சிம்ம ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023
Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே. உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தும் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8 மிடமான அட்டம ஸ்தானத்திலிருந்து கொண்டு அட்டம குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பலவித துன்பங்களையும் வேதனையும் பொருள் இழப்பீடு புகழ் இழப்பீடு உயிர் இழப்பீடு, முயற்சிகளில் தடை, சுப காரியங்களில் தடை தாமதங்கள் விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் பிள்ளைகளால் தொந்தரவுகள் ஆகிய துர்பலன்கள் அதிகமாக நடத்திருக்கும்
இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு 9 மிடத்தில் பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு பாக்கிய குருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் உங்கள் ராசியை, 3 & 5 இடங்களை இனி பார்வை செய்வார். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும் காலகட்டம்
பாக்கிய குரு
“ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு”
இது ஜோதிட மொழி வழக்கு
ஒன்பதாமிடம் என்பது திரிகோணமாகும் இது மிக மிக ராஜயோகமான இடம். பாக்கியங்கள் தடையின்றி கிடைக்கும் கௌரவம் மதிப்பு செல்வாக்கு ஏற்படும் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் கடன் பிரச்சினைகள் தீரும் பொருளாதார பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் திருமணம் சுப காரியங்கள் புத்திர பாக்கியம் ஏற்படும்
தேகவளம் கூடும் உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் உடற்கூறுகளில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்
புகழ் கௌரவம் அதிகரிக்கும்
உங்கள் செயல் திறன்கள் அதிகரிக்கும் நினைத்த காரியங்கள் நிறைவேறும்
உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிணக்குகள் மாறும் அவர்களின் ஆதரவு கிடைக்கும் அவர்கள் மூலம் நன்மைகளும் உண்டாகும்
வெற்றிகள் வந்து சேரும்
பெண்களுக்கு புதிய வகை காதணிகள் சேரும். கர்ண பூசனம் செய்து கொள்ளும் காலம்
ஆண்களுக்கு புதிய வகையான செயின் நகைகள் சேரும் காலமாக இருக்கும்
கழுத்து தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் தீரும்
அடிக்கடி குறுகிய பயணங்கள் ஏற்படும் அதன் மூலம் ஆதாயங்கள் வந்து சேரும்
பொழுதுபோக்குகள் நிறைந்த காலமாக இருக்கும்
சங்கீதத்தில் தேர்ச்சி பெறும் காலமாக இருக்கும்
ஆயுள் சம்பந்தமான தோஷங்கள் நீங்கும்
நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் பணியாட்கள் ஆகியவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்
கடன் பிரச்சனைக்கு நீங்கும்
தைரியம் வீரியம் அதிகரிக்கும்
குழந்தை பாக்கியம் அமையும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் குழந்தை பாக்கியம் அமையும் காலகட்டம்
பெற்ற பிள்ளைகள் மூலம் மதிப்பு மரியாதைகள் அதிகரிக்கும்
தாய் வழி மாமன் வகையில் ஒத்துழைப்புகள் நன்மைகள் அதிகரிக்கும்
இதுவரை குழப்பத்தில் இருந்த மனம் தெளிவு பெறும் சீராகும் அமைதி பெறும்
பூர்வ புண்ணிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டம்
மாணவ மாணவியர்களின் புத்தி சாதுரியம் அதிகரிக்கும் படிப்பில் கவனம் செலுத்தும் காலகட்டமாக இருக்கும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்
மந்திரங்களை கற்றுக் கொள்ளும் காலம் மந்திர சித்திகள் கிடைக்கும்
ஆன்மீக துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்
அரசியலில் உள்ளவர்களுக்கு மிகுந்த இனிப்பான காலகட்டமாக அமையும்
வயிறு சம்பந்தப் பிரச்சனைகள் சரியாகும் வயிறு சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் நடைபெற்று தீர்வுகள் கிடைக்கும்
Jothida Rathna Chandrasekaran Post
நீண்ட காலமாக கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் காலம்
பங்கு சந்தைகளில் லாபங்கள் கிடைக்கும் புதிது புதிதாக பணம் ஈட்டும் வழிகள் கிடைக்கும் அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும்
வணிகம் வியாபாரம் தொழில் சிறக்கும்
எல்லாவற்றிலும் திருப்தி அடையும் காலகட்டம்
2023 குரு பெயர்ச்சி பரிகாரம்:
திருச்செந்தூர் முருகன் வழிபாடு
ஏழை குழந்தைகளுக்கு குருமார்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்ய நன்மைகள் உண்டாகும்