சிம்ம ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
சிம்மராசி அன்பர்களே
( மகம்,பூரம், உத்திரம் 1)
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
சிம்ம ராசி (60%): (சுப பலன்கள் உண்டு)
கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குருபகவான் இருந்ததால் பூமி வீடு மனை வண்டி வாகனம் சுகம் கல்வி இந்த வகையில் பல விதமான சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள்
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி குருவினால் பலவிதமான நன்மைகளை அடைய உள்ளீர்கள்
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ஆம் இடத்தையும்
🌸ஏழாம் பார்வையாக உங்கள் லாபம் ஆசை அபிலாசைகள் ஸ்தானம் எனப்படும் 11-ஆம் இடத்தையும்
🌸9-ஆம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க இருக்கிறார்
நிதிநிலை :
உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடம் எனப்படும் லாபம் ஆசை அபிலாசைகள் இடத்தை பார்ப்பதால் கிடுகிடுவென நிதி நிலைகள் உயரும் அதிகமான லாபங்கள் கிடைக்கும் முதலீடுகள் பெருகும் கடன்கள் அடையும் கையில் சரளமான பண பழக்கங்கள் உண்டாகும்
தொழில் வியாபாரம் பார்ப்பவர்களுக்கு பாக்கி கடன்கள் முழுவதும் வசூலாகும் வெளியில் நின்ற தொகைகள் அனைத்தும் கைக்கு வந்து சேரும் இருப்பு சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் புதிய பொருள்கள் உற்பத்தி செய்யவும் அதை விற்கவும் அதுகுறித்த வியாபாரத்தை பெருக்கும் உரிய காலகட்டம்
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும் காலம் மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும் உங்கள் கீழ் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும் புதிய பிராஜக்ட் அல்லது பணிப்பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும் அதை வெற்றிகரமாக முடிக்கும் காலகட்டம் அதனால் உங்களுக்கு பெயர் புகழ் ஓங்கும்
புதிதாக வேலை தேடும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லபடியாக வியாபாரம் நடக்கும் புதிய பொருட்கள் விற்பனை செய்யும் காலகட்டம் தொழில் விருத்தி விரிவாக்கம் செய்ய உகந்த காலகட்டம் புதிய ஒப்பந்தங்கள் மூலம் விரிவாக்கம் செய்யலாம் வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உண்டாகும் காலகட்டம் புது வகையான தொழிலும் விரிவாக்கம் செய்ய உகந்த காலகட்டம்
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
நீண்ட காலம் திருமணம் தடைபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விரும்பியபடி திருமணம் நடந்தேறும் நல்ல வரன் அமையும் சிறப்பாக திருமணம் நடைபெறும் காலம் திருமணம் நடந்த அந்த வருடமே குழந்தை பாக்கியம் ஏற்படும் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து பொருட்களும் சேர்க்கை உண்டாகும் புதிய பொன் நகை ஆடை ஆபரணங்கள் வாங்கும் காலம் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
வீடு வண்டி வாகனம் :
புதிய மனை வீடு வண்டி வாகனங்கள் சேர்க்கை உண்டாகும்.
புதிய வீட்டிற்கு அல்லது சொந்த வீட்டிற்கு குடி பெயரும் காலம் நீண்ட நாள் கனவான நான்கு சக்கர வண்டிகள் வாங்கும் காலகட்டம். பழைய வண்டிகள் அனைத்தும் மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் காலம்
மாணவ மாணவியர்கள்:
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெரும் காலகட்டம் அனைத்து வகையான படிப்பு துறையில் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் கால கட்டம் விரும்பிய கல்வி அமையும் வெளியூர் வெளிநாடு படிப்புகள் கல்வி உதவித் தொகையுடன் கிடைக்கும் படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் கூட இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் ஆராய்ச்சி கல்வி படிப்பவர்கள் நல்ல பலன்களை முடிவுகளை எதிர்பார்க்கலாம்
விவசாயிகளுக்கு:
கிழங்கு வகை விவசாயிகள் இந்த வருட நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம் எல்லா வகையான விவசாயத்தில் நஷ்டம் இல்லாமல் சம்பாதிக்கக்கூடிய காலகட்டம் நல்ல வருமானம் கிடைக்கும் அதன் மூலம் கடந்த கால கடன்களை அடைக்கும் காலகட்டம் பணப்புழக்கம் அதிகரிக்கும் நல்ல மகசூல் கிடைக்கும் உடனுக்குடன் தேவையான மற்றும் இடுபொருட்கள் மற்றும் அறுவடை நடைபெற்று மிகுந்த லாபம் கிடைக்கும் காலகட்டம் புதிய வகையான பயிர்களை பயிரிட்டு அளவுக்கு மீறிய வருமானம் சம்பாதிக்கும் காலகட்டம்
பெண்களுக்கு :
பெண்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டம் உடலில் பல பிரச்சனைகள் நோய்கள் குணமாகும் காலகட்டம். மருத்துவத்தின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் நீண்டகாலம் கருவுறாமல் இருந்த பெண்கள் கருவுறும் காலம் குழந்தை பாக்கியம் உண்டாகும் மாதவிடாய் சம்பந்தமான கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் நிவர்த்தி கிடைக்கும் பணி செய்யும் இடத்தில் இருந்த தொந்தரவுகள் மறைந்து போகும் பணி செய்யும் பெண்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு விரும்பிய இடமாற்றம் அனைத்தும் அமையும்
மற்ற பலன்கள்:
நீண்ட நாள் குழந்தை பாக்கியம் பெறாதவர்கள பாக்கியம் கிடைக்கும் காலம்
குரு உபதேசம் , உபாசனை கிடைக்கும்
புதிய திட்டங்கள் வெற்றியை தரும்
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்
தாய் மாமன், பாட்டனார் வழியில் நன்மைகள் வந்து சேரும்
பூர்வீகத்தில் வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் பூர்வ புண்ணிய பாக்கியம் ஏற்படும்
பரிகாரம்:
🍥 குருமார்கள் அல்லது சித்தர்களின் வழிபாடு வியாழன் தோறும் செய்து வர சிறப்பு
🍥 அந்தண குழந்தைகளுக்கு தேவையான உதவிகள்
🍥 திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Comments are closed.