துலா ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
துலா ராசி அன்பர்களே
( சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
துலா ராசி (40%): (பகை நோய் நொடி)
கடந்த ஒரு வருடமாக இரண்டாமிடத்தில் குருபகவான் இருந்து தனம் வாக்கு வித்தை பணப்புழக்கம் செல்வாக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் புதிய முயற்சிகள் முன்னேற்றம் வெற்றி அனைத்தையும் சந்தித்திருப்பீர்கள் மற்றும் பலவித சுப பலன்களை அனுபவித்து இருப்பீர்கள்
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கு பெயர்ச்சியாகி
“தீதிலா தொருமூன்றாமிடத்தில் மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்” – ஜோதிடப் பாடல்
“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு ரோகமுண்டு” – புலிப்பாணி பாடல்
என்பதற்கிணங்க நம்மை சுற்றியுள்ள உற்றார், உறவுகள், நட்புகள், பதவி, பணம் முதலிய படைகள் அழிந்து, பொருள் விரயம் ஏற்பட்டு இப்படி
பல விதமான சங்கடங்களை தரவிருக்கிரார்
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் சப்தம, களத்திர, கூட்டாளி ஸ்தானம் எனப்படும் 7-ஆம் இடத்தையும்
🌸ஏழாம் பார்வையாக உங்கள் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ஆம் இடத்தையும்
🌸9-ஆம் பார்வையாக உங்கள் லாபம் ஆசை அபிலாசை ஸ்தானம் எனப்படும் 11-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்
நிதிநிலை :
நிதி நிலைகள் கிடுகிடுவென உயரும் உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு நீண்டகாலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விரும்பிய இடமாற்றம் ஆகியவை அமையும் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் விரும்பிய புதிய பொருட்கள் அனைத்தும் வாங்கும் காலம் முதலீடுகளில் லாபம் உண்டாகும் புதிய முதலீடுகள் செய்யும் காலம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகமாக கிடைக்கும் காலம் இருப்பு சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும் எதிர்பாராத லாபங்கள் வந்துசேரும் காலம் ஏற்றுமதி மூலம் லாபங்கள் அடையும் காலம் கடந்தாண்டு விஸ்தரிப்பு செய்த தொழிலில் இந்த ஆண்டு அதிகமான லாபம் கிட்டும் புதிய முதலீடு க்கு தேவையான நிதிகள் உரிய காலத்தில் வந்து சேரும்
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
குரு பகவான் உங்கள் பதினோராம் இடத்தை பார்வை இடுவதால் புதிய மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கும் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கௌரவப் பதவிகள் கிடைக்கும் காலகட்டமும் விரும்பிய உயரிய பணி மாற்றமும் இடமாற்றம் உண்டாகும்
வியாபாரம் தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல வருமானம் வசதிகள் கிடைக்கும் வியாபாரம் தொழில் பெருகும் உற்பத்தி அதிகரிக்கும் வியாபாரத்தை தொழிலை விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் எனவே திட்டமிட்டு விரிவுபடுத்திக் கொள்ளலாம் புதுவகையான தொழிலில் ஈடுபட உகந்த காலகட்டம்
புதிய பொருட்கள் விற்பனை செய்யும் காலகட்டம் புதிய ஒப்பந்தங்கள் மூலம் விரிவாக்கம் செய்யலாம் வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உண்டாகும் காலகட்டம் ஏற்றுமதி தொடர்பான வியாபாரம் சூடுபிடிக்கும் காலம்
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
நீண்ட நாட்கள் திருமணத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் நடந்தேறும் காலம் நல்ல விருப்பத்திற்கேற்ற வரன் அமையும் மணமகன்/ மணமகள் விருப்பத்திற்கேற்ற திருமணங்கள் நடந்தேறும் காதல் திருமணங்கள் நடந்தேறும் காலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் சுபகாரியங்கள் நடக்கும் திருமணம் நடந்த ஆண்டிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும் உங்கள் மகன் அல்லது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும் காலம் சுபச்செலவுகள் ஏற்படும்
வீடு வண்டி வாகனம் :
புதிய வீடு வண்டி வாகனங்கள் சுப முதலீடுகளில் செய்ய சிறந்த காலம் பழைய வீடு மற்றும் வண்டி புதுப்பிக்கும் காலம். உங்கள் ஆசைக்கு ஏற்றபடி பெரிய வாகனங்கள் வாங்கும் காலம் அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும் புனித ஸ்தல பயணங்களும் உண்டாகும்
மாணவ மாணவியர்கள்:
மாணவ மாணவியர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் காலம் எளிதாக தேர்வு பெரும் காலம் விரும்பிய படிப்புகளை மேற்கொள்ளும் காலம் உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி அனைத்திலும் சிறப்பாக வெற்றி பெறும் காலம் நீண்ட நாள் எழுதி வெற்றி பெறாமல் இருந்த தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் அரசு பொது தேர்வு களை சந்திக்க சிறந்த காலகட்டம் அதில் வெற்றி பெரும் காலகட்டமாக அமையும்
விவசாயிகளுக்கு:
விவசாயிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வருமானங்களும் லாபங்கள் கிடைக்கும் உரிய நேரத்தில் தேவையான இடுபொருட்கள் கிடைக்கும் அளவுக்கதிகமான மகசூலும் உண்டாகும் புதிய பணப் பயிர்களில் லாபங்கள் அதிகரிக்கும் இருப்பு இல்லாமலும் சோரம் போகாமல் அனைத்து பொருட்களும் விற்றுத் தீரும் புதிய நிலபுலன்களை வாங்கும் காலகட்டம்
பெண்களுக்கு :
உங்களுக்கு இருந்த அனைத்து உடல்நல பிரச்சனைகளும் தீரும் நீண்ட நாள் கருவுராமல் இருந்த பெண்களும் குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம் வேலை பார்க்கும் பெண்களுக்கு விரும்பிய இடத்தில் பதவி உயர்வுடன் வேலை மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் காலகட்டம் ஒரே வருடத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும் முதிர் கன்னி களுக்கும் திருமணம் நடந்தேறும் காலகட்டம்
மற்ற பலன்கள்:
உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை
உற்றார் உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்
நம்மை சுற்றியுள்ள நண்பர்களிடம் சண்டை சச்சரவுகள் உண்டாகும்
வகிக்கும் பகுதிகளில் பதவிகளில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
பொருள் நிலையங்கள் அதிகமாக இருக்கும் சுபச்செலவு ஆக மாற்றிக்கொள்ள சிறப்பு
பரிகாரம்:
🍥 குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்
🍥 நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் வியாழன்தோறும் வழிபாடு
🍥 அடிக்கடி திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
🍥 குருமார்களுக்கு ஒரு முறை வேஷ்டி துண்டு பூ பழவகைகள் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள சிறப்பு
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Comments are closed.