2019 குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2,544

நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தமிழ் மாதம்
ஐப்பசி மாதம் 18ம்நாள் பின்னிரவு ,ஆங்கில மாதம் 5/11/ 2019 அதிகாலை 5.17க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு குரு பெயர்ச்சிக்கான பொதுப் பலனை மட்டும் பார்ப்போம். தனிப்பட்ட ராசிகளுக்கு அல்ல.

குரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.

கால புருஷனுக்கு ஒன்பதாமிடமாகிய பாக்கியஸ்தானத்தில் குரு தன்னுடைய ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடாகிய தனுசில் சஞ்சரிக்க உள்ளதால் உலக அளவில் நாம் மிக நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தற்போது கோட்சாரத்தில் தனுசு ராசியில் இருக்கும் சனி பகவானும், கேது பகவானும் குருவின் வரவால் புனிதம் அடைகிறார்கள்.

இதுவரை நாட்டில் நடைபெறும் மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அன்னிய மதங்களின் திணிப்புகள் தடுத்து நிறுத்தப்படும்.

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
திராவிட கொள்கைகள் நசுக்கப்படும்.
எங்கும் தெய்வபக்தி மேலோங்கும்.

அத்திவரதரை பார்க்க அலைகடலென திரளும் மக்கள் போல் உலகமெங்கும் அவரவர் சொந்த மதங்களில் ஈர்ப்பு ஏற்படும்.

கால புருஷனுக்கு முதல் இடமாகிய மேஷத்தையும், மிதுனத்தையும், சிம்மத்தையும் குரு பார்ப்பதால் ஆளும் அரசாங்கம், நிர்வாகத்தைத் திறம்பட செய்ய முடியும்.

ஒரு ஜாதகத்தில் தலைமைப் பதவியைக் குறிக்கும் சிம்மத்தையும், அதிகாரத்தைக் குறிக்கும் மேசத்தையும், நிர்வாகம் மற்றும் புத்திசாலித்தனத்தை குறிக்கக்கூடிய மிதுனத்தையும் குரு பார்ப்பதால் இதுநாள் வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தற்போது நடைபெறும் அரசாங்கம் திறம்பட நிர்வாகத்தை மேற்கொள்ளும்.

கடந்தாண்டு ஏற்பட்டது போன்ற ஐயப்பன் கோயிலில் பெண்களும் செல்லலாம் போன்ற போராட்டங்கள் முறியடிக்கப்படும்.

புதிய கோயில்களோ அல்லது மிகப் பெரிய சிலை நிறுவுவதற்கான அனுமதி கிடைக்கப் பெறும்.

ஆன்மீக பயணங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

திருக்கைலாயம் போன்ற ஆன்மீக யாத்திரை செல்ல நினைப்பவர்கள் நிம்மதியாக, முழுமையாக சென்று வர முடியும்.

ஜனவரி மாதத்திற்கு பிறகு சனிபகவான் தனுசுலிருந்து மகரத்திற்கு மாறுவதால் மேற்சொன்ன பலன்கள் 2020 ஆண்டிலிருந்து முழுமையாக பொருந்தும்.

தனுசில் மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்கள் உள்ளன.

குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது மிகப்பெரிய அளவில் ஆன்மீக அலை எழும்.

நாத்திக கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கடவுள் இல்லை என சொல்லும் சில நபர்கள் மறுபடியும் உண்மை உணர்ந்து ஆன்மீகத்திற்கு திரும்புவர்.

குரு 3மிடமான முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் பெருகும்.

மதக்கலவரங்கள் ஏற்படாது.

தர்மத்திற்கு மாறாக நடப்பவர்கள், தானாக திருந்தி, மனம் மாறி தூய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.

குரு தன காரகன் என்பதால் அவர் தனுசில் ஆட்சி பெற்று இருப்பதால் எல்லா தொழில்களிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிற்சாலைகள் மறுபடியும் பழைய நிலைக்கு செயல்படத் தொடங்கும் பணப்புழக்கம் மக்களிடையே அதிகரிக்கும்.

அதுபோல் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம்.

ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து செயற்கையாக குழந்தை பெற நினைப்பவர்களுக்கு இக்காலம் நிச்சயமாக நல்ல சந்ததியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

குரு ஆண் கிரகம் என்பதால் இரண்டாவது குழந்தை பெற நினைப்பவர்களுக்கு ஓரளவு ஆண் குழந்தைக்கும் சாத்தியம் உண்டு.

புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் 2020 வருடத்தில் எதிர்பார்க்கலாம். (புத்திர தோஷம் இல்லாமல் இருந்தால்)

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் குரு தனுசு ராசியில் இருக்கும் போது உலக மற்றும் இந்திய அளவில் நிச்சயமாக நடைபெறும்.

