Guru Peyarchi 2019 to 2020 Khumbha Rasi prediction - கும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 by ஜோதிடரத்னா சந்திரசேகரன் மதுரை ஸ்ரீ மஹா ஆனந்தம் ஜோதிட நிலையம்

கும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020

கும்ப ராசி அன்பர்களே
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020.

வாக்கியப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

திருக்கணிதப்படி

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

கும்ப ராசி (95%): (லாப குரு)

கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் இடத்தில் இருந்து பதவி இழப்பு பதவி பரி போயிருக்கும் கௌரவ இழப்புக்கள் தொழில் போட்டி பொறாமைகள் தேவையற்ற இடமாற்றம் பதவி இறக்கம் தொழில் வழியில் அலைச்சல் சங்கடங்கள் ஆகிய பல விதமான சங்கடங்களை கொடுத்து வந்தார்.

இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் எனப்படும் 11 ஆம் இடத்தில் இடத்தில் லாப குருவாக வருகிறார் இது யோகம் தரும் இடமாகும் எல்லா வகையிலும் நன்மைகள் நடைபெறும் காலம் நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் நிறைவேறும் கடந்த ஒரு வருடமாக அனுபவித்த தொந்தரவுகள் முழுதும் மாறும் சுப காரியங்கள் நடக்கும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கும் காலம்.

குருபகவான் பெயர்ச்சியாகி

🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் முயற்சி தைரியம் வீரியம் இளைய சகோதரம் ஸ்தானம் எனப்படும் 3-ஆம் இடத்தையும்.

🌸ஏழாம் பார்வையாக உங்கள் பூர்வபுண்ணியம் பஞ்சம ஸ்தானம் ஸ்தானம் ஸ்தானம் எனப்படும் 5-ஆம் இடத்தையும்.

🌸9-ஆம் பார்வையாக உங்கள் களத்திரம் கூட்டு ஸ்தானம் எனப்படும் 7-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்.

நிதிநிலை :

நிதிநிலை கிடுகிடுவென உயரும் கையில் பணம் இருப்பும் வங்கி இருப்பும் கூடும் காலம் நீண்டகாலமாக வராமலிருந்த கடன் தொகைகள் பாக்கித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலம் நிதிநிலையில் தன்னிறைவு அடையும் காலம் இக்காலகட்டத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும் என்பதால் எதிர்காலத்துக்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் சேமித்துவைக்க சிறப்பான காலமாகும்.

உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வருடம் விரும்பிய இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் கிடைக்கும் காலம் புதிய வேலையில் தற்போது வாங்கும் சம்பளத்தை காட்டிலும் 100% சதவீதம் கூடுதலாக சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் அமையும் மிக மிக சிறப்பான காலகட்டம் பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு எல்லா விதமான உதவிகளும் மற்றும் பிரச்சனைகளும் தீரும் காலகட்டம்.

வியாபாரம் தொழில் செய்பவர்கள் அதிகமான லாபம் சம்பாதிக்கும் காலம் இருக்கு சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும் புதிய தொழிலில் கொடிகட்டி பறக்கும் காலம் புதிய வியாபாரம் தொடங்குதல் விரிவாக்கம் செய்யவும் உகந்த காலகட்டம் எல்லா வகையான சாதகமான காலகட்டம் தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் கைக்கு வந்து சேரும் தொழிலில் புதிய கூட்டாளிகள் சேர வாய்ப்புகள் உண்டாகும்.

திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :

குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் விரைவில் நடந்தேறும் காலம் நீண்டநாள் திருமணத்துக்கு தாமதம் ஏற்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக இந்த வருடத்தில் திருமணம் நடைபெறும் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் உடன் மறுமணம் நடந்தேறும் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலம் புதிய காதலும் வெற்றி பெறும் காலம்.

குரு பகவான் ஏழாம் பார்வையாக ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியங்கள் ஏற்படும் நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் பாக்கியம் வந்து சேரும் நீண்டநாள் இரண்டாவது குழந்தைபேறு தள்ளிப் போட்டவர்கள் இக்காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வீடு வண்டி வாகனம் :

லாப வரவுகள் அதிகமாக இருப்பதால் இந்தாண்டு புதிய வீடு வண்டி வாகனம் வசதி வாய்ப்புகள் சேரும் காலம்.

மாணவ மாணவியர்கள்:

மாணவ மாணவியருக்கு படிப்பில் கவனம் செல்லும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம் விரும்பிய பட்டப்படிப்புகள் மேற்படிப்புகள் ஆராய்ச்சிகள் அமையும் காலம் மேற்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் உதவித்தொகைகள் கிடைக்கும் காலகட்டம்.

விவசாயிகளுக்கு:

விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும் காலம் அமோக விளைச்சல் கிடைக்கும் புதிய வகைப் பயிர்களில் பணப் பயிர்களில் அதிகமான லாபங்கள் கிடைக்கும் கிழங்கு சார்ந்த விவசாயம் நன்கு பெருகும் காலம் புதிய விவசாய நிலங்களை வாங்கும் காலம் கடந்தாண்டில் வாங்கிய கடன்கள் அனைத்தும் இந்த ஆண்டில் அடைக்கும் காலம்.

பெண்களுக்கு :

நீண்ட காலமாக குழந்தை பேறு எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பேரு அமையும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும் காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும் விவாகரத்து வழக்கில் தீர்ப்புகள் சாதகமாக அமையும் காலகட்டம் பணி செய்யும் பெண்களுக்கு சுமூகமாக இருக்கும் காலகட்டம்.

மற்ற பலன்கள்:

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் காலம்.

உயிர் அணுக்கள் குறைவாக இருந்த காரணத்தால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போய்க்கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் உயிரணுக்கள் பெருகும் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இளைய சகோதரர்கள் வழியில் நன்மைகள் வந்து சேரும்.

புதிய கூட்டாளிகள் வந்து சேரும் காலகட்டம்.

பொது ஜனங்களை சந்திக்கும் நபர்களுக்கு அல்லது சேவை தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒத்துழைப்புகள் அதிகமாக கிடைக்கும்.

பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும் தாத்தா வழியில் இருந்த சொத்துப் பிரச்சினைகள் தீரும் பூர்விக குலதெய்வ கோயில் கட்டும் கௌரவ பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள்.

விட்டுப்போன பூர்வீக குல தெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் காலம்.

கண்டுபிடிக்க முடியாத இருந்த குலதெய்வத்தை கண்டுபிடிக்கும் காலகட்டம்.

புனித பயணங்கள் புண்ணிய ஸ்தல பயணங்களும் அமையும்.

பரிகாரம்:

🍥 குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு.

🍥 திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு.

🍥 இனிப்புகளை அடிக்கடி தானம் செய்ய சிறப்பு.

முக்கிய குறிப்பு:

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Blog at WordPress.com.

%d bloggers like this: