கடக ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023
Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே. உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தும் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 9 மிடமான பாக்கியஸ்தானத்திலிருந்து கொண்டு பாக்ய குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பலவித நன்மைகளை அள்ளிக் கொடுத்து இருப்பார் இந்த இடம் மிக மிக ராஜயோகமான இடம் என்பதால் பாக்கியங்கள் தடையின்றி கிடைத்திருக்கும் கௌரவம் புகழ் அந்தஸ்து செல்வாக்கு மதிப்பு உயர்ந்திருக்கும் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் கடன்கள் தீர்ந்திருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் சரியாகி இருக்கும் திருமண சுப காரியங்கள் புத்திர பாக்கியங்கள் ஏற்பட்டிருக்கும்
இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு 10 மிடத்தில் கர்மகுருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4 & 6 இடங்களை இனி பார்வை செய்வார்.
கர்ம குரு
“பத்தாமிட குரு பதி குலைய செய்யும்”
“அந்தணன் பத்தில் நின்றால் அவதிகள் பல உண்டு”
“ஈசனாரொரு பத்திலிலே தலையோட்டிலே யிரந் துண்டதும்”
இந்தப் பழமொழிகளிக்கேற்ப சிறப்பில்லாத பலன்களையும் கஷ்டங்களையும் தரும். பதவிகள் பறிபோகும் தொழில் வழியில் போட்டி பொறாமை ஏற்படும் வேலை இழப்பீடுகள் மாறுதல்கள் அலைச்சல்கள் ஏற்படும் தொழில் வழியில் சங்கடங்களை தருவார்
அடிமைத் தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் வேலைகள் பறி போக வாய்ப்பு உண்டு. பதவி உயர்வுகள் எளிதில் அமையாது. விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஊர் மாற்றங்கள் ஏற்படும். அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். வேலைகளில் பனிச் சுமைகள் நேரம் கடந்த வேலை பளு இருக்கும். எப்பொழுதும் ஒரு வகையான டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும் வேலைகளில் மன உளைச்சல் ஏற்படும். பதவி இறக்கம் ஏற்படும். தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்
அரசு ஊழியர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம் தேவையில்லாத இடமாற்றங்கள் அளவுக்கு அதிகமான பொறுப்புகள் வேலைப்பளுகள் அதிகரிக்கும் துறைவாரியாக தொந்தரவுகள் ஏற்படும் மேலதிகாரிகளின் தொந்தரவுகள் கண்டிப்புகள் ஏற்படும் பதவி உயர்வுகள் தடைபடும் கடினமான துறை மாற்றங்கள் ஏற்படும் சிக்கலில் வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் சக ஊழியர்களிடம் பிரச்சனைகளை சந்திக்கும் காலமாக இருக்கும்
வியாபாரம் தொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் போட்டி பொறாமைகள் தொழிலில் மந்தம் வியாபாரத்தில் மந்தம் ஆகியவைகளை சந்திக்க நேரிடும். தொழில்கள் முடங்கும் அபாயங்கள் ஏற்படும் இந்த காலகட்டத்தில் தொழிலை விரிவாக்கம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் தேவையான புதிய முதலீடுகளில் எச்சரிக்கையும் கவனமும் மிகுந்த அவசியம் வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும் தேவையில்லாத செலவுகள் தொழில் வியாபாரத்தில் ஏற்படும் ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமும் இருக்க வேண்டும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் திடீர் இழப்புகளை சந்திக்கும் காலகட்டம். தேவையில்லாத சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நன்மையை தரும்
கௌரவ பிரச்சனைகளை ஏற்படுத்தும்
கர்ம காரியங்கள் ஒன்று ஏற்படும்
சங்கடமான சூழ்நிலைகள் அடிக்கடி சந்திக்க நேரிடும்
இருந்தாலும் கீழ்கண்ட நன்மைகளையும் குருபகவான் செய்வார்
உங்கள் தேவைக்கு ஏற்ப பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும்
சீட்டு பணங்கள் மெச்சூரிட்டி ஆகும் பாலிசி இதர வகையில் வர வேண்டிய தனிப்பட்ட தொகைகள் கைக்கு வந்து சேரும்.
புதிய வேலைக்கு மாறும் சூழல்கள் அமையும்
வீட்டில் புதிய வரவுகள் உண்டாகும் அதாவது குழந்தை பிறப்பு, புதிய மருமகன் அல்லது மருமகள் வரவு ஏற்படும்
திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு திருமணம் நடக்கும் உங்கள் மகன் மகளுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் உண்டு
Jothida Rathna Chandrasekaran Post
புதிய சேமிப்புக்கள் சீட்டு முதலீடுகள் செய்யும் காலகட்டம்
புதிய வீடுகள் வண்டி வாகன வசதிகள் ஏற்படும்
கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யும் காலம் நோய் நொடிகள் நீங்கும் காலகட்டம்
புதிய இயந்திரங்கள் மின்னணு சாதனங்கள் வாங்கி நிறுவும் காலகட்டம்
கடன் சுமைகள் குறையும்
உடல் நல பாதிப்புகள் சரியாகும்
எதிரி தொந்தரவுகள் மறையும்
மாணவர்கள் மாணவிகளின் படிப்புகள் நன்றாக அமையும் விரும்பிய கல்வி அமையும் மதிப்பெண்கள் கூடுதலாக பெரும் காலகட்டம் விரும்பிய கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும்
எதிர்பாராத யோகங்கள் அமையும் காலகட்டம்
தாயார் தாய்வழி உறவுகள் மேம்படும் அவர்களின் உடல் நலம் சரியாகும்
பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு அடுத்து உடனடியாக வேலை கிடைக்கும்
அந்தரங்க வாழ்க்கை பிரச்சனைகள் சரியாகும்
பரம்பரை சொத்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
மனைவி வழி சீதனம் வரவேண்டிய பாக்கிகள் பொருள் வரவுகள் ஏற்படும்
சேமிப்புகள் அதிகரிக்கும்
தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும் கலைகளில் ஆர்வம் உண்டாகும்
நஞ்சை நிலம் உள்ளவர்களுக்கு விளைச்சலில் லாபம் அதிகரிக்கும் தானிய வகைகளில் லாபங்கள் உண்டு பண்ணை விவசாயம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபங்கள் கிடைக்கும்
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்
நீண்ட நாட்களாக ஆறாத புண் மருத்துவத்தின் மூலம் சரி ஆகும் பால்வினை நோய்கள் தீரும்
வழக்குகளில் வெற்றி தோல்வி முடிவாகும்
மன நோய்கள் சரியாகும் கட்டி உடல் வீக்கம் போன்ற நோய்கள் சரியாகும்
எலும்புருக்கி நோய் மருத்துவத்தின் மூலம் தீர்வு கிடைக்கும்
சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு மாற்று மருந்துகள் அமையும் நிவாரணம் கிடைக்கும்
சேவை செய்தல் தொழில் உள்ளவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும்
பங்காளி பகைகள் நீங்கும் சுயமரியாதை கூடும்
விவாகரத்து பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்
நீண்டகால நோயிலிருந்து விடுபடும் காலமாக இருக்கும்
தைரியம் அதிகரிக்கும்
குரு பெயர்ச்சி பரிகாரம்:
நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு வழிபாடு வியாழக்கிழமைகளில்
திருச்செந்தூர் முருகன் வழிபாடு
ஆசிரியர்களுக்கு குருமார்களுக்கு தேவையான உதவிகள் செய்வது
சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு தானம் செய்வது