விருச்சிக ராசி அன்பர்களே
( விசாகம் 4, அனுஷம் கேட்டை) குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
விருச்சிக ராசி (80%): (சிறப்பான நல்ல பலன்கள்)
கடந்த ஒரு வருடமாக ராசியில் ஜென்ம குருவாக இருந்து.
“ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்”
கடந்த ஒரு வருடம் வனவாச காலம் போல உங்களுக்கு பாதகமான காலமாக அமைந்திருக்கும் தந்தையுடன் மனகசப்பு முதலீடுகளில் பாதிப்பு வேலையில் மந்தப் போக்கு சகோதரர்கள் வழியில் தொந்தரவுகள் திருமணத்தடை கணவன் மனைவி புரிதல் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை போன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்து இருக்கிறீர்கள்.
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம் என்று சொல்லப்படும் தனம் வாக்கு குடும்பம் பெயர்ச்சியாகி தனம் வாக்கு வித்தைகள் வளர்ச்சி அடையும் தாராளமான பணப்புழக்கம் செல்வாக்கும் கூடும் குடும்பத்தில் சுபகாரியங்கள் இனிதாக நடக்கும் முன்னேற்றமும் முயற்சிகளும் கைகூடும் வெற்றிகள் வந்து சேரும் காலகட்டமாகும்.
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் 6-ஆம் இடத்தையும்.
🌸ஏழாம் பார்வையாக உங்கள் அட்டமா ஸ்தானம் எனப்படும் 8-ஆம் இடத்தையும்.
🌸9-ஆம் பார்வையாக உங்கள் கர்ம ஸ்தானம் எனப்படும் 10-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்.
நிதிநிலை :
தனஸ்தானத்தில் குருபெயர்ச்சி யாவது உங்கள் தனநிலையை உயர்த்தும் தாராளமான பணப்புழக்கம் கள் உண்டாகும் வசூலாக வேண்டிய பாக்கித் தொகைகள் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும் காலகட்டம் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கூடிய பதவி உயர்வுகள் வந்து சேரும்.
வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஆதாயங்கள் ஏற்படும் தாராளமான லாபங்கள் வந்து சேரும் வெளியில் இருந்து வரவேண்டிய கடன் பாக்கிகள் வந்து சேரும் உற்பத்தி பெருகி அதன் மூலம் லாபங்கள் அதிகரிக்கும் பணவரவுகள் தனவரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வங்கி கடன்கள் கிடைக்கும்.
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
குரு பகவான் உங்கள் 10-ஆம் இடத்தை பார்வை இடுவதால் புதிய மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் உடனடியாக கிடைக்கும் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கௌரவப் பதவிகள் கிடைக்கும் காலகட்டமும் விரும்பிய உயரிய பணி மாற்றமும் இடமாற்றம் உண்டாகும்.
வியாபாரம் தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல வருமானம் வசதிகள் கிடைக்கும் வியாபாரம் தொழில் பெருகும் உற்பத்தி அதிகரிக்கும் வியாபாரத்தை தொழிலை விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் எனவே திட்டமிட்டு விரிவுபடுத்திக் கொள்ளலாம் புதுவகையான தொழிலில் ஈடுபட உகந்த காலகட்டம்
புதிய பொருட்கள் விற்பனை செய்யும் காலகட்டம் புதிய ஒப்பந்தங்கள் மூலம் விரிவாக்கம் செய்யலாம் வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உண்டாகும் காலகட்டம் ஏற்றுமதி தொடர்பான வியாபாரம் சூடுபிடிக்கும் காலம்.
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
திருமணம் நடக்கும் காலம் நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கணவன் மனைவியிடையே இல்லற உறவுகள் கூடும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இல்லறம் இனிதாக இருக்கும் வாரிசுகள் ஏற்படும்.
வீடு வண்டி வாகனம் :
இந்த வருடத்தில் புதிய வீடு வண்டி வாகனங்கள் வாங்குவதை தள்ளிப்போட சிறப்பு அவசரப்பட்டு வீடு சம்பந்தப்பட்ட சொத்துக்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
மாணவ மாணவியர்கள்:
மாணவ மாணவியர்கள் அனைவரும் கவனமாக படிக்க வேண்டிய காலகட்டம் தேர்வு நேரங்களில் கவனமாக இருந்து தேர்வை சந்திக்க வேண்டிய காலகட்டம் படிப்பை தவிர மற்றவைகளில் கவனத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு.
விவசாயிகளுக்கு:
விவசாயிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வருமானங்களும் லாபங்கள் கிடைக்கும் உரிய நேரத்தில் தேவையான இடுபொருட்கள் கிடைக்கும் நல்ல மகசூலும் உண்டாகும் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு வைத்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம்.
பெண்களுக்கு :
உங்களுக்கு இருந்த அனைத்து உடல்நல பிரச்சனைகளும் தீரும் நீண்ட நாள் கருவுராமல் இருந்த பெண்களும் குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம் வேலை பார்க்கும் பெண்களுக்கு விரும்பிய இடத்தில் பதவி உயர்வுடன் வேலை மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் காலகட்டம்.
மற்ற பலன்கள்:
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
நீண்ட நாள் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேரும் காலகட்டம்.
உங்கள் வாக்குறுதிகள் வெற்றிபெறும்.
எழுத்து ஒப்பந்தங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும்.
உடல்நிலையில் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்.
நீண்டநாட்கள் இருந்துவந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட தொல்லைகள் குறைந்து ஆரோக்கியம் பெருகும்.
இதுவரை இல்லாத புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும்.
பரிகாரம்:
🍥 நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் வழிபாடு.
🍥 ஒருமுறை திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு.
🍥 குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்பட்ட பொருளை வாங்கித் தர வேண்டும்.
🍥 யானைக்கு கரும்பு வாங்கித்தர சிறப்பு.
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும். ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.