தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
தனுசு ராசி அன்பர்களே
( மூலம் பூராடம் உத்திராடம் 1) குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020.
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தனுசு ராசி (40%): (ஜென்மகுரு)
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் விரைய குருவாக இருந்து.
” வன்மையுற்றிட ராவணன் முடி பனிரெண்டில் வீழ்ந்ததும்”
என்ற பாடலின் படி பதவி இழப்பு தொழில் துறையில் நஷ்டம் எதிர்பாராத விபத்துக்கள் தண்டச் செலவுகள் சுபச்செலவுகள் (வீடு மனை கட்சிகள் திருமணம் பொன் பொருள் வாங்குதல்) நடந்திருக்கும்.
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகி ஜென்ம குருவாக வருகிறார்.
“ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்”
இனி அடுத்த ஒரு வருடம் வனவாச காலம் போல உங்களுக்கு பாதகமான காலமாக அமைந்திருக்கும் தந்தையுடன் மனகசப்பு முதலீடுகளில் பாதிப்பு வேலையில் மந்தப் போக்கு சகோதரர்கள் வழியில் தொந்தரவுகள் திருமணத்தடை கணவன் மனைவி புரிதல் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை போன்ற கசப்பான அனுபவங்களை சந்திக்க இருக்கிறீர்கள்.
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் குழந்தை பாக்கியம் பூர்வ புண்ணியம் பஞ்சம ஸ்தானம் எனப்படும் 5-ஆம் இடத்தையும்.
🌸ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ஆம் இடத்தையும்.
🌸9-ஆம் பார்வையாக உங்கள் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்.
நிதிநிலை :
உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் குரு பார்வை இருப்பதால் பூர்வீகத்தில் இருந்து வரவேண்டிய சொத்துக்கள் தொகைகள் பங்குகள் வந்து சேரும் பணப்புழக்கம் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கும் நிதி நிலைமைகளை சரிவர கவனித்து வர மற்றும் தேவையான செலவுகளை திட்டமிட்டு செய்ய சிறப்பு தேவையற்ற முதலீடுகளில் பணத்தை முடக்கி விட வேண்டாம்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் முடிந்தவரை கடன் வியாபாரத்தை தவிர்ப்பது சிறப்பு தேவையற்ற மூலப் பொருட்களில் ஆசைப்பட்டு பணத்தை முடக்க வேண்டாம். சரக்குகளை அதிக அளவுக்கு இருப்பு வைப்பது நிதி நிலையை முடக்கிவிடும் எனவே தேவையான அளவை மட்டும் சரக்கிருப்பு வைத்து ரொக்க வியாபாரம் செய்ய சிறப்பு.
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
உத்தியோகஸ்தர்கள் இருக்கும் இடத்தில் பணி செய்வதே சிறப்பு இந்த வருடம் முழுவதும் தேவையற்ற தொந்தரவுகள் பணி செய்யும் இடத்தில் இருந்து கொண்டே இருக்கும். புதிய வேலைக்கு மாறுபவர்கள் நன்றாக ஆராய்ந்து விசாரித்து மற்றும் செய்வது மட்டும்தான் தன்மையை தரும். அதிக நேரம் உழைக்க வேண்டிய காலகட்டம் ஆகும் நேரம் தவறி உழைக்கும் காலம் தேவையற்ற தொந்தரவுகள் பணியில் உண்டாகும் உயரதிகாரிகளின் அல்லது முதலாளிகளின் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும் அமைதியாக இருந்து கொண்டு இந்த ஒருவரிடம் கடப்பது சிறப்பு.
வியாபாரம் தொழில் செய்பவர்கள் தொழிலில் இருக்கும் தொழிலை வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்ள சிறப்பு அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு தேவையற்ற முதலீடுகள் செய்ய வேண்டாம் அதிக இருப்புச் சரக்கும் வைக்க வேண்டாம் தொழில் வியாபாரத்தில் பலவித சங்கடங்களை இந்த வருடம் முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கும் எனவே கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் புதிய வியாபார விஸ்தரிப்பு புதிய தொழில் முதலீடு செய்வது அல்லது தொடங்குவது தேவையற்ற புதிய பொருட்களின் மீதும் முடக்குவது தவிர்க்க வேண்டிய காலகட்டம் புதிய பங்குதாரர்களை சேர்ப்பதையும் வேண்டிய காலகட்டம் அடுத்து ஒரு ஆண்டுகாலம் இருக்கும் தொழிலில் கவனம் கொண்டு அதை சரிவர செய்வதே உத்தமம் வியாபாரம் தொழில் சுமாராக தான் இந்த வருடம் இருக்கும்.
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
நீண்டநாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணங்கள் அனைத்தும் நடந்தேறும் காலம். கல்யாண வயது நிரம்பிய மணமகன் மணமகள் உடனடியாக திருமணம் நடக்கும் காலகட்டம் இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீண்ட நாள் குழந்தை பேரு இல்லாதவர்கள் மருத்துவத்தின் மூலமும் குழந்தை பாக்யம் கிடைக்கும் ஆண் வாரிசு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வருடம் சந்ததி விருத்தி கிடைக்கும் முதல் குழந்தைக்கு பிறகு நீண்ட நாட்களாக அடுத்த கொண்டிருக்கும் பாக்கியம் அமையாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பாக்கியம் உண்டாகும் நீண்ட நாள் காதல் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு கல்யாணம் நடந்தேறும் காலம் புதிய காதல் ஏற்படும் காலகட்டம் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலம் கட்டம்.
வீடு வண்டி வாகனம் :
குரு 5, 9-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் பார்ப்பதால் பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும் தந்தையார் வழி சொத்துக்கள் பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய பொன் நகை ஆடை ஆபரணங்கள் புதிய புதிய பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் வாங்கும் காலகட்டம் அனைத்து பாக்கியங்களும் வந்துசேரும் சொகுசு சாதனங்கள் வந்துசேரும் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
மாணவ மாணவியர்கள்:
மாணவ மாணவியர்கள் கவனத்துடன் படிக்க இந்த ஆண்டு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறும் காலம் பாலிடெக்னிக் ஐடிஐ மற்றும் தொழில் கல்வி படிப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வரப்பிரசாதமாகும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அடுத்த படிப்புக்கு விரும்பிய படிப்பாக அமையும் காலகட்டம் நீண்ட நாட்கள் மனப்பாடம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்த மாணவர்கள் இந்த வருடத்தில் எளிதாக மனப்பாடம் செய்து தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் தினமும் அதி காலையில் எழுந்து சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவரை வழிபட்டு கல்விச் சாலைகளுக்கு செல்ல படிப்பில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
விவசாயிகளுக்கு இந்த வருடத்தில் நல்ல விளைச்சல் அமோக விளைச்சல் கிடைக்கும் காலகட்டம் பணப்பயிர் அல்லது கிழங்கு வகை விவசாயம் செய்வதற்கு அமோக விளைச்சலும் அதனால் அதிகமான லாபமும் கிடைக்கும் இடுபொருட்கள் தேவையான நேரத்தில் கிடைக்கும் பூர்வத்தில் இருந்த நஞ்சை புஞ்சை பிரச்சனைகள் தீர்ந்து அதில் பயிர் செய்து லாபம் கிடைக்கும் காலகட்டம் உங்களுக்கு சேரவேண்டிய பூர்விக நஞ்சை புஞ்சை நில பிரச்சனைகள் தீர்ந்து கைக்கு வந்து சேரும் அதில் அமோக விளைச்சலும் கிடைக்கும்.
பெண்களுக்கு :
உங்களுக்கு இருந்து வந்த கர்ப்பப்பை பிரச்சனைகள் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும் காலகட்டம் நீண்டநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும் பணி செய்யும் பெண்களுக்கு உயரதிகாரிகளின் தொந்தரவுகள் உண்டாகும் வேலைப்பளு கூடும் விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும் தேவையற்ற சிக்கல்கள் வந்து சேரும் கவனக்குறைவால் உயரதிகாரிகளின் தொந்தரவுகள் அல்லது தண்டனைகள் கிடைக்கும்.
மற்ற பலன்கள்:
வேலைகளில் கெடுபிடி இருக்கும் அடுத்த வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விட வேண்டாம்.
பணி இழப்புக்கு வாய்ப்புகள் உண்டாகும்.
தேவையற்ற இடமாற்றம் ஊர் மாற்றம் பதவி மாற்றம் சிலருக்கு பதவி குறைவு சம்பள குறைவு ஏற்படும் காலகட்டம்.
உடல் நலனில் மிகுந்த கவனம் தேவை உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும்.
கணவன் மனைவி உறவில் விரிசல்கள் வர வாய்ப்பு உண்டு.
கொடுக்கல்-வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
தந்தையுடன் மனக்கசப்புகள் ஏற்படும் காலகட்டம்.
புதிய முதலீடுகள் செய்வதில் மிகுந்த மிகுந்த கவனம் தேவை.
சகோதரர் வழியில் வருத்தங்கள் உண்டாகும் காலகட்டம்.
வேலையில் தொழிலில் வியாபாரத்தில் ஒருவித மந்த போக்கு இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்:
🍥 நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் நெய்விளக்கேற்றி வியாழன்தோறும் வழிபாடு செய்ய சிறப்பு.
🍥 திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு.
🍥 குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்பட்ட பொருளை வாங்கித் தர வேண்டும்.
🍥 யானைக்கு கரும்பு வாங்கித்தர சிறப்பு.
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Comments are closed.