Guru Peyarchi 2019 Mesha Rasi prediction - மேஷ ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் – 2019

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆனது விருச்சக வீட்டிலிருந்து தனுசு வீட்டிற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் -29 ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர்- 5 தேதியும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவான் ஆனவர் பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ஞானம் குழந்தை பாக்கியம் ஆகியவற்றிக்கு காரகராக திகழ கூடியவர்.

” அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு”.

” குரு பார்த்தால் கோடி நன்மை ஆகும்”

எனவே குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக நன்மைகளை அள்ளி தர கூடியவராக இருப்பார்.

மேஷ ராசிக்கு இந்த ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள் சிறப்பாக அமைய இருக்கிறது. ராசிநாதன் செவ்வாய்க்கு குரு நண்பர் என்ற வகையில் இருந்தாலும் கடந்த ஓர் ஆண்டுகளாக ராசிக்கு எட்டாம் இடத்தில் மறைவு ஸ்தானத்தில் இருந்ததால் நல்ல பலன்கள் எதுவும் கிட்டவில்லை.

வருகின்ற குரு பெயர்ச்சி ஆனது உங்கள் ராசிக்கு திரிகோண ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் குரு பகவான் தனது சொந்த வீட்டில் அமர்ந்து ஆட்சி பெற்று உங்களது ராசியை பார்ப்பதால் இதுவரை இருளில் இருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வந்ததைப்போல உணர்வீர்கள்.

உங்களது புகழ் மேலோங்கி நிற்கும் சபைகளில் உங்களது பேச்சு எடுபடும். தேக ஆரோக்கியம் கிட்டும். உங்களது மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். இதுவரை வந்து சேராத கொடுத்த கடன்கள் வட்டியுடன் வசூல் ஆகும்.

தனது ஐந்தாவது பார்வையால் மூன்றாம் இடத்தினை பார்வை செய்வதால் கீர்த்தி, புகழ் அந்தஸ்து உண்டாகும். குறிப்பாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது திறமையால் புகழும், அந்தஸ்தும் அடைவார்கள்.

உங்களது சகோதரர் களுக்கிடையே உருவான இடையே உருவான சொத்து தகராறு விரைவில் தீரும் மொத்தத்தில் சகோதரனுடைய ஆதரவு கிட்டும்.

குரு பகவான் குரு பகவான் தனது 9-ஆம் பார்வையால் உங்களது ராசிக்கு ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால் பிள்ளைகளுக்கு தேக ஆரோக்கியம் கிட்டும். நீண்ட நாள் தீராத பூர்வீகச் சொத்துகள் பிரச்சினை நீங்கி உங்களது கைகளுக்கு வந்து சேரும். உங்களது புத்திரர்கள் கல்வியால் உயர்வடைவார்கள். உங்களுக்கும்,உங்களது பிள்ளைகளுக்கும் இடையே உருவான மனக்கசப்புகள் சஞ்சலங்கள் நீங்கும்.

உங்களது புத்தியால் பணி உயர்வுகள் இதுவரை கிடைக்காத உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பிறகு கிடைக்கும் தனவரவு உருவாகும்.

குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தை வழி ஆதரவு கிட்டும். தந்தைக்கும், தனக்குமான மனகசப்புகள் நீங்கி சந்தோஷம் பெருகும். தந்தைவழி சொத்துக்கள் கிடைக்கும். தான தர்ம குணம் உடையவராக உங்களை மாற்றி விடும். இதுவரை குலதெய்வ கோவிலுக்கு தானமாக தர எண்ணியதை கொடுக்க முன் வருவீர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருக்கும்.

இரும்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை தரும் வண்டி வாகனம் முதலாளிகளாகவும் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

மேலும் நல்ல முன்னேற்றம் கிடைக்க உங்களுக்கு நடைபெறும் திசைகள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில் இந்த குருபெயர்ச்சி மேஷ ராசிக்கு நல்ல பலன்களை தந்து வாழ்வின் உச்சத்தை தொடுவீர்கள்.

வியாழன்தோறும் குருபகவானுக்கு சுண்டல் நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். வழிபட சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

Blog at WordPress.com.

%d bloggers like this: