார்கள்.

இவர்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் மனவலிமை குறைந்தவர்கள்.பயந்த சுபாவம் உள்ளவர்கள். அதற்கு காரணம் ராசியில் சந்திரன் நீசம் பெறுவதே.இவர்களுடையதோற்றம் நன்றாக இருக்கும். பார்க்க அழகா இருப்பார்கள். இந்த ராசியாதிபதியே ஆறாம் அதிபதி ஆவதால் இவர்கள் அடிக்கடி அடிக்கடி கடன் பிரச்னையில் சிக்கி கொள்வார்கள்.

இவர்களுக்கு அட்டமாதிபதியே லாபாதிபதியாக வருவதால் பலருக்கு மூத்த சகோதர ஸ்தானம் நன்றாக அமைவது இல்லை. இவர்களுக்கு பாக்கியாதிபதியே பாதகாதிபதியாக வருவதால் அப்பாவை விட்டு பிரிந்து தூரதேசத்தில் வேலைபார்க்க இவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
ஜாதகத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்து, சூரியனை காட்டிலும் சனி வலுத்து, சிம்மத்தை அல்லது கடகத்தை சனிபார்க்க தந்தை உதவி பூஜ்யமாக இருக்கும். தந்தையின் ஆதரவுகள் இல்லவே இல்லை.

இவர்களுக்கு குருபகவான்தான் பலமே.
குரு தன,பஞ்சமாதி.சகல யோகங்களையும் தருபவர் அவர்தான் அவருடைய குருப்பெயர்ச்சி இவர்களுக்கு எப்படி இருக்க போகின்றது ???

குருபகவான் ஜென்மத்தில் வரும் போது, ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும் என்று வரும். குரு ராமருக்கு ஜென்மத்தில் வரும் போது தான் மனைவியை பிரிந்தார் என்று சொல்வார்கள். ஆனாலும் குருபகவான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்க கூடிய இடங்கள் பெருகும். வளரும் என்பதால் அவருடைய ஐந்தாம் பார்வையால் தன்னுடைய வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்த்து, பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது.

பூர்வ புண்ணிய பலனாக புண்ணிய நதிகளில் நீராடக்கூடிய வாய்ப்புகளும்,
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல குரு உங்களுக்கு அமைவார்.குலதெய்வ வழிபாடு சிறக்கும். குழந்தைகளை பற்றிய நல்ல செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். ஸேத்ராடனம் செய்வீர்கள். முக்கியமாக பதவி கிடைக்கும். “பதவீ பூர்வ புண்ணியானாம்” பூர்வ புண்ணியம் இருந்தால் பதவி கிடைத்துவிடும். பூர்வ புண்ணியம் இருந்தால் உத்யோகம் கிடைத்து விடும்.இந்த ராசியை சேர்ந்த அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் ,பெரிய பதவிகள் தானாக பூர்வ புண்ணிய பலனால் வீடுதேடிவரும்.

குருபகவான் ராசியிலிருந்து ஏழாம் வீட்டை நேர்பார்வையாக பார்ப்பதால் கல்யாணம் ஆகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் நடந்தே விடும். கணவன் மனைவி உறவுகள் திருப்தி கரமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.தாம்பத்யம் சிறக்கும். இதுவரை ஏழரைச்சனியால் பிரிந்து இருந்த தம்பதிகள் மௌனராகம் படத்தில வர்ற மோகன், ரேவதி போல ஒன்று சேருவார்கள். அதாவது கணவனுக்கு மனைவியோட அன்பையும், பாசத்தையும் ,மனைவிக்கு கணவனுடைய அருமைகளையும் பெருமைகளையும் புரிய வைப்பார் குருபகவான்.

ஏழரைச்சனியில் குடும்பம் பிரிந்து தான் ஒன்று சேரும். சனி இவர்களை கணவன்,மனைவியை பிரித்தார். பிரித்தார்.குருபகவான் இவர்களை சேர்க்க போகின்றார்.சுய தொழிலில் கூட்டுதொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். திருமண வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

குருபகவான் ஒன்பதாம் இடத்தை தனது ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் தந்தை, மகன் உறவு நன்றாக இருக்கும்.
பூர்வ புண்ணியாதிபதி,புண்ணிய காரகன் பாக்கியத்தை பார்ப்பதால் அநேக பாக்கியங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டாகும்.
கோவில் கும்பாபிஷேகங்களை உங்கள் தலைமையில் நடத்துவீர்கள்.

நீங்கள் விடியலை நோக்கி போய் கொண்டு இருக்கிறீர்கள். கடந்த ஆறு வருட காலங்களாக கடுமையான ஏழரைச்சனியில் படாதபாடு பட்டுவிட்டீர்கள்.முதல் இரண்டரை வருடங்களாக கடுமையான விரையச்சனி.அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடுமையான ஜென்ம சனி.
இந்த ஜென்ம சனியில் மனச்சஞ்சலம் அப்படினு சொல்லிட்டான் .பைத்தியம் பிடிக்காத குறை ஒன்று தான்.சொந்த தொழில் செய்தவர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் கொடுத்தவர்களால் அவமானப்பட்டு இருப்பீர்கள். கடன் காரங்களுக்கு பயந்து பதில் சொல்ல முடியாமல் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு தலைமறைவாக ஓடி போய்டலாமா???என்று கூட நீங்கள் யோசித்து இருப்பீர்கள்.
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. பாதச்சனியாக இருந்தாலும் இருட்டு உங்களை விட்டு வெளியேறி விட்டது.
இருள்னா துன்பம், தொல்லை, கஷ்டம், அரிட்டம் என்று அர்த்தம்.

கடந்த ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து சரியான ஆங்கிலம் அக்டோபர் மாதம் 26ந்தேதியிலிருந்து உங்களை பிடித்திருந்த இருள் விலகிவிட்டது.வெளிச்சம் வரப்போகுது.குரு ஒளிக்கிரகம். சனி இருள் கிரகம். இருள் ஆல்ரெடி விலகிருச்சு.குருபகவான் என்னும் பொன்னொலி ராசிக்கு வரப்போகுது.
குரு ராசிக்கு பஞ்சமாதி வேறு.குரு புண்ணிய காரகன் வேறு.

போன ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன்களை நீங்கள் அனுபவிக்க இருக்கிறீர்கள். நல்ல காலம் பிறக்க போகுது.உங்கள் கடன்எல்லாம் அடைய போகுது.மனச்சஞ்சலம் நீங்க போகுது.பிரிந்த தம்பதிகள் சேரப்போறீங்க.கோர்ட் கேசு ,வம்பு வழக்குகள் எல்லாம் தீரப்போகுது.
கல்யாணம் ஆகாத இருபாலர்களுக்கும் கல்யாணம் நடக்க போகுது.ஏழரைச்சனியில் பெரிய பள்ளம் விழுந்திருக்கும். அதெல்லாம் இனிசரிபண்ண முடியும்.

மொத்தத்தில் விடியலை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக்கொண்டு உள்ளீர்கள். ஆர்ப்பரிக்கும் கடலில் புயல் மழையில் சிக்கி,திக்கு தெரியாமல் வழிதெரியாமல், விழிபிதுங்கி,என்ன செய்வது என்றேபுரியாமல் தத்தளித்து கொண்டிருந்த உங்களுக்கு குருப்பெயர்ச்சி, கலங்கரை விளக்கம் போல வழிகாட்ட காத்திருக்கிறது.இன்னும் சில நாட்களில் வரும் குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை என்று கூறி

உங்களிடமிருந்து விடைபெற்று கொண்டு தனுசு ராசியில் மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

Blog at WordPress.com.

%d bloggers like this: