மீன ராசி அன்பர்களே
( பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020.
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
மீன ராசி (50%): (சுமாரான பலன்கள்)
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானம் ஸ்தானம் எனப்படும் 9 ஆம் இடத்தில் இருந்து பலவிதமான பாக்கியங்களை அள்ளி கொடுத்திருப்பார் கௌரவம் மதிப்பு செல்வாக்கு உயர்ந்திருக்கும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனை குறைந்திருக்கும் பொருளாதார பிரச்சனை தேர்ந்தெடுக்கும் திருமண காரியம் சுபகாரியம் நடந்திருக்கும் புத்திரபாக்கியம் கிட்டிருக்கும்.
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானம் தொழில் ஸ்தானம் எனப்படும்
10 ஆம் இடத்தில் வருகிறார் இதனால் பதவி இழப்பு பதவி பறிபோகும் கௌரவ இழப்புக்கள் தொழில் போட்டி பொறாமைகள் தேவையற்ற இடமாற்றம் பதவி இறக்கம் தொழில் வழியில் அலைச்சல் சங்கடங்கள் ஆகிய பல விதமான சங்கடங்களை தருவார்.
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் தனம் குடும்ப வாக்கு ஆரம்பக்கல்வி ஸ்தானம் எனப்படும் 2-ஆம் இடத்தையும்.
🌸ஏழாம் பார்வையாக உங்கள் வீடு வண்டி வாகனம் குடும்பம் பட்டப்படிப்பு ஸ்தானம் எனப்படும் 4-ஆம் இடத்தையும்.
🌸9-ஆம் பார்வையாக உங்கள் ருண ரோக சத்ரு வெற்றி ஸ்தானம் எனப்படும் 6-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்.
நிதிநிலை :
குருபகவான் உங்கள் இரண்டாம் மற்றும் நான்காம் இடத்தை பார்ப்பது கையில் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் முதலீடுகள் மற்றும் வங்கி இருப்பு கிறுகிறுவென கூடும் கடந்த காலங்களில் இருந்து வந்த பல பிரச்சனைகள் முழுவதுமாக தீரும் காலகட்டம் மனக் கவலைகள் தீரும் வங்கிக் கடன்கள் மூலம் நிதி நிலைமையும் உயரும்.
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வருடம் பதவி இழப்பு வேண்டாத பணியிட மாற்றங்கள் பதவி குறைப்பு சம்மந்தமில்லாத துறைக்கு மாற்றம் மேலதிகாரியின் கெடுபிடிகள் இவைகள் எல்லாம் இருக்கும் சிலருக்கு நிறுவனம் விட்டு நிறுவனம் மாறும் சூழ்நிலைகள் உண்டாகும் அந்த நேரத்தில் மிகவும் கவனமாக புதிதாக செல்லும் நிறுவனத்தை ஆராய்ந்து சேர நல்லது எக்காரணம் கொண்டும் இருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம் வேலை செய்யும் இடத்தில் பலவிதமான தொந்தரவுகள் இந்த வருடம் இருக்கத்தான் செய்யும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வருடம் மந்தம் ஏற்படும் காலகட்டம் வியாபாரத்தில் கடன் வியாபாரம் அதிகம் நடக்க வாய்ப்புகள் உண்டு எக்காரணம் கொண்டு புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டாம் இருக்கும் தொழிலில் கவனம் செலுத்தவே சிறப்பானது தொழில் வியாபாரம் வியாபாரத்தை விஸ்தரிக்க கூடாது தொழிலுக்குத் தேவையான புதிய இயந்திரங்களை நிறுவும் காலகட்டம்.
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
திருமணத்துக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரும் காலகட்டம் விவாகரத்து வழக்குகள் வெற்றி பெறும் அதனால் மறுமணம் உடனடியாக அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் காலம் குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளி போகும்.
வீடு வண்டி வாகனம் :
புதிய வீடு வண்டி வாகனங்கள் அமையும் காலகட்டம் பழைய வண்டிகளை விற்று புது வண்டிகள் வாங்கும் காலகட்டம் புதிய சொத்துக்கள் சேரும் காலகட்டம்.
மாணவ மாணவியர்கள்:
ஆரம்பம் மற்றும் பட்டப்படிப்பு மாணவ மாணவியருக்கு இந்த காலம் பொன்னான காலம் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் எளிதாக பெறுவர் படிப்பில் நல்ல கவனம் உண்டாகும் விரும்பிய பட்டப்படிப்பு கிடைக்கும் காலகட்டம். மிக கவனமாக படித்தால் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களை பெறும் காலம் குருகுலக்கல்வி படிப்பவர்கள் இந்த ஆண்டில் நல்ல பலன்களை அடையலாம்.
விவசாயிகளுக்கு:
விவசாயம் போதிய அளவுக்கு சுமாராக இருக்கும் எதிர்பார்த்த லாபங்கள் அடைவதில் தாமதங்கள் ஏற்படும் வங்கி கடன்கள் விவசாய கடன்கள் கிடைக்கும் புதுவகையான விவசாயி செய்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் இருக்கும் விவசாயத்தை மட்டுமே தொடர சிறப்பு.
பெண்களுக்கு :
வேலை பார்க்கும் பெண்களுக்கு செய்யும் வேலையில் பிரச்சனைகள் தொந்தரவுகள் தேவையற்ற இடமாற்றம் பதவி குறைப்பு மேலதிகாரியின் தொந்தரவு சக ஊழியர்களின் பிரச்சனைகள் சந்திக்கும் காலம் எனவே கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலகட்டம் விவாகரத்து வழக்கில் வெற்றி கிடைக்கும் உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள்.
மற்ற பலன்கள்:
கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் மற்றும் நீங்கும்.
நீங்கள் கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் காலகட்டம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் காலகட்டம்.
புதிய மனை வீடு வண்டி வாகனம் சொத்துக்கள் வாங்கும் காலகட்டம்.
தாயாரின் உடல்நிலை சரியாகும்.
நீண்டநாள் இரு பார்த்துக்கொண்டிருந்த வங்கி கடன்கள் கிடைக்கும்.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாவதால் மருத்துவச் செலவுகள் குறையும்.
வெற்றிகள் வந்து சேரும் காலம்.
வம்பு வழக்குகளில் எதிரி தொந்தரவுகள் நீங்கும் காலம்.
எதையும் தைரியமாக செய்யும் காலமே.
பரிகாரம்:
🍥 தினமும் குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு.
🍥 திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு.
🍥 யானைக்கு கரும்பு தானமும் அந்தணர்களுக்கு உதவியும் செய்ய சிறப்பு.
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.