குருபெயர்ச்சி பலன்கள் 2019

2019 ஆம் ஆண்டு நவ கிரகங்களில் முழு சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஐப்பசி 18 தேதி பின்னிரவு, நவம்பர் மாதம் 5ம்தேதி அதிகாலை 5 .17 மணிக்கு திருக்கணிதப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என இரு பஞ்சாங்கங்கள் உண்டு. இதை ஓரளவு அனைவரும் அறிவர்.

இந்த குருபெயர்ச்சி திருக்கணிதப்படி கணிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலனுக்கு செல்லும் முன், சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொண்டு பலனை படிக்க ஆரம்பியுங்கள்.

முதலில் கோட்சாரம் என்பது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை நமக்கு நன்மையோ அல்லது தீமையோ தரக்கூடிய கிரகம் ஒரு ராசியில் இருப்பது ஆகும்.

இதில் ஆண்டு கோள் என குறிப்பிடப்படும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சொல்ல சராசரியாக ஓராண்டு எடுத்துக் கொள்வார்.

இந்தக் காலகட்டங்களில் அந்த குறிப்பிட்ட ராசியினருக்கு நன்மையோ அல்லது தீமையோ ஓரளவு நடக்கும்.

இங்கு அதைவிட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களின் சுய ஜாதக அமைப்பே நன்மை ,தீமைகளை முழுமையாக வழங்கும்.

அதாவது ஒரு ஜாதகத்தில் திசா 50 சதவீத பலனையும் புத்தி 20% பலனையும் அந்தரம் 5% பலனையும் மீதமுள்ள 25 சதவீதத்தில் சனி ,குரு, ராகு கேது போன்ற மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் திசையை மீறி புத்தியோ, புத்தியை மீறி அந்தரங்கமா, பெரிய பலன் கொடுக்காது.

இதில் சிலர் கோட்சாரத்தில் சனி, குரு நல்ல இடங்களில் வந்திருந்தாலும் முன்னேற்றம் ஒன்றும் தெரியவில்லை என கூறுகின்றனர்.

அதே நேரம் ஏழரை சனி, அஷ்டமசனி போன்ற கோட்சார காலகட்டங்கள் நடந்தால் ஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடந்தால் கூட 50 சதவீத பலனை முடக்கிவிடும்.

சமீபத்தில் என்னுடைய Facebook பதிவில் கூட சனியின் ஆதிக்கமா?குருவின் ஆதிக்கமா? என்ற கட்டுரை எழுதி இருந்தேன்.

அதில் சனியின் பலனுக்கு முன், குருவின் பலன் பெரிதாக எடுபடாது.

இதுதவிர பெயர்ச்சியாகும் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பெயர்ச்சி காலத்தில் அஸ்தமனம், வக்ரம், அதிசாரம் போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.

இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், நமது சுய ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடைமுறையில் இருக்கும் போது பலன் இரட்டிப்பாய் அமையும்.

பருத்தி சேலையாக காய்ப்பதற்கு சமம்.

அதே நேரத்தில் நமது ஜாதகத்தில் தசா புத்திகள் சரியில்லாத நிலையில், ஏழரைச் சனியும், அட்டமச் சனியும் நடைமுறையில் இருக்கும் போது குரு பெயர்ச்சி நல்ல நிலையில் இருந்தால் பாலைவனத்தில் வெறும் காலுடன் நடந்தவனுக்கு செருப்பு கிடைத்தது போன்ற அனுபவம் மட்டுமே ஏற்படும்.

ஆதலால் உங்கள் சுய ஜாதகமே உங்களுக்கு முழுமையாக பேசும்.

சிலர் குரு பெயர்ச்சி இராசிக்கா? லக்னத்திற்கா? என அறியாமல் கேட்கிறார்கள்.

ராசிக்கு மட்டுமே கோட்சார பலன். லக்னத்திற்கு அல்ல.

பொதுவாக குரு பகவான் ராசிக்கு 2, 5 ,7,9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிக நன்மையை கொடுக்கும்.

குருவின் பார்வை சிறப்பு என்பதால் குரு பார்க்கும் இடங்கள் சிறப்பு பெறும்.

குரு தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9 ஆம் இடங்களை பார்வை செய்யும்.

மேலே கூறிய விஷயங்கள் ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இனி தனிப்பட்ட ராசியின் பலனை தொடர்ந்து படியுங்கள்.

குரு தற்போது கோட்சாரத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு 5/11/19ல் ஐப்பசி 18/19 அன்று அதிகாலை 5.17க்கு மாற்றம் அடைகிறார்.

குரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.

கால புருஷனுக்கு ஒன்பதாமிடமாகிய பாக்கியஸ்தானத்தில் குரு தன்னுடைய ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடு ஆகிய தனுசில் சஞ்சரிக்க உள்ளதால் மிக நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2019 by Ramajeyam Marimuthu

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More