2019 குரு பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி
மேஷ ராசி பலன்கள் – (81/100)
மேஷ ராசிக்கு குரு பகவான் 9ம் அதிபதியும், 12ம் அதிபதியும் ஆக வருவார்.
மேஷ ராசிக்கு முழு யோகத்தை தருபவர் குருவே.
தற்போது பாக்கிய ஸ்தானத்தில் குரு ஆட்சி பெறுவதால் மேஷராசிக்காரர்கள் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம்.
இதுநாள் வரை எட்டாம் இடத்தில் அஷ்டம குருவாக மிகவும் கஷ்டப் படுத்தியவர் இனி 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் மிகச் சிறப்பான நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்பட்டால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு கிரகமும் அட்டம ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல பலனைக் கொடுக்காது.
இதுநாள் வரை தனத்திற்கு அதாவது பணத்திற்கு அதிபதியான குரு பகவான் எட்டாம் இடத்தில் மறைந்து இருந்ததால் மேஷ ராசிக்காரர்கள் பலபேருக்கு பணப்பிரச்சனை இருந்திருக்கும்.
பணத்தின் அருமையை நாம் எல்லோரும் உணர்வோம்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது பழமொழி அதாவது இடமாற்றம் ஏற்படும் என்பது மறைமுகமாக இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.
அதே நேரத்தில் போய் சேர்கின்ற இடத்தில் நிம்மதியான, நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
குரு தனுசு ராசியில் இருந்து மேஷ ராசி, மிதுன ராசி, சிம்ம ராசியை பார்ப்பதால் அஷ்டம சனி, அட்டம குரு காலகட்டங்களில் இருந்த எதிர்மறையான எண்ணங்கள் விலகி, முழு மனதுடன் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
செய்யும் முயற்சிக்கேற்ற பலன் திருப்பி நிச்சயம் உண்டு. பண வரவு அதிகரிக்கும்.
மேஷ ராசிக்கு ஒன்பதில் குரு ஆட்சி பெறுவதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு அமையும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும்.
புண்ணியங்கள் பல செய்யும் வாய்ப்பு உண்டாகும். தான தர்மங்களுக்கு தாராளமாகக் கொடுத்து உதவக்கூடிய அமைப்பில் பணவரவு இருக்கும்.
ராசியை குரு பார்ப்பதால் தெளிவான, சிறப்பான மனநிலை அமையும்.
மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய முயற்சிகள் கைகூடும்.
5-ஆம் இடமான புத்திர ஸ்தானத்தையும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் குரு ஆட்சி பெற்று பார்ப்பதால் திருமணமான புது தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்துக் இருப்போர்க்கு குழந்தை பாக்கியம் அமையும்.
ஜனவரிக்குப் பின் சனி பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுவதால் வேலைப் பளு சற்று கூடும். ஆனால் அதற்கேற்ற பணவரவு நிச்சயம் இருக்கும்.
14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.
இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.
30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் இக்காலகட்டங்களில் வேலை சார்ந்த விஷயங்களில் சிறிது இடமாற்றமும் அல்லது வேலையில் அதிகமான பணிச்சுமையோ அல்லது இடமாற்றமோ ஏற்படும்.
30.6.2020 வரை இந்நிலை நீடிப்பதால் வேலை, வேலை சார்ந்த விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழிலில் முதலீட்டை அளவோடு செய்வது நல்லது.
தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.
இதில் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு சஞ்சரிக்கும் போதெல்லாம் கொஞ்சம் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
குருவிற்கு முழு பகை கிரகம் சுக்ரன்.
ஒரு தடவைக்கு, இரு தடவை கொஞ்சம் முயற்சி செய்தே பலன் அடைய வேண்டியிருக்கும்.
பணவரவில் இழுபறி இருக்கும்.
மற்றபடி இந்த குருபெயர்ச்சி மேஷ ராசிக்கு முழுக்க முழுக்க நன்மைகளை வழங்கும் ஆண்டாகவே உள்ளது.
பணம் பலவழிகளிலும் வருவதால் கவலைகள் பறந்து விடும்.
மேஷ ராசிக்கு 2020ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருக்கும்.
பரிகாரம்:
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் ,செவ்வாயின் அதிபதி முருகன் என்பதால் திருச்செந்தூர் ஒருமுறை சென்று வர திருப்பங்கள் உண்டாகும்.
தினசரி காலை, மாலை இருவேளையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி, பூஜை செய்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய பலன் இரட்டிப்பாக அமையும் .
குல தெய்வ வழிபாடும் சிறப்பை கொடுக்கும்.
Comments are closed.