2019 குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி

7,771

கன்னி ராசி பலன்கள் – 74/100.

கன்னி ராசிக்கு குரு பகவான் நாலுக்குடையவராகவும், 7-க்குடையவராகவும் வருவார்.

கன்னி ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலனாகவோ அல்லது பாதகமாகமான பலனாகவோ அல்லாமல் இரண்டிற்கும் நடுவில் சமமாக உள்ளது. அதை நேரத்தில் கடந்த காலத்தையும் ஒப்பிடும் போது நல்ல பலனை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

காரணம் முதலில் சனி பகவான் அர்த்தாஷ்டம சனி என்ற அமைப்பிலிருந்து விலகுகிறார்.

சனிபகவான் இதனால் வரை 4 ஆம் இடம் என்னும் சுக ஸ்தானத்தில் அமர்ந்து உடல் நலத்தை கெடுத்து தொழில் ஸ்தானத்தை பார்வை செய்வதால் வேலை மற்றும் தொழிலில் பல இடர்பாடுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும்.

தற்போது ராசிக்கு 4-ஆம் இடம் மற்றும் மூலத்திரிகோணம் ஆகிய தனுசாகிய ஆட்சி வீட்டில் குரு அமர்வதால் உடல் நலம் சீராகும்.

அர்தாஷ்டம சனியயில் இருக்கும் சனியுடன் குரு இணைவதால் சனியால் இனி பெரிய தீமையை தரமுடியாது.

குரு 4-ஆம் இடத்தில் அமர்வதால் உடல் நலம் சீராகும். நாலாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் இதுநாள்வரை இருந்த இடர்பாடுகள் நீங்கும்.

சிலருக்கு வீடு மனை வண்டி வாகனம் போன்ற யோகங்கள் அமையப்பெறும்.

குரு இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடம் சிறப்பு பெறும் என்பதால் குரு ஐந்தாம் பார்வையாக எட்டாம் இடத்தை பார்ப்பதால் இதுநாள் வரை இருந்த வம்பு வழக்குகள் நீங்கும். எதிர்மறையான எண்ணங்கள் விலகி புதிய உற்சாகம் பிறக்கும்.

எட்டாமிடம் மறைவு ஸ்தானம் என்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சுய ஜாதகமும் வலுத்து அமைத்திருந்தால் வெளிநாடு ,வெளிமாநிலம் செல்ல முடியும்.

குரு ஏழாம் பார்வையாக 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணிச்சுமை குறையும். தொழிலில் சிலர் உதவ முன்வருவார்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால், விரைய செலவுகள் உண்டாகும் என்பதால் அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

ராசிக்கு ஏழாம் அதிபதி, ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் அமர்வதால் திருமணப் பேச்சுகள் கைகூடும்.

நாலாம் இடம் உயர்கல்வி என்பதால் உயர்கல்வி கற்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு எளிதில் உயர்நிலைக் கல்வி கிடைக்கும்.

அடுத்த சில மாதங்களில் அர்த்தாஷ்டம சனியும் விலக இருப்பதால் அளவில்லா ஆனந்தம் அடைய இருக்கிறீர்கள்.

பத்தில் ராகு பல தொழிலை கொடுக்கும்.

பத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் தொழில் கண்டிப்பாக இனி சிறக்கும்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணம் மற்றும் அரசின் சலுகையில் தாமதம் ஏற்படும். 01 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தத்தில் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அடிக்கோடிட்டு இந்த குரு பெயர்ச்சி அமையும்.

பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More