Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே. உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தும் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 6 மிடமான ருணரோக சத்ரு ஸ்தானத்திலிருந்து கொண்டு ருணரோக சத்ரு குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பலவித துன்பங்களை கொடுத்திருப்பார். கடன் எதிரி வைத்திய செலவு களவு திருட்டு ஏமாற்றம் இழப்புகளை கொடுத்திருப்பார்
இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு 7 மிடத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு களத்திர குருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் உங்கள் 3, 5 & 7 ஆகிய இடங்களை இனி பார்வை செய்வார்.
களத்திர குரு
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மையான காலமாக அமையும்
திருமண வயதில் உள்ளவர்களுக்கு இது திருமண காலமாக அமையும் திருமண காலமும் இதுவே எனவே திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம்
இது நாள் வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இனிதே நடந்தேறும்
நீண்ட கால வயது முதிர்ந்த கன்னி பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் ஆகும் காலகட்டம்
கணவன் அல்லது மனைவியால் யோகம் ஏற்படும் காலகட்டம்
புதுவித உறவுகளுக்கு வழி கிடைக்கும்
கூட்டு தொழில் செய்ய கூட்டாளிகள் அமைவார்கள் கூட்டு தொழில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்
சொந்தம் உற்றார் உறவினர் சுற்றம் ஆகியவர்களிடம் உறவுகள் வலுப்பெறும்
சுபச் செலவுகள் அடிக்கடி நடக்கும்
செல்வாக்கு அந்தஸ்து கௌரவம் மரியாதை உயரும்
சந்தான விருத்தி ஏற்படும்
புதிய எழுத்து ஒப்பந்தங்கள் உண்டாகும்
இளைய சகோதரர்கள் வழியில் நன்மைகள் ஒத்துழைப்புகள் கிடைக்கும்
மனதில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீர்வுக்கு வரும்
உங்கள் குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடந்தேறும்
தீர்த்த யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு அமையும் தெய்வ தரிசனம் கிடைக்கும்
மந்திர காரியங்கள் சிந்திக்கும்
டெக்னிக்கல் சார்ந்த தொழிலுள்ளவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும்
மேலதிகாரிகளின் இணக்கமான போக்கு உங்களுக்கு நன்மையை தரும்
பதவி உயர்வுகள் கிடைக்கும்
பொதுமக்களின் பாராட்டுகள் கிடைக்கும் காலகட்டம்
பரிசுகள் திடீர் யோகங்கள் எதிர்பாராத தொகைகள் கிடைக்கும் காலகட்டம்
எல்லாவற்றிலும் நன்மைகள் நிறைந்த காலமாக இருக்கும்
நீண்டகாலமாக கர்ப்பம் தரிக்காமல் இருந்தவர் பெண்களுக்கு கர்ப்ப காலம் ஏற்படும் காலம்
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்
மனதளவில் இருந்த பிரச்சனைகள் மனசம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நோய்கள் நீங்கும் காலகட்டம்
காதலில் வெற்றிகள் கிடைக்கும் காலகட்டம் காதல் திருமணங்கள் நடந்தேறும்
தூர தேச பயணங்களுக்கு வாய்ப்புகள் கிட்டும்
பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் பூர்வீகம் சம்பந்தப்பட்ட கோயில்களில் பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும் அதனை பராமரிக்கும் வாய்ப்புகள் அமையும் அதன் பொருட்டு கோயில் பராமரிப்பு செலவுகளும் செய்யும் காலகட்டம்
மிகச் சிறப்பான காலகட்டமாக இருப்பதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை வழிபட சிறப்பு
கோயில்களுக்கு குலதெய்வம் கோயில்களுக்கு பராமரிப்பு செலவு செய்வது சிறப்பு
பிராமண குழந்தைகளுக்கு படிப்பு செலவு செய்ய பலவித நன்மைகள் வந்து சேரும்
Leave a Reply
You must be logged in to post a comment.