கடக ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

2,691

கடக ராசி அன்பர்களே
( புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

வாக்கியப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

திருக்கணிதப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

கடக ராசி (40%): ( மோசமான பலன்கள்)

கடந்த ஒரு வருடமாக ஐந்தாம் இடத்தில் பலவிதமான நன்மைகளை அனுபவித்து இருப்பீர்கள், சுப காரியங்கள் திருமணம் குழந்தை பாக்கியம் மகிழ்ச்சி பூர்வீக பாக்கியங்கள் அடைந்திருப்பீர்கள்

இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி குருவினால் பலவிதமான சங்கடங்களை சந்திக்க உள்ளீர்கள் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கமால் போகும் எதிரி தொந்தரவு கடன் தொந்தரவுகள் வைத்தியச் செலவுகள் பொருட்கள் திருடு போக வாய்ப்புண்டு ஏமாற்றம் இழப்புகள் சந்திக்கும் காலம்

குருபகவான் பெயர்ச்சியாகி

ஐந்தாம் பார்வையாக உங்கள் கர்ம ஸ்தானம் எனப்படும் 10-ஆம் இடத்தையும்

ஏழாம் பார்வையாக உங்கள் அயன சயன சுகம், தெய்வீக ஸ்தானம் எனப்படும் 12-ஆம் இடத்தையும்

9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனம் வாக்கு குடும்பம் ஆரம்பக் கல்வி ஸ்தானம் எனப்படும் 2-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்

நிதிநிலை :

தேவைக்கு உண்டான பண வரவுகள் மட்டுமே உண்டாகும் எனவே திட்டமிட்டு செயல்பட சிறப்பு பணப்புழக்கம் குறையும் தேவையற்ற முதலீடுகள் செய்வது தவிர்க்க வேண்டும் திட்டங்கள் இல்லாமல் செய்யப்படும் முதலீடுகள் முடங்கி விடும் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது தேவையற்ற சங்கடங்கள் உண்டாகும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலகட்டம் ஆகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிக மிக கவனம் தேவை. பணம் தொலைந்து போக வாய்ப்புகள் உண்டு அல்லது களவு போகும்

உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:

புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இருக்கும் வேளையில் தொடர்ந்து இருப்பது நல்லது. வியாபாரம் தொழில் நடத்துபவர்களுக்கு தேவையான அளவுக்கு வியாபாரங்கள் நடக்கும் தொழில் வியாபாரத்தை விரிவு படுத்த நன்கு ஆராய்ந்து தெளிவு படுத்தி கொண்டு செய்வது சிறப்பு இல்லையெனில் பணம் முதலீடு செய்து லாபம் இல்லாமால் முடங்கி போய் விடும். நிறுவனத்தில் கவுரவ பதவிகள் கிடைக்கும்

திருமணம், குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :

திருமணம் நடைபெறும் காலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும் பிரிந்திருந்த கணவன்-மனைவி சேரும் காலகட்டம்

வீடு வண்டி வாகனம் :

வீடு மனை நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வதை பலமுறை ஆராய்ந்து செய்வது சிறப்பு தவறினால் உபயோகமற்ற அல்லது பிரச்சனை உள்ள இடத்தை வாங்க நேரிடும் அதில் அடுத்து ஒரு வருட காலத்தில் முதலீடு முடங்கிப் போகும்

மாணவ மாணவியர்கள்:

ஆரம்பத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த வருடம் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்புண்டு பட்டப்படிப்பு மேற்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த வருட காலம் உகந்த காலமல்ல எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் அல்லது படிப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு

விவசாயிகளுக்கு:

தேவையான அளவுக்கு மட்டுமே வருமானம் ஈட்டக்கூடிய காலம் எனவே திட்டமிட்டு உரிய பயிர்களை தேர்ந்தெடுத்து அதில் லாபம் பெறுவது நல்லது புதிய பயிர்களை போட்டு பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் புதிய பயிர்கள் விதைத்து நஷ்டம் அடைய வேண்டாம்

பெண்களுக்கு :

பணிபுரியும் பெண்களுக்கு இருக்கும் வேலையில் இருந்த தொல்லைகள் நீங்கும் சிறிய பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் கௌரவப் பதவிகள் தேடி வரும் இருக்கும் பணியை விட்டு இடம் மாற வேண்டாம் இந்த வருடம் போதும் அமைதியாக கடத்துவது சிறப்பு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும் காலகட்டம் இது

மற்ற பலன்கள்:

இக்காலகட்டத்தில் தரையில் கிடக்கும் தங்கத்தை தன் கைப்பற்றி விட்டால் அதற்குத் தடையாக மாறி விடும் அந்த அளவுக்கு யோகம் எதிர்மறையாகச் செயல்படும் காலம்

தொட்டதெல்லாம் துலங்காத காலம்

எதிரி தொல்லைகள் அதிகமாக ஏற்படும்

கடன் பிரச்சனைகள் உண்டாகும்

உடல்நலப் பிரச்சினைகளும் வைத்தியச் செலவுகள் ஏற்படும்

பணம் களவு அல்லது திருடு போகும்

ஏமாற்றங்களும் இழப்புகளும் அதிகம் சந்திக்கும் காலகட்டம்

எனவே இந்த வருடம் முழுவதும் திட்டமிட்டு மிக கவனத்துடன் கடக்க வேண்டிய காலகட்டம்

பரிகாரம்:

தினந்தோறும் நவகிரகத்தில் உள்ள குருபகவான் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்ய சிறப்பு

அடிக்கடி யானைக்கு கரும்பு வாங்கித்தர சிறப்பு

திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு

முக்கிய குறிப்பு:

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More